புதுடில்லி : ஆந்திராவில் ஆசாத் என்கவுன்டர் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டும் விசாரணை நடத்தாதது ஏன்,இது குறித்து மார்ச் 28-ம் தேதிக்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் செர்குரிராஜ்குமார் என்ற ஆசாத் என்ற நக்சலைட் தலைவன் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் ஹேமச்சந்திராபாண்டே என்ற பத்திரிகையாளரும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர் அக்னிவேஷ், பினித்தாபாண்டோ ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஆசாத், ஹேமச்சந்திர பாண்டே ஆகியோரை , போலீசார் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். இது தனி மனித உரிமையை மீறிய செயல், இதற்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அல்தாப் ஆலம், ஆர்.எம்.லோகா ஆகியோர் இது குறித்து வரும் மார்ச் 28-ம் தேதிக்குள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment