Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, July 24, 2015

பார்ப்பன பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்!?

ஷஹீத் கூரியூர் முகம்மது அலி ஜின்னா சாஹிப், இவரையும், இவரின் தியாகத்தையும் நம்மிள் எத்தனை பேருக்குத் தெரியும்?.தாழ்த்தப்பட்ட சிலையனாக இருந்து இஸ்லாத்தை தழுவி முகம்மது அலி ஜின்னா'வாக மாறி ஆயிரக்கணக்கான தலித் மக்களை இஸ்லாமியர்களாக மாற்றி சாதி கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்ததால் பார்ப்பன RSS பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்.

இந்தியாவில் பார்ப்பன RSS பயங்கரவாத இயக்கம், தங்கள் கொள்கைக்கு முரணாக இருந்த மகாத்மா காந்தியை கொன்றது போன்றே பிறப்பின் அடிப்படையில் மனிதர்ளை பிரிக்கும் தங்கள் சனாதன தர்மத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் விழிப்புணர்வூட்டி வரும் பல்வேறு முக்கிய பிரமுகர்களை திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது .

தமிழகத்தில் கோயமுத்தூர் திருப்பூர் மேலப்பாளையம் திண்டுக்கல் கீழக்கரை மேட்டுப்பாளையம் தென்காசி நாகூர் போன்ற இடங்களில் இந்து முன்னணி போன்ற தேசவிரோத சக்திகளால் பல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இருப்பினும் நேரடியாக RSS பயங்கரவாத இயக்க தலைவர்களால் சதித்திட்டம் தீட்டப்பட்டு கேரளாவில் இருந்து கொலையாளிகள் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் ஷஹீத் கூரியூர் முகம்மது அலி ஜின்னா சாஹிப்[1995] மற்றும் ஷஹீத் பழனிபாபா [1997 ] ஆகிய இருவர் மட்டுமே. 1991 இல் இந்த RSS பயங்கரவாதிகளின் கொலைமுயற்சியில் இருந்து சிறுவெட்டுக்காயங்களோடு தப்பியவர் கோவை S A பாஷா பாய் .
ஆட்சியாளர்களையும் அதிகாரவர்கத்தையும் பலலட்சம் தொண்டர் பலத்தையும் தன் கைக்குள் வைத்துள்ள RSS பயங்கரவாதிகள் இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறுகிராமத்தில் இருந்த 65 வயது முதியவர் கூரியூர் முஹம்மது அலி ஜின்னா சாஹிப்பை கண்டு பயந்து நேரடியாக களத்தில் இறங்கி அவரை கொலை செய்ய காரணம் என்ன ? தொடர்ந்து படியுங்கள்.
1930 இல் ராமநாதபுரம் கீழக்கரைக்கு அருகில் உள்ள பாலையேந்தல் கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சிலையன். இவர் காவல்துறை பணியில் சேர்ந்த பின்பு கூரியூரை சேர்ந்த வசந்தா என்பவரை திருமணம் செய்தார்.
தமிழ்நாட்டில் இன்றுகூட சாதிவெறி தலைவிரித்தாடுவதற்க்கு டாக்டர் ராமதாஸின் ஆதிக்க சாதி சங்கங்களின் கூட்டமைப்பே சாட்சி . இன்றும்கூட முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரங்கம் தொகுதியிலேயே இரட்டைகுவளை முறை உள்ள நிலையென்றால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை எந்தளவு அடிமைத்தனமாக கேவலமாக நடத்தியிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும் .
ஆனால் சிலையன் இந்த சாதிவெறியர்களுக்கு பணிந்து போகாதவர் .இவர் போலீஸ் பணியில் இருந்த போது ஸ்டேஷன் ஏட்டையா '' டேய் ..... ! என்று சாதி பெயரை சொல்லி கூப்பிட்டதால் அந்த ஏட்டையா கன்னத்தில் பளார் என அறைந்ததால் சில காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டார். காவல்நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட சாதிப்பாகுபாட்டை எதிர்த்ததால் அடிக்கடி பணியிட மாறுதல் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டார். ஒரு போலீசாராக இருக்கும் தனக்கே தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்தால் இவ்வளவு இன்னல்கள் என்றால் தன் சாதியை சேர்ந்த சாதாரண மக்கள் எந்தளவுக்கு துன்பத்தை அனுபவித்து இருப்பார்கள் ஆகவே அவர்களின் முன்னேற்றத்துக்காக போராடவேண்டும் என்று முடிவு செய்து போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் மனைவியின் ஊரான கூரியூருக்கு குடிபெயர்ந்தார் .
கடவுளின் பெயரால் பிறப்பின் அடிப்படையில் சாதிப்பாகுபாடு கற்பிக்கப்பட்டதால் கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய பொதுவுடைமை கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு மேடைகளில் கம்யூனிச சித்தாந்தகளை முழங்க ஆரம்பித்தார் .தன் சமுதாய மக்களுக்காக உழைத்ததினால் பலமுறை சிறை சென்றிருக்கிறார் .
சிலையன் அவர்களுக்கு 12 குழந்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்பழுக்கற்ற தலைவனாக இருந்த அதே நேரத்தில் தன் பிள்ளைகளுக்கும் சிறந்த தகப்பனாகவே இருந்தார். விவசாயத்தில் ஈட்டிய சிறுவருமானத்தை கொண்டு அத்தனை குழந்தைகளுக்கும் மிகச்சிறந்த கல்வியை கொடுத்தார் . இவர் குடும்பத்தில் டாக்டர்களும் இன்ஜினியர்களும் அதிகம் .
சிதறுண்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் நோக்கோடு 'உழுதுண்ணும் வேளாளர் சங்கம் ' என்ற சங்கத்தை நிறுவி அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டியதோடு தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படும்போது இந்த சங்கத்தின் மூலம் சாதி இந்துக்களின் மொழியிலேயே அவர்களுக்கு பதில் கொடுக்கப்பட்டது .
1980 ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் சாதி கலவரம் மூட்டப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான சிலையனை கொலை செய்ய பெரும் முயற்சி நடந்தது. இந்த கலவரத்தின்போது கம்யுனிஸ்ட் கட்சி கையாலாகாது நின்றது. காவல்துறையினர் தாழ்த்தப்பட்ட மக்களை கொடுமைக்குள்ளாக்கும் போது கட்சி உதவிக்கு வரவில்லை .உயிர் தப்பிய சிலையனையும் மற்ற தலித் தலைவர்களையும் எம்.ஜி.ஆர் அரசு மிஸா சட்டத்தில் கைது செய்தது.
1980-இல் இஸ்லாத்தை தழுவுதல்: மிஸா சட்டத்தில் சிறை பட்டிருந்த சிலையனுக்கு '' ஆட்சி அதிகாரம் பணம் செய்தி ஊடகம் படைபலம் என எல்லா பக்கபலங்களையும் பெற்றிருக்கும் இந்த கேடுகெட்ட சாதி இந்துக்களுக்கு தங்களை கட்டாயமாக அடிமையாக்கிய இந்த கொடுமையின் ஊற்று எது ? என்ற சிந்தனை தொடங்கியது .
மனு ஸ்மிருதியும் பகவத் கீதையும் பிறப்பின் அடிப்படையில் மனிதர்ளை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வருணங்களாக பிரிக்கின்றன. பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணன் அதனால் அவன் உயர்வானவன் தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன் அவன் பிராமணனை விடவும் தாழ்ந்தவன் பிரம்மாவின் இடுப்பில் இருந்து பிறந்தவன் வைசியன் அவன் சத்திரியனை விடவும் தாழ்ந்தவன் .பிரம்மாவின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் அவன் அனைவரிலும் தாழ்ந்தவன் ஆக இந்துமத வேதங்கள் கூறியுள்ள வருணங்களின் அடிப்படையில் சூத்திரனாக பிறந்து அடிமையாக்கப்பட்ட ஒருவன் அந்த மதத்தில் இருந்து கொண்டே இழிநிலையிலிருந்து விடுபட வாய்ப்பே இல்லை .

இவர் இளையமகன் சுல்தான் பாரி அவர்களின் கூற்றுப்படி ....'' சிலையனாக சிறைக்கு சென்ற என் தந்தை அங்கு திருகுரானை நன்கு படித்து முஸ்லிமாக மாறி '' முகமது அலி ஜின்னா 'வாக கூரியூருக்கு திரும்பி வந்தார் .திருமணமாகி சென்ற சகோதரிகள் உட்பட குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றுகூட்டி  '' என் குழந்தைகளே !! வறுமைக்கு இடையிலும் ஒரு தந்தையாக உங்களுக்கு நல்ல கல்வியை கொடுத்திருக்கிறேன் ,உங்களுக்கு சிந்திக்கும் அறிவு இருக்கிறது  இந்துமத வேதங்களில் நம்மை கடவுளின் காலில் பிறந்த சூத்திரன் என்று குறிப்பிட்டு கட்டாயமாக அடிமைபடுத்தி இழிவுபடுத்தி வைத்துள்ளது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு செய்யும் இந்துமத வேதங்கள் நிச்சயம் இறைவனின் வேதமாக இருக்கமுடியாது . நான் சிறையில் திருக்குர்-ஆனை படித்தேன். அதில் '' மனிதர்களில் யார் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ? என்று கூறுவதை கேளுங்கள்.

'‘மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கிறாரோ, அவர் தாம் இறைவனிடத்தில் , நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக இறைவன் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.’ (அல்-குர்ஆன் 49:13)

நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை தெளிவாக கூறியுள்ள இது இறைவனின் வசனம் தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் .அதனால் நாம் முஸ்லிமாக மாறிவிட்டேன் . நான் இந்த சத்திய பாதைக்கு மக்களை அழைக்க போகிறேன். அதற்கு முன்பாக என்னுடைய வீட்டிலிருந்து இந்த பணியை தொடங்குகிறேன் . சத்திய பாதையான இஸ்லாத்துக்கு வாருங்கள் ! '' என்று என் தந்தை எங்களிடம் கூறினார் .
என் தந்தையின் வார்த்தைகளில் அவ்வளவு உறுதி இருந்தது . அதை எங்களால் மறுக்க முடியவில்லை . திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்த சகோதரிகளின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் இஸ்லாத்துக்கு வந்த பின்பு தான் கூரியூர் கிராம மக்களிடம் இஸ்லாம் மார்க்கத்தை அறிமுகம் செய்தார் . அதுவரை கூரியூரில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது . என் தந்தையின் அழைப்பு பணிக்கு பிறகு நூற்றுக்கணக்கான கிராமமக்கள் இஸ்லாத்தை தழுவினர் . என் தந்தையின் 15 ஆண்டுகால அழைப்பு பணியில் சுமார் 40 ஆயிரம் மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்துள்ளார் ..
'' வேலூரில் ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் நடத்திவந்த தாவா சென்டர் மூலம் இவர்களுக்கு கலீமா [ வணக்கத்துக்குரியவன் ஒருவனே .அவன் தூதர் முகம்மது [ஸல்] சொல்லிக்கொடுக்கப்பட்டு அடிப்படை இஸ்லாமிய பயிற்சியும் அளிக்கப்பட்டது .பின்பு தன் சொந்த மக்களை தமிழகத்தின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கு [ மதரசாக்கள் ] அனுப்பிய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்றுவர செய்தார் .
