உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாகசம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் டாம் குரூஸ் என்ற இந்த ஆசாமி. உயிரை துச்சமென மதித்து, மிகவும் ஆபத்தான சாகசங்களை செய்து காட்டுவதுதான் இவர் வேலை.
உலகின் மிகவும் உயரமான கட்டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்டடத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப்படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த கட்டடத்தின், 124வது மாடியில் கண்காணிப்பு கோபுரம் ஒன்று உள்ளது. அந்த கோபுரத்தின் வெளியே உள்ள கண்ணாடியை பிடித்தபடி, தாவித்தாவி சென்று சில நாட்களுக்கு முன் சாதனை செய்தார் டாம். அதன் பின், கட்டடத்தின் உச்சியில் உள்ள கோபுரத்தில் ஏறி சாதனை படைக்க முடிவு செய்தார்.
அவரது சாதனை நிகழ்ச்சி முழுவதும் ஹெலிகாப்டரில் பறந்தபடி வீடியோ படம் பிடிக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் ஏறிய டாம், அங்கிருந்த மொபைல் ஆன்டனா மீது உட்கார்ந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். இந்த சாகச நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழே கூடி நின்ற மக்கள், வீடியோ திரையில் பார்த்து, ஆச்சரியமும், குதூகலமும் அடைந்தனர்.
1 comments :
சாதனைதான்
-இதனால என்ன பயன்?
Post a Comment