Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 15, 2011

உலக வரலாற்றையே மாற்றியமைத்த இ.தளம்?

சான்பிரான்ஸிஸ்கோ : அரசுக்கெதிராக மக்கள் கிளர்ச்சி, மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி, அதிபரை பதவிவிலக்கோரி மக்கள் கிளர்ச்சி ‌என ஆப்ரிக்‌கா, மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்கியது சமூக வலை தளமான டிவீட்டர். இந்த சமூக வலை தளம் துவங்கி தனது 5-வது ஆண்டினை நிறைவு செய்கிறது.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி துவங்கப்பட்டது டிவீட்டர். இன்று உலக தலைவர்கள் தங்களது கருத்துக்கள், சிந்தனைகளை பரப்ப சிறந்த இணையதளமாக டிவீட்டரை பயன்படுத்துகின்றனர். தற்போது 200 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் டிவீட்டரை பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. தினமும் 140 மில்லியன் வாசகர்கள் 140 கேரக்டர்களில் குறுந்தகவல்களை டிவீட்டரில் பயன்படுத்துகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு 25மில்லியன் மக்கள் டிவீட்டரை பயன்படுத்தியுள்ளனர். 100மில்லியன் நிறுவனங்கள் டிவீட்டரில் கணக்கு தொடங்கியுள்ளன. அமெரிக்கா அதிபர் ஒபாமா ‌தொடங்கி, இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பிளாக்குகள் வாயிலாக தங்களது கருததுகளை வெளியிட டிவீட்டர் சமூக வலைதளம் உதவுகிறது.

சான்பிரான்ஸிஸ்கோ நகரைச் சேர்ந்த ஜாக்- தூர்சே என்பவரின் மூளையில் உதித்தது டிவீட்டர் என்ற சமூக வலை தளம். இதன் இணை நிறுவனரும் இவரே அமெரிக்காவின் ஒடியோ மாகாணத்தில் போடோகேஸ்டிங் நிறுவனத்தில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்த போது, சக ஊழியர்களான பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ‌டிவிடர் என வலைதளத்தினை துவக்கினர். பின்னர் இத‌னை கடந்த 2007-ம் ஆண்டு டிவீட்டர் என பெயரிட்டனர். இன்ற உலக நாடுகளில் டிவீட்டரின் சமூக வலைதளத்தின் வாயிலாக வெளிவரும் கருத்துக்களால் தான் எகிப்து, ஓமன், ஏமன், அல்ஜீரியா, துனீசியா,லிபியா போன்ற நாடுகளில் அரசுக்கெதிராக புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாயின. இதனாலேயே மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் முன்பே சில நாடுகள் இணையதளத்தினை முடக்க முயன்றன.

தற்போது சீனாவில் மல்லிகை புரட்சி துளிர்விட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களும் மூலக்காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையில், பிரபல பாப்பாடகர் லேடி கஹா தனது டிவீட்டர் கணக்கில் 8.78 மில்லியன் நண்பர்களை இணைத்துள்ளார், இது குறித்து டிவீட்டர் நிறுவனர்கள் ஜாக்தூர்சே, பிஸ்ஸ்டோன், ஈவான் வில்லியம் ஆகியோர் தெரிவிக்கையில், டெக்ஸ்ட் மெ‌சேஸ்களை பரிமாறிக்கொள்வதற்காக வேடிக்கையாக டிவீட்டரை துவங்கினோம். ஆனால் இன்றுடன் கடந்த 5ஆண்டுகளில் உலகளவில் பிரபலமடைந்துள்ளது. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் போது அந்நாட்டு மக்களிடம் உடனுக்குடன் தகவல்களை பெற பேரூதவியாக இருந்தது. சர்வாதிகார ஆட்சியினால் இருண்டு போய்கிடந்த நாடுகளுக்க, ஜனநாயகத்தின் திறவுகோலாக டிவீட்டர் இருந்துள்ளது என்றனர். தற்போது டிவீட்டரின் தலைமை நிர்வாகியாக ஈவான் வில்லியம் ,இணை நிர்வாகிகளாக, பிஸ்ஸ்டோன், ஜாக்தூர்சே ஆகியோர் உள்ளனர்.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!