Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 24, 2015

இண்டர்நெட் இல்லா வாட்ஸ் அப் வசதி!?

இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பை "சிம்" மூலம் பயன்படுத்தும் வசதி: இத்தாலி நிறுவனம் கண்டுபிடிப்பு.

இன்றைய நவீன கால கட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது இளைஞர்களின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவர்களுக்கு என்றே புதிய வரப்பிரசாதமாக இண்டர்நெட் இல்லாமல் ஒரு சிம் மூலமாக (what sim) வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதியை இத்தாலியைச் சேர்ந்த மேனுவல் ஜனில்லா கண்டுபிடித்துள்ளார்.. இந்த வாட் சிம்மை பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுக்கு மெஸேஜ் அனுப்பலாம். இதற்கு வை-பை வசதியோ அல்லது டேட்டா கார்டு இணைப்போ அவசியம் இல்லை.

வாட் சிம் குறித்த ரிப்போர்ட் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது சிம்மிற்கு நாம் ரீசார்ஜ் செய்யும் டேட்டா அளவிற்கே பயன்படுத்த முடியும். டேட்டா தீர்ந்துவிட்டால் பயன்படுத்த முடியாது. அதன்பின் பயன்படுத்த மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் காரணமாக நாம் பயணத்தின் போது சிரமம் ஏற்படும்..

எனவே இதற்கு மாற்றான தீர்வை வாட் சிம் என்ற புதிய சிம்மை, இத்தாலியைச் சேர்ந்த ஜீரோ மொபைல் நிறுவனம் உலகம் முழுவதும் 150 நாடுகளில் 400 மொபைல் ஆப்ரேட்டர்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிம்மை பயன்படுத்தி, யாருக்கு வேண்டுமானானும் மெஸேஜ் அனுப்ப முடியும். இருக்கும் இடத்தில் இருந்து உலகின் எந்த மூளைக்கு சென்றாலும், அதற்கு ஏற்பே வேறு நெட்வொர்க் மாறிவிடும். இதற்கு ரோமிங் கட்டணம் கிடையாது. நீங்கம் செல்லும், மாநிலம் , அல்லது நாட்டில் உங்களுக்கு எந்த சிக்னல் சிறப்பாக கிடைக்கிறதோ, அது தானாக கனெக்ட்டாகி விடும். இந்த சிம், பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாகும். தங்களது அன்பானவர்களுடன் எப்போதும் வாட்ஸ் அப்பில் இணைந்திருக்கலாம்.

வாட் சிம்மின் விலைஇந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டு என்றும் இந்திய மதிப்பில் ரூ 714 என்று  சிம்மை கண்டுபிடித்துள்ள ஜீரோ மொபைல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாட் சிம் ஆயுட் கால சிம்மாகும்.

ஆனால் இந்த சிம்மில் மெஸேஜ் மட்டுமே இலவசமாக அனுப்ப முடியும், மல்டிமீடியா மெஸேஜ்களான போட்டோ, வீடியோ, ஆடியோ பைல்களை இலவசமாக அனுப்ப முடியாது. அதற்கு நாம் தனியாக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

இருந்தபோதிலும் இதில் சில வசதிகளை அந்த சிம் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.  இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்ப முடியும். வெளிநாட்டு பண மதிப்பில் குறைந்த பட்சம் 5 பவுண்டுக்கு ஒரு ரீசாரஜ் செய்தால், 1000கிரெடிட்டுகளை பெறலாம். அதிகபட்சமாக 50 பவுண்டுகள் ரீசார்ஜ் செய்து கொண்டு 10000 கிரெடிட்டுகளை பெற முடியும்.. இதன் இந்திய மதிப்பிற்கு ஏற்ப நாமும் ரீசார்ஜ் செய்து கொண்டு கிரெடிட் பாயிண்டுகள் பெறலாம்.

Sunday, January 18, 2015

விஜய் பின்வாங்க காரணம் இதுவோ!?

பீ கே படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் படம் பிடித்துப்போனதால் இதை தமிழில் விஜயை வைத்து செய்யலாம் என்று இருக்காமல் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து  பீகே படத்தை பார்க்கும் படியும், அதை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்றும் ஷங்கர் கேட்டதாகவும் கேள்வி. விஜய்க்கு பீகே படம் பிடித்தால் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்குவாராம் ஷங்கர். இது பழைய செய்தி.

ஆனால், விஜய் படத்தை பார்த்துவிட்டு  படம் பிடித்திருந்தும் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து உள்ளார். காரணம் இதுவாக இருக்கலாம் என்று கோலிவூட்டில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.

காரணம் வேறு எதுவாக இருக்க முடியும் தீவிரவாத ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பான சங்க பரிவாரங்களின் (திரை அரங்கம் சூறை - பஜ்ரங்தள் வன்முறை வெறியாட்டம். இந்தியாவின் தீவிரவாத இயக்கங்களான RSS, VHP, பஜ்ரங்தள் போன்ற தீவிரவாத இயக்கங்கமும்பை, கல்கத்தா போன்ற பெரும் நகரங்களில் சினிமா தியேட்டர்களை உடைத்து நாசம் செய்ததுதான் விஜய் பீ கே படத்தை கை விட காரணமாக இருக்கலாம் என்பது நம் கருத்து.

