ஷியாம்சுந்தர் (ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி பி.இ. மாணவர்)
முதல் முறையாக மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். நிறைய மக்கள் நலத் திட்டங்களை செய்துள்ள தி.மு.க அரசுக்கு ஓட்டுப் போடுவதா, ஆட்சி மாற்றம் தமிழகத்துக்கு நல்லது என்பதால் அ.தி.மு.க-வை ஆதரிப்பதா என்பதில் குழப்பமாக உள்ளது. எனினும் தேர்தலில் வெற்றி பெற்றவர் யாராக இருந்தாலும் நேர்மையாக, லஞ்சத்துக்கு ஆசைப்படாதவராக இருக்க வேண்டும்.லோகேஷ் (எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டி ஆப் இன்ஜினீயரிங் மாணவர்) அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்பதே நாட்டை சுரண்டத் தான் என்பதால் தேர்தலில் ஓட்டுப் போடுவது பற்றி எனக்கு பெரியதாக மகிழ்ச்சி இல்லை. எனினும் வாக்களிப்பது இந்தியக் குடிமகனின் கடமை என்பதால் பாட்டாளி மக்கள் கட்சி அல்லது தி.மு.க-வுக்கு வாக்களிப்பேன் என்றார்.
தீபிகா (ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி பி.இ. மாணவி) முதல் முறையாக வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற காத்திருக்கிறேன். தேர்தலில் வாக்களிக்காமல் ஒருவர் இருந்தால் அதை ஜனநாயகக் குற்றமாக கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றக் கூடிய நலத் திட்டங்களை தீட்டும் அரசாங்கமே நாட்டுக்குத் தேவை, இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறியாக்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை.
0 comments :
Post a Comment