Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 31, 2011

ஷாப்பிங் மாலை விலைக்கு வாங்கிய பாலிவுட் முன்னாள் நாயகி

பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி மாதிரி தீட்சித். சில ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் ஸ்ரீராம்மை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அங்குள்ள டென்வர் பகுதியில் மாதிரி வசித்து வருகிறார்.

இந்நிலையில் மியாமி நகரில் ஷாப்பிங் மால் ஒன்று விலைக்கு வந்துள்ளது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி, கூடவே வணிகம் நிறைந்த பகுதியும் கூட. இதனால் இந்த ஷாப்பிங் மால்லை பல கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். கையில் இருந்த பணம் போக, மீதமுள்ள பணத்திற்கு வங்கி மூலம் கடன் பெற்று இந்த மால்லை வாங்கியிருக்கிறார்.

தற்போது சினிமாவில் அந்த அளவிற்கு நடிக்காவிட்டாலும், டி.வி., நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடித்து வருகிறார். வங்கியில் பெற்ற கடனை கொஞ்சம் கொஞ்சமாக அசலுடன், வட்டியையும் சேர்த்து அடைக்க முடிவு செய்துள்ளாராம்.

நல்ல வேலை கணவரை விலைக்கு வாங்கவில்லை.

இந்திய ரயில்பஸ் சேவை, இலங்கையில்

கொழும்பு, மே 31: ரயில்பஸ் சேவை தொடக்க விழா கிழக்கு மாகாணத்தின் கலோயா ரயில் நிலையத்தில் மே 26-ம் தேதி நடைபெற்றது. இதில் அந்த மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு ரயில்பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இந்தியாவின் சார்பில் அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் காந்தா கலந்து கொண்டார்.

இலங்கையின் கிழக்கு மாகாண மக்களின் போக்குவரத்துக்காக 5 ரயில்பஸ்களை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்திருந்தது. அதன்படி 4 ரயில்பஸ்கள் கடந்த ஆண்டே அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

திரிகோணமலை-மட்டக்களப்பு இடையே இந்த ரயில்பஸ்கள் இயக்கப்பட்டுவருகின்றன. முன்னதாக கிழக்கு மாகாண மக்கள் போக்குவரத்துக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ரயில்சேவை அவர்களின் போக்குவரத்து கஷ்டத்தை நீக்கியுள்ளது. அவர்களால் நினைத்த இடத்துக்கு, நினைத்த நேரத்தில் செல்ல முடிகிறது.

இந்நிலையில் இப்போது அளிக்கப்பட்டுள்ள 5-வது ரயில்பஸ் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பயனடைய உள்ளதாக அந்த மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையுடன் இணைந்து இந்த ரயில்பஸ் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பயனடையவுள்ளனர். இலங்கையின் அமைதி, வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியா அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. இரு நாடுகளின் உறவும் வலுப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது'' என்று இந்திய தூதரக அதிகாரி அசோக் காந்தா கூறினார்.

அறிவியல் கண்காட்சி, சென்னை மாணவனுக்கு அமெரிக்காவில் பரிசு

ஹூஸ்டன் : அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சமீபத்தில் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி நடந்தது.

இதில், 65 நாடுகளை சேர்ந்த இளம் மாணவர்கள், தொழில் முனைவோர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கண்காட்சியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒன்பது பேர், தங்கள் துறைகளில், தாங்கள் கண்டறிந்தவற்றை காட்சிக்கு வைத்தனர். இப்போட்டியில், ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்தவர்கள் என, மொத்தம் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னையின் புனித ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ராகவேந்திரா ராமச்சந்திரன் (வயது 16), வேதியியல் துறையில் மருந்து தயாரிப்பில் முதல் பரிசான 4 லட்சத்து 5,000 ரூபாயை (9,000 டாலர்) வென்றார். புற்றுநோய், பாக்டீரியா மற்றும் பூஞ்சையை குணப்படுத்தும் மருந்துகள் தயாரிப்பில், இவரது கண்டுபிடிப்பு மேலும் பல முன்னேற்றங்களைக் கண்டறிய உதவும்.தன் ஆய்வுக்காக, ஓராண்டு பள்ளி படிப்பையே தான் இழந்ததாக ராகவேந்திரா கூறியுள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற ஒன்பது இந்திய மாணவர்களில் பெரும்பாலோர், ஏதேனும் பரிசு அல்லது விருதினை வென்றுள்ளனர்.

Monday, May 30, 2011

மூண்டது தீ முள்ளிவாய்க்காலில், பொ மணியரசன்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் பெ. மணியரசன், திருச்சியில் பாவலர் முவ. பரணர் எழுதிய "ஆண்டகை' பாட்டிலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் "முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

’’எழுத்தும் வாழ்க்கையும், பேச்சும் வாழ்க்கையும் வெவ்வேறாகிவிட்டது. எழுதுபவர்கள் எழுதுவதைப் போல வாழ்வதில்லை. தங்களின் தவறுகளை தனிமனித அந்தரங்கம் என்று கூறிவிடுகின்றனர்.