ஆண்டாண்டுகாலமாக தங்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த தலித் மக்கள் இந்தியாவின் தென்கோடி மூலையில் சாரைசாரையாக இஸ்லாத்தை நோக்கி செல்வதை கண்ட பார்ப்பன RSS கும்பல் ஓடோடி வந்து '' ''எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ,ஆனால் இஸ்லாத்துக்கு போகாதீர்கள் '' என கெஞ்சினார்கள் . ஆரிய சமாஜம், சுத்தி மார்க்கம் மூலமாக ''தாய் மதம் திரும்புங்கள் ''என வீடுவீடாக சென்று அழைத்தார்கள் .ஒருவர் கூட கதவை திறக்கவில்லை .
அப்போது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளோடு நெருக்கமாக இருந்த எம்ஜியார் அரசு அதிகாரிகளை அனுப்பி '' உங்களுக்கு இலவச கறவை மாடுகள் அரசு நிலம் வீடுகள் தருகிறோம் ''என ஆசைகாட்டிப்பார்த்தார்கள். இவர்கள் மனம் மாறவில்லை கடைசியில் மிரட்டிப்பார்த்தார்கள் .'' உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் ''என்று ஜின்னா சாஹிப் கூறிவிட்டார் .
ஜின்னா சாஹிப் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஜமாத்தே இஸ்லாமி வேலூர் தாவா சென்டர் நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் அரசு அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால் அவர்களும் தங்கள் பணியை நிறுத்தி வைத்தனர் துவண்டுவிடவில்லை ஜின்னா சாஹிப் .தன் சமுதாயத்திற்கு நல்வழிகாட்ட* கூரியூரில் ஒரு பள்ளிவாசல் கட்டி அங்கு அந்த மக்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை அறிமுகம் செய்தார் .
தன் சிறுவயதில் ராமநாதபுரம் அக்ரஹாரத்தின் வழியே நடந்து சென்ற ஒரே காரணத்துக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட சிலையனுக்கு ஆழமான காயம் மனதில் ஏற்பட்டது பின்னாளில் ஜின்னா சாஹிப்பாக மாறியவுடன் எந்த அக்கிரகாரம் ஓடஓட விரட்டியதோ அதே அக்கிரஹாரத்தின் மையப்பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடியேறினார் .
தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகளை தனது சமுதாயம் தொடர்ந்து அனுபவிக்க கூடாது என்ற உந்துதலில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார் . ஜின்னா சாஹிப்பின் முனைப்பான பிரசாரத்தால் நாளுக்குநாள் கிராமம் கிராமமாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தனர் . இதனால் எம்.ஜி.ஆர் அரசு அவரை மீண்டும் மிசா சட்டத்தின் கீழும் பல்வேறு பொய் வழக்குகளின் கீழும் சிறையில் அடைத்தனர். சுமார் 35 வழக்குகள் அவர் மீது போடப்பட்டும் அவரின் வேகம் அதிகரித்தால் அரசு அதிகாரி தங்கள் முயற்சியை கைவிட்டனர் .
ஜின்னா சாஹிப்பின் இஸ்லாமிய அழைப்பு பணியை எம்ஜியார் அரசு மூலம் சட்டரீதியாக தடுக்கமுயன்ற RSS கும்பல் தோல்வியை சந்தித்ததால் வேறொரு வழியை கையாண்டது. சாதிரீதியான தங்களின் ஆதிக்கத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் சவப்பெட்டி தயாராவதை கண்ட RSS கும்பல் மார்ச் 18.1995 இல் ராமேஸ்வரத்தில் '' மதமாற்றம் எதிர்ப்பு மாநாடு '' என ஒன்று கூடினர் .அங்கு பேசிய அனைவருமே மதமாற்றங்களுக்கு முக்கிய காரணமே '' கூரியூர் முஹம்மது அலி ஜின்னா '' தான் என குறிப்பிட்டனர் .மாநாடு முடிந்ததும் மதமாற்றங்களுக்கு காரணமாக இருக்கும் தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் செயல் வீரர்களை அடிப்படையாக வைத்து கொலைப்பட்டியல் தயார் செய்தனர் அதில் முதல் பெயர் '' கூரியூர் ஜின்னா.
