ShareThis

Powered by Blogger.
போப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடு: ஓர் ஆண்டு நிறைவடைந்தும் நீதி கிடைக்கவில்லை.//.நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் – ‘பிரதமர் பதவிக்கு நிறைய பேர் உள்ளனர்.//.லஞ்சம்:கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு 3 1/2 ஆண்டு சிறை.//. ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு :காங்கிரஸ் நாளை முடிவு.//காற்றுப்போன பலூனாக காவி அரசியல்.//. கட்சித் தலைவர்களின் படங்களை ஒட்டியிருந்த 7 கார்கள் பறிமுதல் .

இந்திய ராணுவ உளவுத்துறையில் கரும்புள்ளி கைது?

>> Monday, June 4, 2012

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் உளவுத்துறை முக்கிய யூனிட்டில் இருந்து ரகசிய விவகாரங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவரை பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறது.

ராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிவதாசன். இவர் சொந்த மாநிலம் கேரளா. துபையில் உள்ள ஒரு உறவினர் மூலம் பாக்., ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டை அணுகியுள்ளார். ரகசிய தகவல்கள் தருவதாக ஒப்புக்கொண்டு பெரும் பணமும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இது உளவு வருவாய்பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிவதாசன் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இவரை இன்று அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரிடம் இருந்து சிடி.,க்கள், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்பறபட்டுள்ளன. இந்த விசாரணை நடத்தப்படாமல் இருந்திருந்தால் இது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கும்.

கூடுதல் உளவுத்துறை அதிகாரி கூறும்போது: தொழில்நுட்பம் அனைத்தும் பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் நடந்திற்குமானால் போர் மூளும் அபாயமும் உண்டு என்றார், மேலும் சிவதாசன் ஆர் எஸ் எஸ்" ன் உறுப்பினர் என்பது குறுப்பிடதக்கது என்றார்.

Read more...

உறக்கத்தில் கனவு வரலாம் உறக்கமே கனவாகிவிடுகிறதா?

>> Sunday, June 3, 2012

உறக்கத்தில் வருவது கனவாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறக்கமே கனவாகி விடுகிறது.

என்னதான் படுத்துப் புரண்டாலும் உறக்கம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை என்ற புலம்பும் பலரைக் காணலாம்.

உடலில் சோரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய சுரப்பிகள்தான் உறக்கத்திற்கு உதவுகின்றன. இவை குறைவாக சுரந்தாலோ, சுரப்பது தாமதப்பட்டாலோ உறக்கம் வருவது பாதிக்கப்படுகிறது.

இதற்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்., இரவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பார்க்கலாம்.

உணவு சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான பால் அருந்தலாம். இரவு உணவில் கோதுமையால் ஆன உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.

ஜீரணத்திற்கு கடினமான உணவுப் பொருட்களை தவிர்த்துவிட்டு காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை தேர்வு செய்து சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் தூக்கம் எளிதாக வரும்.

Read more...

முதல் மூன்று இடங்கள் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள்!!

>> Saturday, June 2, 2012

நியூயார்க்: அமெரிக்காவில் எழுத்து கூட்டு போட்டி (`ஸ்பெல்லிங்' போட்டி) பிரபலமானது. இந்த ஆண்டு நடந்த போட்டியில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் முதல் 3 இடங்களை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் 8-வது கிரேடு படித்து வரும் 14 வயது மாணவி சினிக்தா நந்திபதி, ஒரு பிரெஞ்சு வார்த்தையை சரியாக எழுத்துக்கூட்டி எழுதி தேசிய சாம்பியன் பட்டம் (முதலிடம்) கைப்பற்றினார்.

இதற்காக இவருக்கு ரூ.221/2 லட்சம் மதிப்பிலான பரிசு, கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும். இரண்டாம் இடம், புளோரிடாவில் படித்து வரும் 14 வயது ஸ்டுதி மிஷ்ராவுக்கும், மூன்றாம் இடம் நியூயார்க்கில் படித்து வருகிற 12 வயது அரவிந்த் மகாம்களி என்பவருக்கும் கிடை த்துள்ளது.

தேசிய அளவில் 278 பேர் கலந்து கொண்ட போட்டியில் இந்த 3 பேரும் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

செல்போன் ரோமிங் கட்டணத்துக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!

>> Friday, June 1, 2012

புதுடெல்லி: இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.

தேசிய தொலைதொடர்பு கொள்கை 2012 என்ற இப்புதிய கொள்கைக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செல்போன் சேவைகளை எளிமைப் படுத்தும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற்போல தரமான சேவைகளை வழங்குவதையும் இப்புதிய கொள்கை உறுதி செய்கிறது என்று அமைச்சர் கபில் சிபல் ஒருவர் கூறினார்.

தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த செல்போன் சந்தாதாரர் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது வரும் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு மாநிலத்திற்கு சென்றால், அங்கு ‘மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி’ எனப்படும் ஒரு நெட்வொர்க்கிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் போது அதே செல்போன் எண்ணை தரமாட்டார்கள். இந்த நிலை, புதிய தொலை தொடர்புக் கொள்கையின் மூலம் மாற இருக்கிறது.

