Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 13, 2011

சி.ஐ.பி, யிடம் சிக்கி தவிக்கும் கனிமொழி

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், விசாரணையின் வேகம், நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில், வரும் 31ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய வேகத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளனர்.தி.மு.க., தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மனைவியான தயாளுவையும், மகள் கனிமொழி மற்றும் "கலைஞர் டிவி' நிர்வாகி சரத்ரெட்டியையும், நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்தனர். தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணை, நாடு முழுவதும் கவனம் பெற்றது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய விசாரணை எப்படி இருந்தது, எந்த அளவில் இருந்தது என்பது குறித்து, சி.பி.ஐ., தொடர்பு கொண்டு கேட்டபோது அவை கூறியதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில், மிக முக்கிய பங்கு வகித்தது, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தான். இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றான, "சினியுக் பிலிம்ஸ்' நிறுவனம் மூலம் தான், "கலைஞர் டிவி'க்கு, 200 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதற்கு பிரதிபலனாக, இந்த தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவே, சி.பி.ஐ., நம்புகிறது.

கனிமொழிக்கு ஏற்கனவே கேள்விகள் அளிக்கப்பட்டு அதற்கு பதில்களும் பெறப்பட்டுவிட்டன. இப்போது அவரிடம் நடந்த விசாரணையில் பெறப்பட்ட பதில்களும் போதுமானதாக இல்லை என தெரிகிறது. நிர்வாகியான சரத்ரெட்டியிடம் தான் சில தகவல்கள் பெறப்பட்டன. அதுவும், ஏற்கனவே அவர் அறிக்கை மூலம் கூறியிருந்த விஷயங்களையே விசாரணையிலும் தெரிவித்தார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்னும் பல விஷயங்களுக்கு, சந்தேகங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை. தேவைப்படுமானால் திரும்பவும் விசாரணைக்கு அழைக்கப்படுவர். இதுதவிர, நேற்றைய விசாரணையில், "ஜெனிக்ஸ் எக்சிம் 3' என்ற நிறுவனமும் இடம் பெற்றது. இந்நிறுவனம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடனான தொடர்பில் வருகிறது.

இந்த பங்குகளின் சொந்தக்காரர்கள் யார் என்பதே, சி.பி.ஐ., தற்போதைய விசாரணையில் தேடிக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி. இதுவரை கிடைத்த தகவல்கள் படி, தி.மு.க., முன்னணி தலைவர்களில் சிலர், இந்த பங்குகளுக்கான உரிமையாளர்களாக இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்."ஸ்வான்' போர்டுக்கு, "ஜெனிக்ஸ் எக்சிம்' எப்படி வந்தது என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள பல மர்மங்கள் பற்றியும், நேற்றைய விசாரணையில் முக்கிய கேள்விகள் பல இடம் பெற்றிருந்தன.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!