சங்க காலத்துக்குப் பிறகு, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், களப்பிரர் காலத்துக்குப் பிறகு, சோழர்களின் காலம் கொஞ்சம்தான். அதைத் தொடர்ந்து மாலிக்காபூர், நவாப்புகள், நாயக்கர்கள், மராட்டியர்கள், வெள்ளையர்கள் தமிழர்களை ஆண்டார்கள்.

நீண்ட காலமாக நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். இன்றுவரை நாம் விடுவிக்கப்படவே இல்லை. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவம் நமக்கு பாடம். எந்த இனத்துக்கும் இப்படியொரு படிப்பினை கிடைக்காது. இன்னமும் மத்திய அரசுக்கு மனு எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறோமா?

துணிவின்மை, சந்தர்ப்பவாதம் இவற்றால் படித்தவர்கள்தான் மக்களிடத்தில் தவறான கருத்துகளை விதைத்துவிடுகின்றனர். எழுத்தாளர்கள் பதவி அரசியலை அண்டிப்பிழைக்கும் நிலையைத் தொடரக் கூடாது. எழுத்துரிமைக்காக உயிரையும் கொடுக்கலாம்; ஆனால், உயிருக்காக எழுத்துரிமையை சாகடித்துவிடக் கூடாது.

உண்மையை எழுத முடிந்தால் எழுதுங்கள், இல்லாவிட்டால் தாள் வெள்ளையாகவே இருக்கட்டும், பின்னாளில் வருபவர்களாவது எழுதிக் கொள்வார்கள்; கிறுக்கி வைத்துவிட வேண்டாம் என்றார் மாசேதுங். முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு இதைத்தான் சொல்கிறது. அதில் விளைந்த ஒரு நெருப்புக் கீற்றுதான் இந்த ஆண்டகை பாட்டிலக்கிய நூல்’’என்றார்.

இந்த நெருப்பு சிங்கள வெறியர்களின் குரவலையை கடித்து குதறும்., வெகு விரைவில்.

தொ(ல்)லை பேசியினால் போனது உயிர்!

சமயநல்லூர் : சமயநல்லூர் அருகே அடுத்தடுத்த இரு ரயில்விபத்தில் இருவர் பலியாகினர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கருப்பு மகன் கார்த்தி(30). நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற போது ரயில்மோதி பலியானார்.

இன்று காலை அதே பகுதியை சேர்ந்த கவியரசு(30) என்பவரும் ரயில்விபத்தில் பலியானார். இருவரும் ரயில்வருவதை கவனிக்காமல் மொபைலில் பேசியதே விபத்துக்கு காரணம். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவசர உதவிக்காக கண்டுபிடித்த வயரில்லா தொலைபேசி ஆனால் இப்போது தொல்லை பேசியாகிவிட்டது.

Sunday, May 29, 2011

சூப்பர் ஸ்டாருடன் இணையும் மிஸ் இந்தியா

2010ம் ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் தேர்வான ஷீனா சோஹன், இப்போது முதன்முறையாக சினிமாவில் நடிக்கிறார். அதுவும் முதல்படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அடுத்து "தி டிரெயின்" என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜெயராஜ் என்பவர் இயக்குகிறார். படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 2010ம் ஆண்டு மிஸ் இந்திய அழகி ஷீனா சோஹன் அறிமுகமாகிறார். ஷீனா, பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதாவை தன்னுடைய மானசீக குருவாக ஏற்றவர்.

சினிமாவில் நடிப்பது குறித்து ஷீனா கூறியதாவது, சினிமா என்றால் அதிலும் கவர்ச்சியும் சகஜமாகிவிட்டது. ஆனால் என்னை பொறுத்த வரை கவர்ச்சிக்கு எப்போதும் எதிரி தான். ரசிகர்களை எனது நடிப்புதான் கவர வேண்டும். தவிர எனது உடலோ அல்லது கவர்ச்சியோ கிடையாது. எனவே நடிப்பில் தான், நான் அதிகம் கவனம் செலுத்துவேன். சினிமாவில் எனக்கு மாதிரிதீட்சித், ஸ்ரீதேவி, ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோரை ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.

மக்களின் (வாக்காளரின்) நாடி துடிப்பை அறிந்திருக்கும் ஜெயா!

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.

தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது. இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு.

கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.

மக்களின்(வாக்காளரின்)நாடி துடிப்பை அறிந்திருக்கும் ஜெயா! புரிந்து நடந்து கொண்டால் மீண்டும் வெற்றி நிச்சயம். இல்லையேல் மஞ்சள் துண்டு கதைதான் உனக்கும்.

வெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர், துனைவியர்க்கு? ஓர் எச்சரிக்கை !?

வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

கிராமப்புறங்களில் விவசாய தொழில் நசிந்து வருவதால், நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு, பெரும்பாலானோர் விரும்புகின்றனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி, சரியான நபரின் வழிகாட்டுதலில், வெளிநாட்டிற்குச் சென்று, குறிப்பிட்ட சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தால், தங்கள் ஊரில் சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஏதேனும் தொழில் செய்வதற்கான முதலீடு போன்றவற்றிற்குத் தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.வளைகுடா நாடுகளில், கட்டட வேலை, வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்கு தொழிலாளர்களாக செல்ல, ஆந்திராவில் கடும் போட்டி நிலவுகிறது.

ஆந்திர மாநிலத்தில், கடந்தாண்டு, வெளிநாட்டில் கூலி வேலைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 50 ஆயிரம். இந்திய வரலாற்றில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாக கூறப்படுகிறது. மேலும், இது இந்த ஆண்டில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜன்டுகள், முறைப்படி பாஸ்போர்ட், விசா பெற்று, வேலைக்கான நியமன கடிதம் மற்றும் ஒப்பந்தக் கடிதம், வேலை விவரம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களை, கொடுத்து அனுப்ப வேண்டும்.

ஆனால், இந்த அனைத்து விதிமுறை மற்றும் நடைமுறைகளை, ஏஜன்டுகள் பின்பற்றுவதில்லை. விளைவாக, வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தனிப்பட்ட பிரச்னைகள், வேலையிடத்தில் நெருக்கடி, நிதி, வேலைப்பளு, குடும்பச்சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஜூலை 2008 முதல் நவம்பர் 2010 ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஆந்திராவிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களில் 270 பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு, பெரும்பாலும் பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடிகளே காரணமாக அமைகிறது.

ஆந்திர மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனா என்பவரின் கணவர், 2007ம் ஆண்டு துபாய்க்கு கட்டட வேலைக்குச் சென்றார். இதற்காக, இவர் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். தனது செலவுகள் போக, வீட்டிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம் என, ஏஜன்டுகள் சொன்னதை நம்பிச் சென்றார். ஆனால், 18 மாதம் வரை அங்கு வேலை செய்த அவரால், வெறும் 30 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ஊரில், அவர் வாங்கிய கடன் தொகைக்கு, வட்டி அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிலிருந்து, ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்குச் கட்டட தொழில், வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்குச் செல்கின்றனர். ஆனால், தவறான ஏஜன்டுகளிடம் இவர்கள் சிக்கிக் கொள்வதால், அவர்களும், அவர்களின் குடும்பமும் சீரழிந்து விடுகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல, 65 ஆயிரம் ரூபாய் முதல் 1.6 லட்சம் வரை செலவாகிறது. இது தவிர, ஏஜன்ட் கமிஷன் தனி. வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, ஊரில் உள்ள நில புலன்களை விற்றும், லட்சக்கணக்கில் கடன் வாங்கியும், வெளிநாடு செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள், தங்கள் வேலை செய்யும் நிறுவனம், சம்பளம் உள்ளிட்ட எதைப் பற்றியுமே தெரிந்து கொள்ளாமல் செல்கின்றனர். அங்கு போன பின்னரே, என்ன வேலை செய்யப் போகிறோம் என்றே பலருக்கு தெரியவருகிறது.

அங்கு போனதும், முதல்வேலையாக, அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பிடுங்கி வைத்துக் கொள்கின்றனர்.வேலை தொடர்பான ஒப்பந்தங்களும், ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளில் இருப்பதால், எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளர்களுக்கு, அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல், கையெழுத்துப் போடுகின்றனர். ஏஜன்டுகள் இங்கு சொன்ன சம்பளத்தை விட, பலமடங்கு குறைவாகவே இருக்கிறது. தினசரி 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் கூட, "ஓவர் டைம்' என்ற பெயரில் வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் மிக மோசமாக இருக்கும்.

நான்கு பேர் தங்கக் கூடிய சிறிய அறையில் 10 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருப்பர். சரியான உணவு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும், ரொட்டியும், தாலும் வழங்கப்படும். சில நேரங்களில் பிரட் தரப்படும். சைவ உணவு சாப்பிடுபவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சரியான உணவு, ஓய்வு இல்லாததாலும், அதைவிட முக்கியமாக, தங்கள் எதிர்பார்த்து வந்ததைவிட, மிகவும் குறைவாக சம்பளம் தரப்படுவதாலும் தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவர். மேலும், சில இடங்களில், ஒப்பந்தக்காலம் முடிந்ததும் அவர்களை தங்களது நாட்டிற்குத் திரும்ப சில நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருப்பதால், அவர்களால் வெளியே எங்கும் செல்ல முடியாது. கொத்தடிமைகளைப் போல் நாட்களை நகர்த்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இதனால், விரக்தியின் உச்சத்திற்குச் சென்று தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்த பிரச்னை அவர்களோடு முடிவதில்லை. தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை, இந்தியாவிற்கு கொண்டுவர அவர்களின் குடும்பத்தினர் பெரும் சிரமப்பட வேண்டும். பொருளாதார வசதிகள் தவிர, சட்ட உதவிகளும் தேவை. சிலர், வெளிநாடுகளில் இறந்த தங்களது உறவினரின் உடலை கொண்டுவர, பல மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.தங்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்க வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று, அங்கு வேறு விதமான முடிவை தேடிக்கொண்ட நபரின் குடும்பம், மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறது.

