வாக்காளர் அடையாள அட்டைகளில் பெயர் மற்றும் ஊர் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என்று கூறி விநியோகம் செய்யும் அட்டையில் பொறுப்பற்ற முறையில் தகவல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்.13ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலில் நிற்கின்ற கட்சிகளின் கூட்டணியில் அவ்வப்போது பரபரப்பு உருவாகி பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது.
இவையனைத்தும் மீடியாக்கள் கொண்டு வந்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதால் தேர்தல் குறித்த விஷயங்களை அறிந்து கொள்கின்றனர். ஆனால் தேர்தலில் அடிப்படையாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டை விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மிகவும் கவனக்குறைவாக நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. ஏனெனில் தவறான முறையில் அச்சிட்டு தரும் இதே அதிகாரிகள் எதிர்காலத்தில் அரசு திட்டம் சம்பந்தமாக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தும் போது ஏராளமான கேள்வியை கேட்க தவறுவதில்லை என்கின்றனர்.
விநியோகம் செய்த வாக்காளர் அடையாள அட்டையில் அரசு முத்திரை மறைந்தும், சாதாரணமாக அனைவரும் எளிதில் உச்சரிக்கும் கிருஷ்ணன் என்ற பெயரை ஆங்கிலத்தில் காரசனியன் என்றும், அவரது தந்தை பெயரான மணவாளன் என்பதை தமிழில் மாணவளகா என்றும், ஆங்கிலத்தில் மணவிலாக் என்றும், இதே ஆளின் மனைவி பெயரான சுசிலாராணி என்பதை தமிழில் சுசிலியாராணி என்றும், அவரது கணவர் பெயரை கரஸ்நயன் என்றும் அச்சிட்டுள்ளனர், என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் எவையுமே வாயில் நுழையாத வெளிநாட்டு பெயர்கள் அல்ல என்பதால் சரியாக அச்சிட்டு வழங்கியிருக்கலாம் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும். மேலும் அரசு வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையை தயாரிக்கும் அதிகாரிகள் தகுதியை பொறுத்தவரை குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவே இருக்க வேண்டும்.
2 comments :
வாக்காளர் அடையாள அட்டை என்பது
ஒரு முக்கிய ஆவணமல்லவா? அதில்
என்ன அவ்வளவு அலட்சியம்? இன்னும்
தேசிய அடையாள அட்டையும் வழங்கப்
போகிறார்கள். அதிலும் என்னென்ன
கூத்துக்கள் நடக்குமோ?
Post a Comment