புது தில்லி, மார்ச் : இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் அக்பர் பதம்சீயின் ஓவியம் ஒன்று வெள்ளிக்கிழமை நியூயார்க் நகரில் ரூ.6.3 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சோத்பி அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில், 1959-60-ம் ஆண்டுகளில் பதம்சேயால் உருவாக்கப்பட்ட, 10-க்கு 3-அடி அளவுள்ள இந்த ஓவியம் உள்பட ஏராளமான ஓவியங்கள், அமெரிக்க மதிப்பில் 4,028,250 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. ரபீந்திரநாத் தாகூர், ஜெமினி, ரவீந்தர் ரெட்டி, பாரதி கெர் ஆகியோரது ஓவியங்களும் இங்கு ஏலம் விடப்பட்டன. பதம்சீயின் ஓவியம் 1960-ல் வட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 1960 முதல் மாண்டிரியல் நகரிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இப்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment