Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 26, 2011

ஆ.ராசாவை ஆதரிப்பேன், கனிமொழி!

புதுதில்லி, மார்ச் : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு திமுக ஆதரவளிக்கும் வரை நானும் ஆதரவளிப்பேன் என்று முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இடம்பெற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, "எதுவாக இருந்தாலும் எதிர்த்து நின்று போராடி வெற்றிபெறுவேன் என்றார்' கனிமொழி.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊகத்தின் அடிப்படையானவே. அதைத்தான் நாங்கள் தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறோம். இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நாங்கள் குற்றச்சாட்டுகளை எப்படி முறியடிக்கிறோம் என்று பாருங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்கிற கருத்தை அவர் மறுத்தார். ஊகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் அமையும் என்று எனக்குத் தோன்றவில்லை. அரசு என்ன செய்திருக்கிறது, என்ன செய்கிறது என்பவைதான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்றார் அவர்.

இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்து, அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, முதல்வர் குடும்பத்தில் பூசல் ஏற்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட கனிமொழி, "இது எல்லாக் குடும்பத்திலும் நடப்பதுதான். அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்?' என்று கேட்டார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!