Read more...

தமிழகத்தை விட்டு ஓட்டம் பிடித்த காதலில் சொதப்புவது எப்படி நடிகை

>> Thursday, May 31, 2012

சமீபத்தில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, பெரிய நடிகையாகி விட்டோம் என்ற மிதப்பில், பேஸ்புக்கில் தமிழர்களையும், தமிழகத்தையும் தரக்குறைவாக எழுதினார் நடிகை தன்யா.

சென்னை மக்களை பிச்சைக்காரர்கள்' என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்திருந்தது. கர்நாடகா விடம் காவிரி தண்ணீர், மின்சாரம் தருமாறு தமிழகம் பிச்சை கேட்டது என விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கேட்டு முகாமிட்டிருந்த அவரது கருத்துக்களைப் படித்த தமிழகத்தைச் சேர்ந்த பலரும், பேஸ்புக்கில் நடிகை தன்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, பயந்து போய், பேஸ்புக்கில் மன்னிப்பு கோரினார்.

இனிமேலும் தமிழகத்தில் இருந்தால் பிரச்னை ஏற்படும் என்று பயந்து போய், இரவோடு இரவாக சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருவுக்கு தப்பி ஓட்டம் பிடித்தார். பெங்களூரு வந்த பின், இனிமேல் நான் தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன். தமிழ் சினிமா உலகை விட்டு விலகுகிறேன். தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்கிறேன். சென்னைக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையறிந்த பெங்களூருவைச் சேர்ந்த சில தமிழ் அமைப்புகள், நடிகை தன்யா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கருத்து தெரிவித்துள்ளன. இதை கேள்விப்பட்ட அவர், போலீசிடம் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தமிழ் அமைப்புகள், ‘’தமிழகம், காவிரி நதி நீரில் தனக்குரிய பங்கைத் தான் கேட்கிறதே தவிர, பிச்சை கேட்கவில்லை. இது தெரியாமல், காவிரி நீரை தமிழகம் பிச்சை கேட்கிறது' என்று கூறியிருப்பது தமிழர்களிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் எந்த காலகட்டத்திலும் கர்நாடகாவிடம் மின்சாரம் கேட்டதில்லை. தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்சார நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவுபடி மின்சாரம் வழங்கி வருகிறது
.
பெங்களூருவில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது, கர்நாடக அணி இரண்டாவது இடத்துக்கு வந்த போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முரண்டு பிடித்தனர். அவர்களிடம் எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்று தமிழக அணி கெஞ்சவில்லை.

இது போன்று உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியுள்ளது, அவரது ஆணவத்தைக் காட்டுகிறது.இனிமேல், தமிழ் சினிமா படங்களில் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என, தமிழ் திரைப்பட உலகமும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தன்யா, பெங்களூருக்கு ஓடினார். அதை மூடி மறைக்கவே, தமிழகத்துக்கு செல்ல மாட்டேன், தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்’’ என்கின்றனர்.

Read more...

சி பி எஸ் இ தேர்வில் சாதனை! இந்தியாவிலே முதலிடம்!!

>> Wednesday, May 30, 2012

இம்பால்: மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

முஹம்மது இஸ்மத் சி.பி.எஸ்.இ +2 தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்களை (99.6%) பெற்றுள்ளார். இவர் மணிப்பூர் மாநிலம் தவ்பால் மாவட்டத்தில் லிலாங்கில் Haoreibi MayaiLeikai என்ற ஊரைச் சார்ந்தவர். இவரது தந்தை மவ்லானா பஸீருர் ரஹ்மான் ப்ரமைரி மதரஸா ஆசிரியர் ஆவார். தாயார் இஸ்மத்தின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.

7 சகோதரிகளை கொண்ட இஸ்மத் குடும்பத்தில் கடைசி நபர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும் இஸ்மத் படிப்பில் கெட்டிக்காரர். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா?இவர் வசிக்கும் கிராமத்தில் தினமும் 2 அல்லது 3 மணிநேரமே மின்சாரம் இருக்கும். இதனால் அவர் தனது பெரும் பகுதி நேரத்தை பள்ளிக்கூடத்திலேயே கழிப்பார். தினமும் 8 to 10 மணிநேரம் படிப்பார்.

இவர் ஸெனித் அகாடமியில் பயின்று வந்தார். இஸ்மத்துக்கு +2 பயிலத் துவங்கும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன் ஃபீஸ் கட்ட இயலாத சூழல் இருந்தது அவரது நிலைமையை புரிந்துகொண்ட ஸெனித் அகாடமியின் செயலாளர் எஸ்.எம்.சிங், கட்டணத்தை செலுத்தியுள்ளார். மேலும் அவருக்கு படிப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இஸ்மத் உடல்ரீதியாக பலவீனமானவர் என்பதால் நீண்ட படிப்பதையும் அவர் கைவிடும் சூழல் உருவானதாக எஸ்.எம்.சிங் கூறுகிறார்.

