தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; சிலர் வாபஸ் பெற்றுஇருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக சென்னையில் 294 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருப்பூர் வடக்கு தொகுதியில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் வாபஸ் பெற்றனர். இதுதவிர, அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தவர்களும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களது இறுதிப் பட்டியல் நேற்று இரவு தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கியது போக, மற்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்குசின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னமும், ஐ.ஜே.கே., கட்சிக்கு மோதிரம்சின்னமும் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷனின் 53 சின்னங்களில் ஒன்று, அவர்களது விருப்பப்படி ஒதுக்கப்பட்டது.முதலில், பதிவு செய்த கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பின், சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மயிலாப்பூர் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த, ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரதுகணவர் தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டது.
அதேபோல, கிருஷ்ணகிரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஹசீனா சையதுக்கு பதில், மக்பூல் ஜானை புதிய வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் மனுதாக்கல் செய்யவில்லை. இதை யடுத்து, ஹசீனாவே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் எனக் கருதப்பட்டது. ஆனால், இதில் திடீர் திருப்பமாக, அவர் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையத், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால், பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த அனல் பறக்கும் பிரசாரம், ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 13ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள் எல்லாம், மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
0 comments :
Post a Comment