Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 6, 2011

எனக்கு எதிர்பார்ப்பு ஏதுமில்லை? A.R.R

ஆஸ்கார் விருது கிடைக்காததால் எனக்கு வருத்தம் இல்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

127 ஹவர்ஸ் என்ற ஆங்கில படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஸ்லம்டாக் மில்லினர் படத்தை இயக்கிய டேனி பாய்ல் இயக்கிய இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடலுக்காக ரஹ்மான் ஆஸ்கர் விருதுப் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் ரஹ்மான். ஆனால் அவருக்கு இந்த முறை இரண்டு பிரிவிலுமே விருது கிடைக்கவில்லை. இசையமைப்பாளர் ராண்டிக்குத்தான் ஆஸ்கார் கிடைத்தது. ஆனால் இதற்காக வருத்தப்படவில்லையாம் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "ராண்டிக்கு இந்த விருது கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். காரணம் இந்த முறை என் இசையைவிட, ராண்டியின் இசை விருது பெற வேண்டும் என்று என் மகன் அமீன் (பாடகர்) விரும்பினான். அவன் விருப்பப்படியே நடந்துள்ளது. ராண்டி விருது பெற்றதில் அமீனுக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன், என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!