Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 11, 2011

தயாளு அம்மாள், கனிமொழியிடம் சிபிஐ குறுக்கு விசாரணை?

சென்னை, மார்ச் 11- சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

2ஜி விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரிடம், சென்னையில் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது. அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினோம் என்று தெரிவித்தார்.

"சிபிஐ கேட்ட அனைத்து பதில்களையும் வழங்கினோம். இந்த பிரச்னையில் இருந்து நாங்கள் குற்றமற்றவர்களாக வெளியே வருவோம்." என்றார் கனிமொழி.

சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கலைஞர் டி.வி.,க்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அவர்களிடம் சிபிஐ விசாரித்ததாக கூறப்படுகிறது. கலைஞர் டி.வி.,யின் பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

1 comments :

kanai mozhi thaan pookap pokath theriyum unmai... pakngu irukkaa illaiyaa enru.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!