Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 6, 2011

எம்.ஜி.ஆர். ஆக முடியுமா? விஜய்!

விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்பதுதான் அவரது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை. அதனால் தடுக்க வழி தேடுகிறார்கள்.

அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம்.

எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்? விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள். விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி.

கதாநாயகர்கள் அரசியலுக்கு வருவதை சில சக்திகள் தடுக்கின்றன. அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அச்சம்தான் இதற்கு காரணம், இதையெல்லாம் மீறி விஜய் அரசியலில் குதிக்கும்போதுதான் இதற்க்கெல்லாம் விடை கிடைக்கும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!