#எதிர்கால வாழ்வுக்கு பணம், இன்றியமையாததுதான் அவர்களின் கஷ்டம் (கணவன், பிள்ளைகள்) இவர்களுக்கு எப்படி புரியபோகிறது.

Saturday, May 28, 2011

சமச்சீர் கல்விக்கு முழு ஒத்துழைப்பு, ஆசிரியர் கழகம் முடிவு

சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,

சமச்சீர் கல்வி தொடர்பாக அமைக்கப்படும் குழுவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகளுக்கு இடமளிக்க வேண்டும். மாணவர் நலனில் தலைமை ஆசிரியர்கள் அக்கறை கொண்டுள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் வகுப்பு ஒன்றுக்கு 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். பள்ளிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

முதல்வரா இருந்தவர் உறுப்பினர் ஆகிறார்? இதுதான் காலச்சக்கரமோ!?

சென்னை, மே 29: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கிறார். திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்ற மே 23-ம் தேதி கருணாநிதி தில்லியில் இருந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அன்று பதவி ஏற்கவில்லை. இவர்கள் தவிர அதிமுக தரப்பில் சிவபதி, மனோகரன் ஆகியோர் பதவி ஏற்காமல் இருந்தனர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாற்காலிக பேரவைத் தலைவர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாகப் பதவி ஏற்றனர். கருணாநிதி, துரைமுருகன் ஆகியோர் திங்கள்கிழமை, சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் அறையில் பதவி ஏற்க உள்ளனர்.

எல்லாரும் உறுப்பினரா இருந்து முதல்வர் ஆவார்கள், இவர் முதல்வரா இருந்து உறுப்பினராகிறார்

இலகுவான கார் இலங்கையில் அறிமுகம், வரும் ஜுனில்

புதுடில்லி : உலகின் மிககுறைந்த விலைக்காரான டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கை சாலைகளில் ஓட உள்ளது.

ஆரம்பித்த புதிதில், அனைவரும் விரும்பும் வாகனமாக இருந்த நானோ, அதில் உள்ள குறைபாடு, திடீரென்று தீப்பிடித்தது உள்ளிட்ட காரணங்களினால் அ‌தன் மீதான மதிப்பு மற்றும் விற்பனை ஆட்டம் காண துவங்கியது. மாதத்திற்கு 500 கார்கள் மட்டுமே விற்பனை என்ற இக்கட்டான நிலைக்கு நானோ கார் தள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இதன்பின், பல அதிரடி சலுகைகளை அறிவித்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். புதிதாக கார் வாங்குபவர்களுக்கு 4 ஆண்டுகால பராமரிப்பு கட்டணம் இலவசம் என்று முதலில் அறிவித்த டாடா நிறுவனம், பின், பழைய கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவித்தது.

இதன்பின்னர், நானோ காரின் விற்பனை கணிசமாக உயர துவங்கியது. உலகின் மிகக்குறைந்த விலை கார் என்று பெயர் எடுத்த நானோ கார், இந்தியாவில் மட்டும் ஓடுவது சரியில்லை என்றும், சர்வதேச நாடுகளிலும் நானோ கார் ஓடும் வகையிலான முடிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்தது. இதன் ஒருபகுதியாக, நானோ காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. ‌அமெரிக்கா, ‌ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்த டாடா நிறுவனம், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, 500 கார்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும், பின், கார்களின் எண்ணிக்கையை மாதத்திற்கு 200 என்ற அளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரோகம் செய்துவிட்டு துரகம் பற்றி பேசும் துரோகி (நவீன ஹிட்லர்)

கொழும்பு: வெளிநாட்டில் தங்கியுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள், தவறான பிரசாரம் மூலம் இலங்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என, அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட இரண்டாம் ஆண்டு விழா, கொழும்பு நகரில் நேற்று நடந்தது. இதையொட்டி நடந்த ராணுவ அணிவகுப்பை, அதிபர் ராஜபக்ஷே பார்வையிட்டார். அப்போது, அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில், மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்படுகிறது. நமது ராணுவத்தின் மீது படிந்துள்ள இந்த கறை போக்கப்படும். பயங்கரவாத ஒழிப்பின் மூலம் உண்மையான மனித உரிமை நிலை நாட்டப்படும்.

விடுதலைப் புலிகளுடனான போரின் போது ஒரு கையில் ஆயுதமும், மறு கையில் மனித உரிமை அடங்கிய பட்டியலையும் நமது ராணுவ வீரர்கள் ஏந்தியிருந்தனர். நாங்கள் ஒரு போதும் உங்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம். வெளி சக்திகள் நம்மை ஒரு போதும் அச்சுறுத்த முடியாது. நமது பிரச்னைகளை நாமே தீர்த்துக் கொள்வோம். அரசியலமைப்பு சட்டத்தில் மனித உரிமையை சேர்த்து விட்டால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. வெளிநாட்டில் தங்கியுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தவறான பிரசாரம் மூலம் இன்னும் இலங்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.

ஈழ மக்களை கொன்ரோளித்த இனபப்படுகொளையான், துரோகம் செய்துவிட்டு துரகம் பற்றி பேசும் துரோகி நவீன ஹிட்லர்.

மீண்டும் மீண்டும் சென்னையின் அசத்தல்! வெற்றி!!

சென்னை : ஐ.பி.எல்.,சீசன் 4ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூருவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

டாஸ் வென்ற சென்னை : ஐ.பி.எல்., சீசன் 4ல் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

ஆபார துவக்கம் : இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் ஹசியும், முரளி விஜய்யும் அபார துவக்கம் தந்தனர். தமுதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ஹசி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சையத் முகமது பந்தில் ஆட்டமிழந்தார்.

சதம் நழுவல் : இதன் பின்னர் விஜய்யுடன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறிது நேரத்தில் 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார். அடுத்த பந்திலேயே கேப்டன் தோனி 22 ரன்களுக்கு ஸ்ரீநாத் அரவிந்த பந்தில் அவுட்டானார்.

பெங்களூருவுக்கு இலக்கு : கடைசி ஓவரில் மோர்கல் 2 ரன்களுக்கும், ரெய்னா 8 ரன்களுக்கும் அவுட்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்தார். இறுதியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் கெயில் 2 விக்கெட்களும், ஸ்ரீநாத் அரவிந்த் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அதிர்ச்சி துவக்கம் : இதன் பின்னர் 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரி‌ன் 4வது பந்தில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர் அகர்லாவ்ல 10 ரன்களுக்கு அவுட்டானார்.

கோக்லி ஆறுதல் : ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராத் கோக்லி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் கோக்லி 36 ரன்களுக்கும், ஏபி டி வில்லியர்ஸ் 18 ரன்னுக்கும் அவுட்டானார். லூக் போமர்ஸ்பாச் 2 ரன்னுக்கும், கேப்டன் வெட்டோரி ரன் ஏதுவும் எடுக்காமலும், அபிமன்யு மிதுன் 11 ரன்னுக்கும் அவுட்டாயினர். கடைசி கட்டத்தில் திவாரியும் ஜாகிர் கானும் இணைந்து கவுரவமான ரன்கள் எடுக்க போராடினர். ஜாகிர்கான் 21 ரன்களுக்கு அவுட்டானார்.

Friday, May 27, 2011

ஆளும் கட்சிக்கு அறிவுரை சொன்ன, ஸ்டாலின்

எதிர்க்கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நம்பிக்கையை பெரும் வகையில், ஆளும் கட்சியினர் நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்திப் பேசுகையில், சபாநாயகர் ஜெயக்குமார் அனைத்து உறுப்பினர்களின் மனநிலையை அறிந்த சிறந்த அனுபவம் பெற்றவர். ஒரு தேருக்கு அச்சாணி போன்று எதிர்க்கட்சி விளங்குகிறது. சிறிய கட்சி, பெரிய கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 5 விரல்களும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், அவை இணைந்து ஒன்றுகூடினால்தான் ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சேலைக்கு சிபாரிசு செய்யும், ஜிங்கு ஜிக்கா நடிகை!

மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை நாக லட்சுமி. அந்த பஸ் பாடலில் இந்த கருப்பழகி போட்ட டீசன்டான குத்தாட்டத்தை ரசிக்காத‌வர்களே இருக்க முடியாது.

ரசிகர்களின் வரவேற்பு அதிகமானதால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குத்தாட்ட நாயகியாகியிருக்கும் நாகலட்சுமி, மைனாவுக்கு முன்பே நாடோடிகள் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். ஆனால் அந்த பாடல் அந்த அளவுக்கு இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை.

இப்போது 6 குத்துப்பாடல்கள் வரிசை கட்டி நிற்க, நாகலட்சுமி சேலையை வரிந்து கட்டிக் கொண்டு ஆட்டம் போட தயாராகி வருகிறார். அம்மணி தன்னைத் தேடி வரும் டைரக்டகளிடம் ஒரேயொரு கண்டிஷன் போடுகிறாராம். டைரக்டர்களும் அம்மணியின் கண்டிஷனை இன்முகத்‌தோடு வரவேற்று, அதற்கேற்ப பாடல் வரிகளை மாற்றவும் தயாராகி விடுகிறார்கள். அப்படியென்ன கண்டிஷன்...? சேலை கட்டித்தான் ஆட்டம் போடுவேன் என்பதுதான் அந்த கண்டிஷனாம். சேலையில இல்லாத கவர்ச்சியா, வேற டிரஸ்ஸில் இருக்கப் போவுது. சேலையில்தான் என்னோட கவர்ச்சி சிறப்பா தெரியும். அதனாலதான் சேலை கட்டி ஆடுகிறேன், என்கிறார். நல்ல கொள்கைதான்!!

இலங்கை விசா பெறுவதில் நடைமுறை மாற்றம்

கொழும்பு : இலங்கை செல்லும் இந்தியர்கள் கொழும்பு விமான நிலையம் சென்று விசா பெறும் நடைமுறையை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது அந்த நிலையை மாற்றி, இலங்கை பயணத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் விசா பெறும் முறையை கொண்டுவரவும் இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தற்சமயம் இலங்கை சென்று விசா பெறும் நடைமுறை சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவு நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் என அந்நாடு அறிவித்துள்ளது.

Thursday, May 26, 2011

அ தி மு க ஆட்சியில் சங்கா? உயர் நீதி மன்றம் நோட்டீஸ்

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட இருந்த சமச்சீர் கல்வி திட்டத்தை, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைப்பதென முடிவெடுத்து அறிவித்தது.

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ரூ.200 கோடி செலவழித்தது.

இதனை வீணடிக்கும் வகையில் தற்போதைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் எதிர்காலம் வீணாகும் வகையில் இந்த அரசு ஆணை அமைந்துள்ளது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு ஜுன் 8ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேப்டனுக்கே கோட்டாயா? கேள்வியில் கட்சியினர்!?

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

அதிக வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் "108"அனைத்து மாவட்டங்களுக்கும்

தமிழகத்தில் அரசின் "108' ஆம்புலன்ஸ் சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான, குறைமாத பச்சிளம் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் இந்த ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில், செல்லும் வழியில் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, "இன்குபேட்டர்' வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சென்னை, மதுரை போன்ற நகரங்களில், 10 நாட்களில் வழங்கப்படுகிறது.

சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு ஆஸ்பத்திரியில், இந்த ஆம்புலன்சை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Wednesday, May 25, 2011

டெல்லி சென்றது அரசியல் ஆக்கப்டும், பயத்தில் கலைஞர்

சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், டெல்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள் கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகலாம் என நம்புகிறோம்.

கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. (அரசியல் ஆக்கப்படும் பயத்தில்)அ‌தனால் தான் சோனியாவை சந்திக்கவில்லை’ என்றார்.

இந்திய தூதரக கவுன்சிலர் மகள் யு எஸ், சில் கைது

அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சலாக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா. இவர் மேற்படிப்புக்காக நியூயார்க் சென்றார். அங்குள்ள குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார்.

ஆனால் கிருத்திகா, அவரது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியே பற்றி தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருத்திகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக 24 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் விடுவிக்கப்பட்டார். மேலும் சிறையில் துன்புறுத்தியதாக கிருத்திகா தெரிவித்தார்.

இது தொடர்ப்பாக கடந்த 6-ந் தேதி நியூயார்க் நீதிமன்றத்தில் கிருத்திகா பிஸ்வாஸ் வக்கீல் ரவி பத்ரா மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி வக்கீல் ரவி பத்ரா தெரிவித்துள்ள செய்தியில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளியில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறாக நடந்தது என்றும் அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் அவர் மீது குற்றம் சுமத்தி பள்ளியில் இருந்து விலக்கி, சிறையில் வைத்தற்காக பள்ளியின் மீதுவழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tuesday, May 24, 2011

நாய் வாலை நிமிர்த்தலாம், ஆனால் ஜெயா? போராட்டத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி வரும் 7ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் துணை செயலாளர் மாரியப்பன், இந்திய மாணவர் சங்கம் தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை கட்டுப்படுத்திட தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

அதேபோல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தற்போது அமல்படுத்திட வலியுறுத்தியும், சமச்சீர் கல்வியை உடனடியாக முழுமையாக அமல்படுத்திடக் கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், அதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பிலும் வரும் ஜூன் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

நாள் வாடைகைக்கு! குழந்தைகள் !!

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடைகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை கையில் வைத்தபடி பிச்சை எடுப்பது, அதிகமாக உள்ளது.

பிச்சை எடுக்கும் இந்த பெண்கள் வைத்திருக்கும் குழந்தைகள், எப்போதும் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டே இருக்கின்றன. கையில் ரப்பர் பொருளை வைத்திருப்பது போல், குழந்தையை தொங்க விட்டபடி இந்த பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். கும்பலாக வரும் இந்த பெண்கள், வணிக வளாகத்திற்கு வருபவர்களை தொடர்ந்து சென்று, குழந்தையைக் காட்டி பிச்சை கேட்கின்றனர். பொதுமக்களும் இரக்கப்பட்டு பிச்சை போடுகின்றனர். இப்பெண்களிடம் உள்ள குழந்தைகள் குறித்து விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

இந்த கும்பல், தமிழகப் பகுதியான ஆக்கூரில் தங்கி, அங்கிருந்து பஸ் மூலம் காரைக்கால் வருவதாகவும், குழந்தைகளை, தங்கள் உறவினர்களிடம் நாள் வாடகைக்கு வாங்கி, பிச்சை எடுப்பதாகவும் தெரிகிறது. குழந்தைகளுக்கு, ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு மட்டும், தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இக்கொடுஞ்செயலைத் தடுக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்., சம்பத்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா.

Monday, May 23, 2011

சிக்கலில் சிக்கி தவிக்கும் அசின்!

ஹிந்தி பட உலகுக்கு சென்ற பிறகு அசின் மீது அங்கிருக்கும் மீடியாக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக அவரது தரப்பில் சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பு தளத்தில் அசின் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இந்த படத்தில் நடிக்க மறுத்தார். அந்த ஹீரோவுடன் நடிக்க மறுத்தார்... என பல முனை தாக்குதல்களை சமாளித்து கொண்டிருக்கிறாராம். இப்போது அவரை பற்றி புதிய சர்ச்சை. வாரத்துக்கு ஒரு மேக்கப்மேனை மாற்றுகிறார் என்பதுதான். தனது முக வெட்டுக்கு ஏற்றது போல் மேக்கப் செய்யத் தெரியவில்லை என கூறி மேக்கப் மேன்களை திடீரென மாற்றி விடுகிறாரம்.

இதுவரை அவர் நான்கு மேக்கப் மேன்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒருவரை மாற்றிய போது சர்ச்சை உருவானது. காரணம் அந்த குறிப்பிட்ட மேக்கப்மேன் பல ஆண்டுகளாக அமிதாப்பச்சனுக்கு மேக்கப் செய்தவர். இப்பிரச்னையை பாலிவுட் மீடியாக்கள் பெரிதாக்கி மேக்கப் மேனின் பேட்டியை வெளியிட முயற்சித்தது. ஆனால், அவரோ மீடியாக்களின் பிடியிலிருந்து விலகி, விலகி போகிறாராம்.

பார்வையாளர்கள் நேரம் முடிந்தும் அனுமதித்த சிறை அதிகாரிகள்

புதுடில்லி : திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி.,யும் தனது மகளுமான கனிமொழியை முன்னாள் முதல்வர் கருணாநிதி திகார் சிறையில் சந்தித்து பேசினார்.

சிறைச்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக ‌கருணாநிதி சென்றார். திகார் சிறைச்சாலையின் விதிமுறைப்படி 5 மணிக்கு அனைத்து சந்திப்புகளும் முடிந்து விடும். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு மாலையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கனிமொழியை சந்தித்த பின்னர் கருணாநிதி இன்று இரவே சென்னை திரும்புவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் சென்னை திரும்புவதற்காக விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று இரவு ஸ்டாலினும் டில்லி வர உள்ளதாக தெரிகிறது. டில்லிக்கு கருணாநிதியுடன் அழகிரியும் உடன் சென்றுள்ளார். ஏற்கனவே கனிமொழியின் கணவர் மற்றும் தாயார் ராஜாத்தி டில்லியில் உள்ளனர்.

Sunday, May 22, 2011

எதை செய்யப்போகிறார் இவர்! ஈழத்திற்கு..?

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் இலங்கைப் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவே முனைகின்றனர்.

கடந்த சட்டசபைத் தோ்தலிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா (அரசியல் லாபத்திற்கு) ஆகியோரின் கருத்துக்களை அந்த வகையில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். ஆயினும் அவர்களால் அதற்கு அப்பால் தமிழர் பிரச்சினையில் எதுவும் செய்ய முடியாது.

இதே ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் ஜெயலலிதா தோ்தலுக்கு முன் என்ன சொல்லியிருந்தாலும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலி ஆதரவு சக்திகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இருப்பதை மறந்து விடக்கூடாது.

அதே போன்று இந்திய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சரானது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும் விடயமாக நினைக்கலாம். ஆனால் இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மக்களும் தேர்தலோடு வாக்குருதிகளையும் மறந்து விடுவார்கள், இதுவே இன்றும், என்றும்.

எகிப்துக்கு! உதவி கரம் நீட்டும் அமெரிக்கா, சவூதி

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு முபாரக் பதவி விலகினார்.

தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் உள்ளது. இந்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட எகிப்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த சவுதி அரேபியா முன்வந்துள்ளது.

எகிப்துக்கு அந்நாடு ரூ.20 ஆயிரம் கோடி நிதிஉதவி அளிக்கிறது. இதில் மானியமும், கடனுதவியும் அடங்கும். இத்தகவலை எகிப்தின் ராணுவ கவுன்சில் தலைவர் உசேன் தத்தாவி தெரிவித்துள்ளார்.

இதே போன்று எகிப்துக்கு அமெரிக்காவும் ரூ.9 கோடி கடனுதவி அளிக்கிறது என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்பு சட்டமும், இந்திய தலையீடும்

கொழும்பு : இலங்கையின் உள்விவகாரங்களை தலையிடும் இந்தியாவின் போக்கை கண்டித்து, அந்நாட்டு கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இலங்கை வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் டில்லி வந்தார்.

இலங்கையில் அமைதி நடவடிக்கையை மேம்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, மத்திய அரசின் சார்பில் வற்புறுத்தப்பட்டது. இதற்கு, இலங்கை அரசின் ஆதரவு கட்சிகளான தேசப்பற்று தேசிய இயக்கம் மற்றும் ஜாதிகா விமுக்தி பெரமுனா ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

இது குறித்து தேசப்பற்று தேசிய இயக்க கட்சித் தலைவர் குணதாச அமரசேகரா குறிப்பிடுகையில், "இந்தியாவின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இல்லை' என்றார்.ஜாதிகா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திசநாயகே குறிப்பிடுகையில், "இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும்படி இந்தியா அறிவுரை கூறக்கூடாது. இது, இலங்கையின் உள்நாட்டு விவகாரம்' என்றார்.

* சிங்களன் எப்பதான் மதிச்சான் இந்தியாவை.

