Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 6, 2011

இல்லற வாழ்வை இனிமையாக தொடர!?

திருமண வாழ்க்கை பந்தம் முழுக்க, முழுக்க நம்பிக்கை அடிப்படையிலானது. தம்பதியர் தங்களது துணை மீது முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்வை இனிமையாக தொடர முடியும். கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், அமைதியான வாழ்வில் புயல் ஆரம்பிக்கும், ஆவேசத்தில் கொலையும் நிகழும்.

கள்ள உறவு தொடர்பான பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. எனினும், இப்பிரச்னையை சரியானபடி எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கும் குடும்பங்களிலேயே ஆவேச கொலைகள் அதிகளவில் நிகழ்கின்றன. குறிப்பாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கள்ள உறவு கொலைகள் அதிகம் நடப்பதாக தமிழக மேற்கு மண்டல போலீசாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கணவனோ அல்லது மனைவியோ பிறருடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் துணைக்கு மனோ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பிரச்னையை எதிர்கொள்ள தெரிவதில்லை. ஆக்ரோஷத்தில் வாக்குவாதம் முற்றி துணையை கொலை செய்து விடுகின்றனர். இவ்வாறான துயர சம்பவங்களில் மனைவியை கொலை செய்த கணவனோ அல்லது கணவனை கொலை செய்த மனைவியோ கைதாகி சிறையில் அடைபட நேரிடும்போது, பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடுகிறது.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்து தவறான நபர்களின் சேர்க்கையினால் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுவே, பெண் பிள்ளைகளாக இருப்பின், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி வாழ்க்கை பாழாகிவிடுகிறது. எனவே, கள்ள உறவு கொலைகளை தடுப்பது அல்லது தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,அலுவலகம், டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்களின் கருத்துக்களை கேட்டது. பலரும், இவ்விவகாரம், தனி நபர் ஒழுக்கம் சார்ந்தது என்பதால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்த வழி என தெரிவித்துள்ளனர்.

1 comments :

நல்ல சமூக உணர்வுள்ள பதிவு
இதற்கு முழு முதல் காரணமாக இருக்கிற
சமூக ஊடகங்கள் குறித்தும்
குடும்ப உறவுகளில் தற்போது ஏற்ப்பட்டுள்ள
புதிய சிக்கல்கள் குறித்தும்
அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது
நல்ல் பதிவு தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!