Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 21, 2011

வை.கோ.வுக்கு ஆதரவு கரம் நீட்டும், கி.வீரமணி

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உங்களுக்கு இழைக்கப்பட்ட "பொடா' கொடுமையை அரசியல் காரணமாக நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், இன உணர்வுள்ள நாங்கள் என்றும் மறந்ததில்லை. சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பது இயல்பானதே.

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை சும்மா இருப்போம் என்ற நிலைப்பாடு சரியானதுதானா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். ம.தி.மு.க.வின் எதிர்காலத்தைப் பற்றி உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதையோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என்றாலும் தங்களது அரசியல் பாதையை தீர்மானியுங்கள். தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூட சொல்ல மாட்டேன். தனித்தனி அரசியல் கட்சிகளானாலும் தாய்க் கழகமான தி.மு.க.வின் கொள்கைகளும், லட்சியங்களும், ம.தி.மு.க.வின் லட்சியங்களும் ஒன்றுதான். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க வேண்டும்.

எனவே, தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். நிதானமாக யோசியுங்கள். தோழர்களுடன் கலந்து துணிந்து முடிவெடுங்கள். ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி அலட்சியப்படுத்தும் ஜெயலலிதா, தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக்கூடும் என்பதையும் எண்ணிப்பாருங்கள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களோ இல்லாமல் விடுக்கப்படும் வேண்டுகோள் இது. தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். நாம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்க கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள்' என்று கி. வீரமணி கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!