இவரது தந்தை கூறுகையில்,இஸ்மத்தின் பலவீனமான உடல்நிலையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையும் கல்வி கற்க தடைக் கற்களாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மகன் இத்தகைய தடைகளை தாண்டி வெற்றியை ஈட்டியுள்ளதற்கு உதவிய அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக கூறினார்.

இஸ்மத் டெல்லியில் உள்ள ஸ்டீஃபன் கல்லூரியில் பயில விரும்புகிறார். இயற்பியல்(பிசிக்ஸ்) பாடத்தை பயின்று விஞ்ஞானியாக மாறவேண்டும் என்பதே இஸ்மத்தின் நோக்கமாகும். மேலும் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவேண்டும் என்பதும் அவரது ஆர்வமாகும்.

ஸெனித் அகாடமி அவரது அடுத்த கட்ட படிப்பிற்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. லிலாங் தொகுதி எம்.எல்.ஏவும் மாநில விவசாய அமைச்சருமான முஹம்மது அப்துல் நாஸிர் ரூ.1,11,111 பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.

இஸ்மத் தனது வெற்றியின் சூத்திரமாக கூறுவது என்னவெனில், “ஒருவர் தனது ஆசையை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி அவரது நடவடிக்கைகள் அமையவேண்டும். ஆடம்பரமாக நவநாகரீகமாக வாழ்வதை விட எளிமையாக வாழ்வதிலும், அதிகமாக சிந்திப்பதிலும் ஒருவர் கவனம் செலுத்தவேண்டும். ஒரு மனிதன் தீர்மானித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே.” என்றார்.!

Read more...

உலக சந்தையில் உடல் (HUMAN) உறுப்புகள்! உலக சகாதார நிறுவனம்!?

>> Tuesday, May 29, 2012

உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது. அதிலும் மனிதனின் சிறுநீரகம் கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்பத்ற்கு என்றே உள்ள வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவிட்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் 3,200 ரூபாய் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சிறுநீரகத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லியூ நோயல் கூறுகிறார்.

Read more...

கோடை காலத்தில் உடலை குளிர்விக்க இதோ டிப்ஸ்!!

>> Monday, May 28, 2012

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.

அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Read more...

விஜய் மீது ஏன் இந்த கொலவெறி...!?

>> Saturday, May 26, 2012

"துப்பாக்கி" திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில்

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.26-03-2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை
செயல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி கொடுத்துள்ள புகாரில் “ இவ்வாறாக, நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை

கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குறறம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது

அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ‘துப்பாக்கி’ திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் இத்திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை முழுமையாக பின்பற்ற வேண்டும்

என்றும் பசுமைத் தாயகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். அஜித் நடித்த அசல் படத்திலும் இதேபோல் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அஜித் படத்திற்கு வராத பிரச்சனை விஜய் நடித்துள்ள படத்திற்கு வந்துள்ளது.

அஜித்தை கண்டுகொள்ளாத சட்ட பிரச்சனை, விஜய் மீது மட்டும் ஏன் இந்த கொலவெறி....? (படத்திலிருந்து சிகரெட் பிடிக்கும் காட்சியை நீக்கிய இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஒரு "ஒ" போடுவோம்)

Read more...

குரு குலத்தில் குமரிகளுடன் கும்மாளம்!!

>> Thursday, May 24, 2012

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

சுவாமி நாராயண் என்ற மதப் பிரிவைச் சேர்ந்த ஆனந்த் சொரூப்தாஸ் குரு குலம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மதப் பிரிவின் விதிப்படி பெண்களின் முகத்தை சாமியார்கள் நேருக்கு நேர் பார்க்கக் கூடாதாம். மேலும் பெண்களை தனிமையிலும் சந்திக்கக் கூடாதாம். ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்ட ஆனந்த் சொரூப்தாஸ் உபதேசமெல்லாம் மக்களுக்குத்தாம் தனக்கு இல்லை என நிரூபித்துள்ளார்.

நேற்று இரவு ஆனந்த் சொரூப்தாஸ் ஒரு இளம் பெண்ணுடன் தனது அறையில் தனிமையில் இருப்பதாக மாள்வியா நகர் காவல் நிலையத்திற்கு ரமேஷ் பாய் என்பவர் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.

சாமியாரின் கதவைத் தட்டி திறக்கச் செய்தனர். அப்போது உள்ளேயிருந்து தாஸும், 26 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும் வெளியே வந்தனர். இருவரையும் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றபோது குருகுலத்து மாணவர்களும், சீடர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து சாமியாரையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சம்பந்தப்பட்ட பெண் கம்ப்யூட்டர் ஆசிரியையாம். குருகுலத்தில் பணியாற்றி வருகிறார். இருவரையும் கைது செய்த போலீஸார், குருகுலத்தில் பியூனாக பணியாற்றி வரும் ஜிதேந்திர தொபாரியா என்பவரையும் கைது செய்தனர்.

சாமியார் மற்றும் மற்ற இருவர் மீதும் மக்களின் மத நம்பிக்கையை பாதித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP