மொஹாலியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரை இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் பெருமளவு குவிந்து மோதல் நிகழ்ந்த சம்பவத்தைப் போலவே மும்பையிலும் நிகழ வாய்ப்புள்ளது. ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் இருக்கைகள் குறைவாகவே உள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான 40 பெட்டிகளில் பெரும்பாலானாவை ஏற்கனவே சராசரியாக ஒரு பெட்டி ரூ 3.75 கோடி என்ற அளவில் விற்றுவிட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் 15 பேர் வரை அமரலாம்.
ரிலையன்ஸ் நிறுவனம்தான் அதிக பெட்டிகளை வாங்கியுள்ளது. ரூ 11 கோடிக்கும் அதிகமாகக் கொடுத்து 3 பெட்டிகளை வாங்கியுள்ளது. எஸ்ஸார் இன்டஸ்ட்ரீஸ், கிங்ஃபிஷர், ஐடியா, பஜாஜ், டாடா கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இதர பெட்டிகளை வாங்கியுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பெட்டிகளின் விலையே இறுதிப் போட்டி டிக்கெட்டுக்கு அதிக தேவை இருப்பதைக் காட்டுகிறது.
பொதுமக்களுக்கு குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்படுகின்றன. வான்கடே ஸ்டேடியத்தில் 32,000 பேர் வரை அமரலாம். ஆனால் 4000 டிக்கெட்டுகள் மட்டுமே சாதாரண பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த இருக்கைகளில் 12.5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment