Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 6, 2011

வாக்குகளை வழங்க காத்திருப்பவர்களே? ஒரு நிமிடம்!!

தேர்தல் தேதி அறிவித்தாயிற்று. இனி நாடே திருவிழாக் கோலம் ஆகும். இதுவரை ஏறிட்டுக்கூட பார்த்திராத உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இப்போது உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அளவளாவுவார்கள். கை கூப்புவார்கள். ஏன், காலில் கூட விழுவார்கள்.

சில தொகுதிகள் இதில் விதிவிலக்கு பெறும். அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு உருப்படியாக ஏதாவது செய்திருப்பார்கள். உண்மையிலேயே மக்களுக்காக உழைத்திருப்பார்கள்.

தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஏன் தொகுதி பக்கமே தலை வைத்துப் படுக்காத எம்.எல்.ஏ.க்களை இந்த உலகுக்கு நாம் பறைசாற்ற வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இனியும் உருவாக்காதீர்கள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த, உருப்படியாக தங்கள் தொகுதிகளுக்கு ஏதாவது செய்த எம்.எல்.ஏ.க்களை நாம் இனம் காண வேண்டும். இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

வாசகர்களாகிய நீங்கள் உங்கள் தொகுதியின் நிலவரம், உங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடு, அவர்களால் உங்கள் தொகுதிக்கு ஏற்பட்ட வளர்ச்சி அல்லது பின்னடைவு... போன்றவற்றை அலசி ஆராய்ந்து நல்ல முடிவெடுங்கள், உங்கள் ஒரு ஒட்டு உங்களுக்கு சாதாரணம், ஆனால் இந்த நாடு, நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவை, நிதனாமாக யோசித்து (காசுக்கு இல்லாமல்) நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.

1 comments :

மனிதநேய மக்கள் கட்சி (மமக)உங்களுக்கு இயன்றவரை நல்லது செய்ய முயற்சிக்கும். வாக்காளர்களே! மமக-விற்கு உங்கள் உரிமையான வாக்குகளை அளித்திடுங்கள்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!