Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 20, 2011

தேர்தலுக்குப்பிறகு அரசியல் கட்சிகளின் ரகசியத்திட்டம்?

தி.மு.க., கூட்டணி ஆரம்பத்தில் அமைதியாக துவங்கினாலும், திடீரென பிரச்னை பூதாகரமானது. கூட்டணியில் இடம்பெற்றுள் முக்கிய கட்சியான காங்கிரஸ், 63 தொகுதிகள் கேட்டு அடம்பிடித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.கேட்ட தொகுதிகளைப் பெற்று விடுவதில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது. மேலும் அந்த 63 தொகுதிகள் எவை எவை என்பதையும் பட்டியலிட்டு, தி.மு.க., தலைமைக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. முரண்டு பிடித்த காங்கிரசை மிரட்டும் வகையில், தி.மு.க., உயர்மட்டக்குழு கூடி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகல் என்ற முடிவை அறிவித்தது. அதை அரங்கேற்றுவதற்காக தி.மு.க., மத்திய அமைச்சர்கள் டில்லி சென்றனர். தி.மு.க., உயர்மட்ட குழு அறிவித்ததற்கு நேர்மாறான காட்சிகள் அங்கு அரங்கேறின. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கீடு செய்தது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளும் தாரைவார்க்கப்பட்டன. பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கேட்ட தொகுதிகளாலும் உள்ளுக்குள் பிரச்னை ஏற்பட்டு, பின் சமாதானம் ஏற்பட்டது.

தி.மு.க., கூட்டணியில் இந்நிலைமை என்றால், ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க., கூட்டணியிலும் குளறுபடி ஏற்பட்டது. கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல், திடீரென 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க., தலைமை. இதனால் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். மூன்றாவது அணி அமையும் என்ற பரபரப்பும் எழுந்தது. நிலைமை பூதாகரமாவதை உணர்ந்த அ.தி.மு.க., தலைமை, கூட்டணிக் கட்சிகளை அழைத்து சமரசம் செய்தது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின், கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகள் வழங்க முடிவானது.

இரு தரப்பிலும் உள்ள அனைத்துக் கட்சிகளும், மே மாதம் 13ம் தேதி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியிலேயே முனைந்துள்ளன. அவற்றில் எந்தக் கூட்டணியிலும் முரண்பாடு இல்லை. ஆனால், மே 13ல் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தொங்கு சட்டசபை தான் அமையும் என இரு கூட்டணியிலும் உள்ள கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. அப்படி ஒரு நிலைமை ஏற்படும்பட்சத்தில், தங்கள் கையில் லகான் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அத்தனை கட்சிகளும், தொகுதியின் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், தொகுதியின் பெயர்களையும் முடிவு செய்வதில் உறுதியாக இருக்கின்றன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!