Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 9, 2011

பெண்மையை புகழும் குஷ்பு (பெண்களால் தூற்றப்பட்டவர்)

இந்த உலகில் பெண்ணாக பிறந்ததில் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வாரஇதழ் ஒன்று பெண் சாதனையாளர்கள் 2011 என்ற விருதை வழங்குகிறது. இதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட எட்டு பெண் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் திரைத்துறையில் சாதனையாளர் விருதுக்கு குஷ்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஷ்பு தவிர அருணா சாய்ராம், அஞ்சு பாபி, மாளவிகா சாருகாய், பார்வதி ஓமணக்குட்டன், வித்யா ரெட்டி மற்றும் நான்சி வெர்னிகா, அனிதா நாயர் உள்ளிட்டவர்களும் சாதனையாளர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருது கிடைத்தது குறித்து குஷ்பு கூறியதாவது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் வாழ்வில் இந்த தருணத்தை மறக்கவே முடியாது. இந்த உலகில் பெண்ணாக பிறந்ததை எண்ணி மிகுந்த பெருமை ‌கொள்கிறேன். இந்த விருதுக்காக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

குஷ்புக்கு கிடைத்த விருது குறித்து அவரது கணவர் சுந்தர்.சி கூறியதாவது, இந்த பெருமை அனைத்தும் அவரையே சாரும். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் ‌கற்றுக்கொண்டேன. நான் இந்த நிலைமைக்கு உயர முக்கிய காரணம் குஷ்பு தான் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!