Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 8, 2011

அறிவோம்! பாலின் பயன்கள் பற்றி

நாளொன்றுக்கு மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும் வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் stroke க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பால் மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.

அதில் கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல் எடை குறைந்தது தெரியவந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!