Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, September 27, 2014

உள்ளத்தால் உயர்வான உயர்ந்தவர் யார்!?

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர் மட்டயில் மட்டுமல்ல மனதாலும் சச்சினைவிட உள்ளத்தால் உயர்வானவர் ஆபிரிடி.
ஒரு முறை ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர். அதுவும் தன்னுடைய முதல் அறிமுக தொடரில்.
அன்றில் இருந்து இவருடைய அதிரடி ஆட்டதிற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன். நான் விளையாடி கொண்டு இருந்து கிரிக்கெட் அணியில் அன்றில் இருந்து அதிரடி ஆட்டம் மட்டுமே ஆடுவேன். வெறும் 15 ஓவர் மட்டும் விளையாடும் அந்த ஆட்டத்தில் நூறு ரன்களை அடித்தவன் என்கிற சாதனை எனக்கு சொந்தமானது. சரி.. இப்போ விசயத்திற்கு வருவோம்.
இவர் எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாரிதவர்கள் எல்லாம் ஹோட்டல், கம்பனி என்று தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஷாஹித் அப்ரிடி தான் வாழ்நாளில் சம்பாரித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை, மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர் செலவு செய்து உள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல்.

ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்குவார்கள். அதில் புதிய புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழுவதும் கமிசன் பெறுவார்கள். இது தானே நடந்து கொண்டு இருக்கிறது.
அப்ரிடியின் மனிதநேய செயலை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி நின்று பாராட்டுவோம்.. படியுங்கள் & பகிருங்கள்.

Saturday, September 20, 2014

மக்கள் தந்த பேதி மருந்து!?

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் நன்கு தங்களுடைய நியாயமான வெறுப்பை இந்த இடைத்தேர்தல் மூலம் காண்பித்துள்ளார்கள்.
இடைத்தேர்தல் முடிவுகள்!  ஆப் கி பார்! மக்கள், ஆப்பு வச்சோம் பார்!  இந்த ஆப்பு மோடிக்கு மட்டுமல்ல பி ஜே பி மற்றும் பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கும் சேர்த்து.
கசப்பு மருந்து தந்த பாஜகவுக்கு மக்கள் தந்தது பேதி மருந்து!
கருப்பு பணத்தை மீட்காத அரசுக்கு மக்கள் தந்த வெறுப்பு பணம் !
எண்ணெய் விலை உயர்வுக்கு மக்கள் தந்த வெண்ணை விலை!
லவ் ஜிஹாத் புரட்டுக்கு மக்கள் தந்த உ.பி விரட்டு!
இந்தித் திணிப்புக்கு மக்கள் தந்த இஞ்சித் திணிப்பு!
குரு உத்சவ் கொண்டாட்டதுக்கு மக்கள் தந்த சனி உச்சம்!
இலங்கை பிரச்சனை துரோகத்துக்கு மக்கள் செய்த ராவண வதம்!
கடலில் மீனவர்கள் பிரச்சனைக்கு மக்கள் விட்டது நட்டாற்றில்!
முஸ்லிம்கள் மைனாரிட்டி இல்லை என்றதற்கு மக்கள் தந்த காய்ந்த ரொட்டி!
விருந்தாளிகள் என்று நம்மை சொன்னவர்களுக்கு மக்கள் சொன்னது ! விருந்தும் மருந்தும் மூணு மாசம் கிளம்பு!
இது இந்து தேசம் என்றோருக்கு மக்கள் சொன்னது இந்திய தேசம்!
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்!
நாஙக யாரு ? தோசை, ரொட்டி,  வரட்டி எல்லாத்தையும் போடுவோம் புரட்டி! ஆக கலக்கத்தில்  காவி கூடாரம்.

Sunday, September 14, 2014

ஆட்டோ பயணம் அவசியமான பதிவு!?

இரவு நேரங்களில் தன்னந்தனியாக பயனம் செய்ய நேர்ந்தால்....

* உங்கள் கைபையில் மிளகாய் தூள்,பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள்.

* ஏய் ஆட்டோ என்றோ நீ,வா,போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர். (இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). அண்ணா,தம்பி என்றோ முடிந்தால் ஸார் என்றோ அழைக்கவும். (இதனால் உங்கள் மீது நல்ல அபிப்பிராயமும் உடன் பிறந்த சகோதரி என்ற எண்ணம் ஏற்படலாம்)

* ஆட்டோவில் ஏறும் முன் நாம் போகும் இடத்தை தெளிவாக கூறி அதற்கான வாடகை பேசி கொள்ள வேண்டும். (இதனால் பிறகு வாடகை தகராறு ஏற்படாமல் தவிர்க்கலாம்).

* நீங்கள் ஏறும் முன் ஆட்டோவின் பெயரையோ அல்லது பதிவு நம்பரையோ குறித்து வைத்துகொள்ளுங்கள். (இதனால் நாம் ஏதாவது பொருளை விட்டு சென்றால் பிறகு அந்த ஆட்டோவின் நம்பரை வைத்து கண்டு பிடித்துவிடலாம்)

*ஆட்டோவில் ஏறிய பிறகு ஓட்டுனரின் காது கேட்கும் படி சத்தமாக உங்கள் உறவினருக்கோ (உறவினர் இல்லாத பட்சத்தில் சும்மா டயல் பன்னாமல்) போனில் "நான் இந்த பெயர் கொண்ட ஆட்டோவில் ஏறிவிட்டேன் இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிடுவேன்"என்று கூறவும்.

* பயனம் செய்யும் போது ஓட்டுனரிடம் குழைந்தோ அல்லது தேவையற்ற விசயமோ அல்லது ஏதும் பேசாமல் இருப்பது நல்லது.

* ஆட்டோவின் இரு ஓரங்களில் இருக்காமல் நடு பகுதியில் இருக்கவேண்டும்.

* உங்கள் அரைகுறை ஆடையே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆதலால் ஆடைகள் ஒழுங்கான முறையில் உடுத்திகொள்ளுங்கள்.

* புடவை உடுத்திய பெண்கள் முந்தானையை சரிசெய்து காற்றில் பறக்காதவாறு கவனமாக இருக்கவேண்டும். (ஏனெனில் ஓட்டுனர் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வாகனத்தை பார்க்க முயற்சிக்கும் போது புடவை காற்றில் பறந்தால் அவரின் கவனம் திசைதிருப்பும் அதுவே மிக பெரிய பிரச்சினை ஆகிவிடும்.

* நீங்கள் போய் சேரும்வரை உங்கள் கவனம் எப்போதும் ஓட்டுனரை நோக்கியே இருக்கவேண்டும்.அவரின் சிறு சிறு நடவடிக்கை கண்காணிக்க வேண்டும்.

* முதல் தடவையாக போகும்போது நமக்கு அதன் வழி தெரியாது ஆதலால் செல்போன் எடுத்து நான் இந்த இடம் வந்தாகி விட்டது என்று ஓட்டுனரின் காதில் விழும்படி உறவினரிடம் பேச வேண்டும் அல்லது பேசுவது போல் பாவலா காட்டவேண்டும்.

* நாம் போகும் வழி சரியாக தான் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.அவ்வாறு தவறான வழியில் போகிறது என்றால் பதட்டபடாமல் நிதானமாக ஏன் என்று காரணம் கேட்க வேண்டும்.ஓட்டுனர் கூறும் காரணம்(சாலை வேலை,சாலை மூடல்) சரியாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தாலோ அல்லது வராவிட்டாலோ மறுபடியும் செல்போன் எடுத்து இந்த ரூட் சரியில்லை வேறு வழியாக வருகிறேன் என்று உறவினருக்கு பேசுவதுபோல் பாவலா காட்டவேண்டும்.

* அதையும் மீறி தவறான பாதையில் போகிறது என்றால் எந்த காரணம் கொண்டும் பதட்டபடாமல் சமயோஜித புத்தியை கொண்டு சில வழிமுறையை கையாளவேண்டும்.

* தங்கள் இருக்கையின் கீழ்தான் பெட்ரோல் திறக்க,மூட,ரிசர்வ் செய்ய பைக்கில் இருப்பது போல் "நாப்"இருக்கும் (பார்க்க படம்-1)அதை அடைத்து விட்டால் போதும் சிறிது தூரம் சென்றவுடன் அதுவே தானாகவே ஆஃப்பாகிவிடும்.மீண்டும் ஸ்டாட் செய்வதற்குள் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

* அது டீசல் ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுனரின் வலது பக்கத்தில் சிகப்பு கலரில் ஆஃப் சோக் உள்ளது(பார்க்க படம் -2) அதை இழுத்தால் ஆஃப்பாகிவிடும்.

* சில ஆட்டோக்களில் ஓட்டுனரின் முன் பகுதியில் சிகப்பு கலரில் லிவர் உள்ளது (பார்க்க படம் -3) அதை இழுத்தால் ஆஃப்பாகி விடும்.

*இதற்கு ஒன்றும் வழியில்லை என்றால் உங்கள் துப்பட்டாவோ புடவையின் முந்தானையோ கொண்டு ஓட்டுனரின் கழுத்தில் போட்டு பின்னால் இழுத்தால் நிச்சயமாக ஆட்டோவை நிறுத்துவது அவருக்கு பாதுகாப்பு இல்லையெனில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழும் வாய்ப்புள்ளது.

* அவ்வாறு ஆட்டோ கவிழ போகும் என்று தெரிந்தால் தப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம்.நடு பகுதியில் இறுக்கமாக பிடித்து கொண்டு இருங்கள்.அடி ஒன்றும் படாது காயங்கள் இல்லாமல் உங்களால் எழமுடியும்.

இறுதியாக.. இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானவர்கள் படித்தவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் குடும்ப வறுமை காரனமாகவும் இத்தொழிலுக்கு வருவதால் பெண்களிடம் வரம்பு மீறாமல் கண்ணியமாக நடக்கின்றனர்.மேலும் போலிசாரின் வாகன சோதனைகள் அதிகம் நடப்பதால் மது அருந்தும் ஓட்டுனர்கூட பணி நேரத்தில் அருந்துவதில்லை.ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஓட்டுனரும் குற்றவாளி இல்லை.அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.உங்களை நம்பி தான் அவர்கள் வாழுகிறார்கள்.

Sunday, September 7, 2014

உடல் ஆரோக்யத்திற்கு!?

* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.

* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

* கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும். *கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.

* மொச்சை, கொண்டைக் கடலை, முருங்கை, முள்ளங்கி இவைகளால் வாயுத் தொல்லை உண்டாகும்.

* மூலநோய் உள்ளவர்கள் மிளகாயை அறவே நீக்குவது நல்லது.

* கறுப்பு தேநீர், காப்பி இவை மலத்தைக் கட்டும்.

* இரவு சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.

* மஞ்சள் தேய்த்துக் குளிக்காத பெண்களுக்கு தோளில் சுருக்கம் விழ வாய்ப்புண்டு.

* மூன்று மாதத்திற்கொரு ரத்த தானம் செய்யலாம்.

* நடைப் பயிற்சி செய்வதால் வியாதிகள் வராமல் தடுக்கலாம்.* தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்யமாக இருக்கும்.


இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!