Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, March 28, 2011

வாக்காளர்களை கவனிக்கும் அரசியல் கட்சிகள்?

வாக்காளர்களை கவர விதவித லஞ்சம் கொடுக்கும் அரசியல் கட்சி பிரியாணியும், சரக்கும் கொடுத்தால் போதும் கணிசமான ஓட்டகளை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. பெருந்துறை அருகே காஞ்சிக்கோவிலில், கூட்டணி கட்சியினர் மற்றும் வாக்காளர்களை அழைத்து, மூடிக் கிடந்த தியேட்டருக்குள் சரக்குடன் விருந்து வைத்த, கொ.மு.க., வேட்பாளர் உட்பட 300 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி தி.மு.க., கூட்டணியில் கொ.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கும் இத்தொகுதியில், கொ.மு.க., சார்பில் மாவட்ட செயலர் கே.கே.சி.பாலசுப்பிரமணி நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க., சார்பில் புறநகர் மாவட்ட செயலர் தோப்பு வெங்கடாசலம் போட்டியிடுகிறார். தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையோடு உள்ள கொ.மு.க., கட்சி, வாக்காளர்களை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது தான், அக்கட்சிக்கான சின்னம் குறித்த விவரம் தெரியவரும். இங்கு, அ.தி.மு.க.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கொ.மு.க., தரப்பில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. லாரி தொழிலில் கொடிகட்டி பறக்கும் வேட்பாளர் பாலு, வாக்காளர்களை கவனித்து தொகுதியை கைப்பற்றி விடலாம் என்ற முயற்சியில் உள்ளார். நேற்று முன்தினம், பெருந்துறை - காஞ்சிகோவில் ரோட்டில் உள்ள கவிதா தியேட்டரில், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் மறைமுக விருந்து வைத்துள்ளார். பிரியாணி பொட்டலத்துடன் சரக்கு வழங்கப்பட்டது.

தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள், கூட்டத்தை முடித்துக் கொண்டு கட்சியினர் "எஸ்கேப்' ஆகினர். இது தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொ.மு.க., வேட்பாளர் பாலு, தி.மு.க., ஒன்றிய செயலர் சாமி உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் கூறியதாவது: கொ.மு.க., சார்பில் கவிதா தியேட்டரில் செயல்வீரர் கூட்டம் நடத்தி உள்ளனர். அதற்கான எந்தவித அனுமதியும் பெறவில்லை. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டதால் பிரியாணி விருந்து வைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். வேட்பாளர் உட்பட, 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!