''20.4.95 வியாழன் அன்று ராமநாதபுரத்தில் இரவு தொழுகை முடித்துவிட்டு TVS சேம்ப் வண்டியில் கூரியூரிலுள்ள வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார் .இரவு 8.30 மணிக்கு கூரியூர் மசூதிக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் அடைக்கலம் காத்தான் என்ற பகுதியில் உள்ள கோவிலை நெருங்கியதும் ''அத்தா ! கொஞ்சம் நில்லுங்க .'' என்று பழக்கப்பட்ட குரல் கேட்டதும் கொஞ்சம் வண்டியை நிறுத்திய ஜின்னா சாஹிப்பை மூன்று பேர் சரமாரி வெட்டிவிட்டு ''ஓம் காளி ! ஜெய் காளி ! என ஊளையிட்டுக்கொண்டே ஓடினார்கள். வெட்டுக்காயங்களுடன் தட்டுதடுமாறி தன் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்திவிட்டு ''அல்லாஹு அக்பர் ! '' என சாய்ந்தார் பயோனியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நள்ளிரவு 12.30 மணிக்கு மலர்ந்த முகத்துடன் இறைவனடி சேர்ந்தார் .
இவர் உடலடக்கதிற்கு சாதிமத பேதமின்றி மக்கள் திரண்டதால் ராமநாதபுரத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது . தங்கள் அன்பிற்கினிய சகோதரன் RSS பார்ப்பன கும்பலால் கொலை செய்யப்பட்டத்தை கண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் வெகுண்டெழுந்துள்ளதால் பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக மதுரை இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்து கொலையாளிகள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம் போலவே இந்த கொலையிலும் நீதிமன்றத்தால் அவர்கள் தண்டிக்கப்படவில்லை .
ஜின்னா சாஹிப்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி கொலையாளிகளை ஏவிவிட்ட முக்கிய RSS பிரமுகர்கள் கைது செய்யப்படவே இல்லை. இக்கொலையில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராமநாதபுரம் RSS தலைவர் வழக்கறிஞர் குப்புராம் என்பவர் அவர் வீட்டில் வைத்து வெட்டப்பட்டார் .
இந்த வழக்கில் தாழ்த்தப்பட்டவனாக இருந்து இஸ்லாத்தை தழுவிய சகோதரன் அப்துல்லாஹ் மற்றும் ஏர்வாடி காசிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சுமார் ஏழாண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டனர் .
RSS பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டபோதும் கொலையாளிகளை விரட்டி சென்ற கோவை S A பாஷா அவர்களின் மகளைத்தான் RSS பயங்கரவாதிகளால் ஷஹீதாக்கப்பட்ட ஜின்னா சாஹிப் அவர்களின் மகன் திருமணம் செய்துள்ளார் .
ஜின்னா சாஹிப்பை வெட்டி வீழ்த்திய பார்ப்பன RSS கும்பலால் அவர் விதைத்து விட்டு போன செய்தியை வீழ்த்த முடியவில்லை .அவர் சிலையனாக இருந்த போது எந்த அக்கிரகாரத்தில்நடந்து சென்றதுக்காக ஓடஓட விரட்டி அடிக்கப்பட்டாரோ அதே அக்கிரகாரத்தில்அவர் ''முஹம்மது அலி ஜின்னா ''வாக மாறிய பின்பு அங்கு ஒரு வீடு வாங்கி குடியேறினார் .அவர் வழியில் அவர் மக்கள் அந்த அக்கிரகாரத்தில் ஒரு மசூதியே கட்டி இஸ்லாமிய அழைப்பு பணி செய்து வருகிறார்கள் .

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!