Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 16, 2011

ஜப்பான் நிலநடுக்கத்தையடுத்து, பூமியின் நிலவரம்!

வாஷிங்டன் : "ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்' என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்று மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மேலும், இரண்டு மாகாணங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஜப்பான் பல தீவுக் கூட்டங்களால் ஆன நாடு. எனினும், ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ என்ற நான்கு பெரிய தீவுகள் தான் முக்கியமானவை. இவற்றிலும், ஹோன்ஷூ தான் மிகப் பெரியது. இதில் தான், தலைநகர் டோக்கியோ உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மேலும் கூறியதாவது:தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும். ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள் கொண்டது. இந்த மாற்றத்தால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுபோன்ற அச்சு மாற்றங்கள் பூமியின் வரலாற்றில் சகஜம் தான். கடந்த 2010ல் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால், ஒரு நாளில் 1.26 மைக்ரோ வினாடிகளும், 2004ல் சுமத்ராவில் நிகழ்ந்த 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் 6.8 மைக்ரோ வினாடிகளும் குறைந்துள்ளன.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!