ஒரு அதிகாரி இடம் ஒரு வேலை முடியனுமென்றால் லஞ்சம், எங்கும் எதிலும் லஞ்சம், அவ்வளவு ஏன் ஓட்டு போட லஞ்சம்.
இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். நேர்மையானவர்கள், பதவி வகிக்க தூய்மையானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். மக்கள் சேவை செய்வதற்காகத் தான் அதிகாரிகள் உள்ளனர். அரசு பணியில் லஞ்சம் பெற்றால் தான் பணிகள் நடைபெறும் என்னும் நிலை உள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானிகள், தொலைத்தொடர்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள் அறவே இல்லை. ஆனால், தற்போது அனைத்து வசதிகளும் பெற்றாலும் ஊழல் பாதையில் செல்வது தவறு. இது கண்டிக்கத்தக்கது.
0 comments :
Post a Comment