Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 11, 2011

பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை?

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன. வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.

உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது. அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும். கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும். பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும்.

Reactions:

2 comments :

நல்ல சமூக அக்கறையுள்ள பதிவு
குழந்தைகளுக்கு நேரும் பாலியல்
தொந்தரவுகள அதிகம் மிகவும்
நெருங்கியிருப்பவர்களிடம் துவங்குகிறது
அது விஷயத்திலும் பெற்றோர்கள்
மிக கவனமாய் இருக்க வேண்டும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!