சரி நாம் விசயத்துக்கு வருவோம் இப்படத்தை எதிர்க்க காரணம்தான் என்ன.

பீகே சினிமாவை சங்பரிவார்கள் எதிர்க்க காரணம் போலி சாமியார்களின் முகத்திரையை அது கிழித்து ஏறிகிறது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமான கரணம் அது அல்ல.

சாதாரணமாகவே இந்திய சினிமாக்களில் பாகிஸ்தானிகள் என்றால் அது காட்டு மிராண்டிகள் தீவிரவாதிகள், மனுஷத்துவம் இல்லாதவர்கள் என்ற ஒரு மாய பிம்பத்தை சினிமா துறையினர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். அதை முதல் முதலாக உடைத்து எரிகிறது பீகே சினிமா.

நாயகன் பாகிஸ்தான் இளைஞன் (கவிஞன்) ஒருவனை வெளிநாட்டில் வைத்து காதலிக்கும் நாயகி தன பெற்றோரிடம் அந்த ஆசையை கூற பெற்றோர்கள் தங்களின் ப்வெரைட் சாமியாரிடம் அதை எடுத்து சொல்ல பாகிஸ்தானிகள் நமது எதிரிகள் அவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள் நீ அவனை நம்ப வேண்டாம் அவன் உன்னை ஏமாற்றி விடுவான் என்று சாமியார் ஆருடம் சொல்லவும் அது போலவே நடந்தும் விடுகிறது. படத்தில் தேவை இல்லாததாக நாம் கருதும் இந்த பதினைந்து நிமிட காட்சிதான் இந்த சினிமாவுக்கு உயிர் நாடியாக உள்ளது.

படத்தின் முடிவில் தான் சொன்னது பிரகாரம் தான் பாகிஸ்தானி நாயகியை ஏமாற்றி விட்டு விட்டு ஓடியதாக பெருமை பேசும் போலி சாமியாருக்கு ஏமாற்றியது பாகிஸ்தானி நாயகன் இல்லை இந்திய நாயகிதான் என்ற உண்மையை  பீகே எடுத்து கூறும் காட்சி மற்றும் பாகிஸ்தான் எம்பஸி பெண்களின் கண்ணியமான டெலிபோன் உரையாடல்கள் மற்றும் நாயகனின் நாயகிக்கான காத்திருப்பு என பாகிஸ்தானிகளை இதுவரை எந்த இந்திய சினிமாவும் காட்டாத ஒரு கோணத்தில் இந்த பீகே காண்பித்ததே காவிகளின் கோபத்திற்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன்.

பீகே என்னை ரொம்ப பாதிச்சிட்டு போல இருக்கப்பா.

Saturday, January 10, 2015

கணினி அடிக்கடி பாதிப்பு சரிசெய்ய!?

கணினியில் ஏதாவது பிரச்சனையா, என்னமோ ஆயிடுச்சு என்று பதறி அடித்துக்கொண்டு கம்ப்யூட்டர் பொறியாளரை அழைக்காமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். ஒரு சிறிய பிரச்சனைகளுக்காக ரிப்பேர் செய்பவரை அழைத்தால், இது தான் சந்தர்ப்பம் என உங்களிடம் கறக்க முடிந்த அளவு கறந்துவிடுவார்.

எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்கள் கணினியில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். ரீஸ்டார் செய்தும் பிரச்சனை நீடித்தால், இதற்கு முன் கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், சரியான அப்டேட் செய்யப்படாத சமயங்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.

கணினியில் அடிக்கடி ஏற்படும் சில பாதிப்புகளும் அதை சரி செய்யும் முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணினி வேகம் குறைவாக இருக்கின்றது: ஓஎஸ் இருக்கும் ஹார்டு டிரைவ் ஸ்பேஸ் கனிசமான அளவு காலியாக இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாத சமயத்தில் ஸ்பேஸ் காலி செய்வது அவசியமாகின்றது. மேலும் temp பைல்களை அடிக்கடி நீங்கவேண்டும். அதற்கு ccleaner மென்பொருள் உபயோகிக்கலாம்.

நீண்ட நேரம் எடுக்கும் பதிவிறக்கங்கள்: நீங்கள் அதிவேக இன்டெர்நெட் உபயோகப்படுத்தியும் குறைவான வேகத்தில் பைல்கல் டவுன்லோட் ஆகும். முதலில் உங்கள் இன்டர்நெட்டின் வேகத்தை speedtest.net என்ற இணையதளத்தின் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஸ்பீட் குறைவாக காட்டினால் இன்டர்நெட் நிறுவனம் வழங்கிய கனெக்ஷன் குறைபாடு. அதேவேகம் காட்டியும் டவுன்லோட் ஆகவில்லையெனில் உங்கள் கணினியில் idm டவுன்லோடர் உபயோகியுங்கள்.

ரீஸ்டார்ட்டிங்: சில ஹார்டு வேர் பிரச்சனைகளை சரி செய்வது சிரமமாக தான் இருக்கும். கணினி அடிக்கடி ரீஸ்டார்ட் ஆவதற்கு முக்கிய காரணம் வைரஸ், ஆட்வேர், அதிக படியான சூடாக இருக்கலாம். கணினியில் விசித்திர சத்தம் கேட்டால் அதை கழற்றி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

பாப் அப்: இன்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தாலும் கணினியில் நிறைய விளம்பரங்கள் தெரிகின்றதா, அப்படியானால் உங்க கணினியில் ஆட்வேர் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், இதை சரி செய்ய நிறைய டூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிசி ஸ்பீடு அப், பிசி ஸ்பீடு ப்ரோ, இவைகளில் எதையாவது பயன்படத்தலாம்.

கூகுள்: ப்ரவுஸர் ஹைஜாக் செய்பவர்கள் உங்களது தகவல்களை கூகுள் தேடல்களின் மூலம் சுலபமாக களவாட முடியும், இதை தவிற்க ரியல்-டைம் ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது சிறந்தது.

வைபை: அடிக்கடி வைபை கனெக்ஷன் டிஸ்கனெக்ட் ஆனால் கணினி வைபை வட்டத்தில் இருக்கின்றதா என்பதை பாருங்கள், பின் கணினியின் வயர்லெஸ் டிரைவ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், single click solve internet problem மென்பொருள்களை உபயோகப்படுத்துங்கள்.

இன்டெர்நெட் பாதுகாப்பு: இணைய பாதுகாப்பு சான்றிதழ் சரி இல்லை என்ற பிரச்சனையா, பழைய கணினிகளில் சிமோஸ் பேட்டரி சரியாக வேலை செய்யாததால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது, அதை சரி செய்ய கணினியின் நேரம் மற்றும் தேதியை சரியாக வைத்தாலே போதுமானது.

ப்ரின்டர்: ப்ரின்டர் அப்டேட் சரியாக இருக்கின்றது, போதுமான பேப்பர் மற்றும் டோனர் என அனைத்தும் சரியாக இருக்கும் போதும் ப்ரின்ட் ஆகவில்லை என்றால், ப்ரின்டரை முழுமையாக கழற்றி மாட்டவும், அதன் பின் ப்ரின்டர் ஆஃப்லைன் சரி பார்க்க வேண்டும்.

ஈமெயில் அட்டாச்மென்ட்: சில சமயங்களில் ஈமெயில் அட்டாச்மென்ட் டவுன்லோடு ஆகவில்லை என்றால், ஈமெயில் ஃபைல் எம்மாதிரியானது என்பதை பாருங்கள், அதன் பின் ஃபைல் எக்ஸ்டென்ஷனை ரீனேம் செய்தால் வேலை முடிந்தது.

மென்பொருள்: அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் புதிய கணினியில் வேலை செய்யாவிட்டால் ஜாவா மற்றும் ப்ளாஷ் ஸ்க்ரிப்ட்கள் தான் முக்கிய காரணமாக இருக்கும், இவைகளை அனைத்து பிரவுஸர்களும் இன்ஸ்டால் செய்ய உதவும்.

Saturday, January 3, 2015

பீ கே சொல்லும் செய்தியும் சர்ச்சையும்!?

3 இடியட்டுக்கு பிறகு அதே இயக்குனர் மற்றும் நாயகனை கொண்டு வெளிவந்து திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் பி கே. படம் சொல்லும் செய்தியும், சர்ச்சைகளும்.

வேற்று கிரகத்திலிருந்தது பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே (அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, 'கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை' என்கின்றனர் எல்லோரும். 

ஒரு கடைக்கு செல்கிறார். 

'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' 

கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே. 

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். 

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 

'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்' - இது நாயகி.

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'.

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் சிறுவனொருவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார். 

அங்குதான் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை, அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது, தவறாக கதாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை பிகே வெளிப்படுத்தி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை விளக்குகிறார்.

மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் இயக்குனர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?' என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது, தாலிபானிய மனப்போக்கு கொண்டவர்களை பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. 

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைக்க இடையில் இந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' - சரியான கேள்வி தான். 

இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்றும், மக்கள் பார்க்க கூடாதென்றும் சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்துவது கவலைக்குரியது. இன்று நாட்டின் சில இடங்களில் திரையரங்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. சமயங்களில் சொல்லப்படாத பழக்கங்களை விட்டொழிப்பது தான் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு வழிவகுக்கும். இதற்கு எந்த மதமும்/மார்க்கமும் விதிவிலக்கல்ல.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!