புதுச்சேரி : ஏம்பலம் தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி, முதியவர்கள் காலை தொட்டு ஓட்டு கேட்டார். கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவான நிலையில், ஏம்பலம் தொகுதியில் அமைச்சர் கந்தசாமி, வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.
செம்பியப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குப்பம், தனிக்குப்பம் ஆகிய கிராமங்களில் நேற்று காலை வீடுவீடாக சென்று, காங்., கட்சிக்கு ஓட்டளிக்குமாறு அமைச்சர் கந்தசாமி ஆதரவு திரட்டினார்.ஒவ்வொரு வீடாக சென்ற அமைச்சர் கந்தசாமி, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கான பணம் சரியாக வருகிறதா, வேறு ஏதாவது குறை இருக்கிறதா என்று கேட்டு ஓட்டு சேகரித்தார்.
கிராமங்களில் உள்ள முதியோர்களின் காலை தொட்டு வணங்கியும் ஓட்டு சேகரித்தார். முன்னதாக, அமைச்சர் கந்தசாமி சார்பில் சீட் கேட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் தலைமையில் காங்., நிர்வாகிகள் சக்ரவர்த்தி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியனிடம் நேற்று காலை விருப்ப மனு அளித்தனர். ஏம்பலம் தொகுதியில் தி.மு.க.,வை சேர்ந்த ராஜாராமன் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதி தி.மு.க.,விற்கா அல்லது காங்., கட்சிக்கா என்று முடிவு செய்யப்படாத நிலையில், அமைச்சர் கந்தசாமியின் அதிரடி ஓட்டு வேட்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments :
Post a Comment