சான்பிரான்ஸ்சிஸ்கோ: முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் கேமிராவுடன் கூடிய இரண்டாவது ஐபோடை நேற்று அறிமுகம் செய்து வைத்தது.
மொபைல் போன்களுக்கு அடுத்தபடியாக இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய தகவல்தொழில்ப சாதனமாக உள்ளது ஐபேட். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது. இதன் தலைமை நிர்வாகியாக ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது ஐபோடை கேமிராவுடன் கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ளது. இதன் எடை 1.03 பவுண்ட்கள், மிகவும் மெல்லிதான தடிமனுடன் அழகிய இரு வண்ணங்களில் கறுப்பு, வெள்ளை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை 499 டாலர் முதல் 829 டாலர் வரை உள்ளது.
அமெரிக்காவில் வரும் 11-ம் தேதி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இதன் அறிமுக விழாவில் சான்பிரான்ஸிஸ்கோவில் அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் உலக சந்தை மதிப்பில் 95 சதவீதத்தினை கொண்டுள்ளது. இரண்டாவது ஐபோட்டில் காமிரா உள்ளது. அனைத்து வீடியோ பைல்களும் இவற்றில் அப்லோட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி ஸ்டீவ்ஜாப், உடல் நலக்குறைவில் இருந்த போதும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment