கிழக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (47) என்பவர் பொழுதுபோக்காக இணையதளத்தில் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரா கேம்ப் (42) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.
பல்வேறு விஷயங்களைப் பேசியபின் தங்கள் சிறுவயது குடும்பத்துடன் பொழுதைப் போக்கிய அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒரே மாதிரியான சம்பவங்களைக் கூறினர். அப்போதுதான் சாரா சிறுவயதில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தங்கை என்பது ஜார்ஜுக்கு தெரியவந்தது.
சாரா தனது பெயரை மாற்றிக் கொண்டதால் அவரை முதலிலேயே ஜார்ஜால் அடையாளம் காண முடியவில்லை. 1975-ம் ஆண்டு இவர்களது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போது ஜார்ஜுக்கு வயது 11, சாராவின் வயது 6. ஜார்ஜ் தந்தையுடன் கிழக்கு லண்டனுக்குச் சென்றார். தாயுடன் சென்ற சாரா, திருமணமாகி எடின்பர்க் நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப்பின் இணையதளத்தின் மூலம் இவர்கள் தங்கள் உறவை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பிரிட்டன் பத்திரிகைகளில் வெளியாகி நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment