Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 15, 2011

வேகம் குறைந்த டோனி?

இந்திய அணியில் அறிமுகமான காலத்தில் தோனி அதிரடியாக பேட் செய்தார். கொஞ்சம் கூட கருணை காட்டாமல் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். உதாரணமாக, தனது 5வது ஒரு நாள் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். பின் 2005ல் இலங்கைக்கு எதிராக 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்தார். கீப்பிங்கிலும் அசத்த, இந்தியாவின் "கில்கிறிஸ்டாக' போற்றப்பட்டார். தொடர்ந்து திறமை காட்ட, அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 2007ல் இந்திய அணிக்கு "டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத் தந்தார். டெஸ்ட் அரங்கில் அணியை "நம்பர்-1' இடத்துக்கு கொண்டு சென்றார்.

இப்படி அசுர வளர்ச்சி கண்ட இவர், சமீப காலமாக பேட்டிங்கில் ஏமாற்றுகிறார். இவரது பழைய ஆட்டத்தை தற்போது காண முடியவில்லை. தனது பேட்டிங் "ஸ்டைலையே' மாற்றி விட்டார். பந்தை அங்கும் இங்கும் தட்டி விட்டு ஒன்று, இரண்டு ரன்களாக எடுக்கிறார். கடந்த 10 ஒரு நாள் போட்டிகளில் ஒரு முறை கூட அரைசதம் கடக்கவில்லை. கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக தம்புலாவில் நடந்த போட்டியில் 67 ரன்கள் எடுத்தார். விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை பெரிதாக குறை சொல்ல முடியாது. கடந்த ஒரு ஆண்டில் 28 போட்டிகளில் 28 "கேட்ச்', 8 "ஸ்டம்பிங்' செய்து திறமை நிரூபித்துள்ளார்.

இம்முறை உலக கோப்பை தொடரில் தோனி அதிரடியாக ஆட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டிருந்தார். இதனை பின்பற்றி மீண்டும் பேட்டிங்கில் கலக்க வேண்டும். இவர் சுதாரித்திருந்தால், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரிவை ஓரளவுக்கு தடுத்திருக்கலாம். வரும் போட்டிகளில் தோனி வாணவேடிக்கை காட்ட வேண்டும்...அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கேற்ப, வரும் 20ம் தேதி சென்னையில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் தோனி அசத்துவார் என நம்புவோம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!