Saturday, May 21, 2011

அதிக மார்க்குக்காக, அட்மிஷனை தவிர்க்கும் அரசு பள்ளிகள் !!

கடந்த சில ஆண்டுகளாக, தேர்ச்சி சதவீதம் குறையும் அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, நடப்பாண்டு அதிகமான மாணவர் சேர்க்கையை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிர்த்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக சிறப்பு பயிற்சி வகுப்பு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தரும் ஆசிரியருக்கு ஊக்கப்பரிசு, அரசு பள்ளியிலும் சிறப்பு வகுப்பு என பள்ளி மாணவர்களின் தேர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளிகளுக்கு, அதற்கான காரணம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. கல்வி அதிகாரிகள் முன்னிலையில், அதற்கான விளக்கம் அளிக்க உத்தரவிடப்படுகிறது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பதற்காக, இந்நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அதிகமான மாணவர்களை வகுப்பில் சேர்க்க அரசு பள்ளிகள் தவிர்த்து விடுகின்றன. அதிக மாணவர்களை சேர்த்தால் தேர்ச்சி சதவீதம் குறைந்து, தேவையில்லாத பணி சுமையை ஏற்க வேண்டும் என கருதி தலைமை ஆசிரியர்கள் புதிய மாணவர் சேர்க்கையை குறைத்துக் கொள்வதாக பெற்றோர் புகார் தெரிவித்துவருகின்றனர்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு செல்லும்போது, அரசு பள்ளிகளில் "அட்மிஷன்' கிடைப்பதில்லை. பெற்றோர் சிலர் கூறுகையில்,"உங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் குழந்தையை சேருங்கள் என கூறி அரசு பள்ளிகளில் சேர்க்கை தர மறுக்கின்றனர். புதிதாக வேறு இடத்துக்கு குடிபெயரும்போது, வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் சேரலாம் என முயற்சித்தால் "அட்மிஷன்' கிடைப்பதில்லை,' என்றனர்.

வாக்குறுதி கொடுத்த வாஜ்பாய்! வறுமையில் மாணவன்?

புதுச்சேரி மாநிலம் செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குப்புராமன் (26). கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். மாணவர் குப்புராமன் விடுமுறை நாளில் மாடு மேய்ப்பது வழக்கம்.

கடந்த 1998ம் ஆண்டு விடுமுறை நாளில் குப்புராமன் ஆற்றங்கரையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, சங்கராபரணி ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதைக் கண்ட குப்புராமன் துணிச்சலாக ஆற்றில் குதித்து மூன்று சிறுமிகளையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான். இதற்காக அவருக்கு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி "வீரதீர செயல் விருது' டில்லியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் கையால் வழங்கப்பட்டது. சிறுவன் குப்புராமனின் அசாத்திய திறமைக்காகவும் வீரதீர செயலுக்கான விருது பெற்றதற்காகவும் அவருக்கு புதுச்சேரி அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. 10ம் வகுப்பு வரை படித்த குப்புராமன் மேலே படிக்காமல் பள்ளியை விட்டு நின்றான்.

கால ஓட்டத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வீரதீர சாதனை புரிந்த சிறுவனுக்கு இன்று 26 வயதாகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை சிறுவனின் படிப்பைப் பாதித்து, அவனது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. விளைவு... தற்போது செல்லிப்பட்டு பகுதியில் செங்கல் சூளையில் அவர் கூலி வேலை செய்யும் அவல நிலை அரங்கேறியுள்ளது. அன்று சாதனை புரியும் போது, சிறுவனைப் பாராட்டி மகிழ்ந்த அரசு, அதன் பிறகு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள குப்புராமன்.

மூன்று சிறுமிகளைக் காப்பாற்றிய போது, முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த எனது ஆசிரியர் ஸ்ரீராம், நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்தார். நான் 18 வயதைத் தாண்டிய போது, கல்வித்துறை இயக்குனராக இருந்த ராகேஷ் சந்திரா எனக்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்தார். பல முறை தலைமைச் செயலத்திற்குச் சென்று திரும்பிய அந்த "கோப்பு' தற்போது எங்கிருக்கிறது என்றே தெரிய வில்லை என்றார். குப்புராமனுக்கு அரசு வேலை வழங்குவதற்காக அனுப்பப்பட்ட கோப்பைக் கண்டெடுத்து தூசி தட்டி நடவடிக்கை எடுக்குமா ரங்கசாமி தலைமையிலான அரசு?

சூடான விவாதங்களில் பங்கேற்ப்பாரா, பயந்து ஒதுங்குவாரா?

சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்குவதற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடம் போதவில்லை என, கடந்த தி.மு.க., ஆட்சியில் 1,100 கோடி செலவில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. பணிகள் முழுமையாக முடியாத நிலையில், பணிகள் முடிக்கப்பட்ட ஒரு பகுதி கட்டடத்துக்கு மட்டும் சட்டப்பேரவை மற்றும் முதல்வர், துணை முதல்வர் சில அரசுத்துறை அலுவலகங்கள் மாற்றப்பட்டன.

கடந்த சட்டசபைக் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெற்றது. புதிய அரசு பொறுப்பேற்று உள்ள நிலைøயில், ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. திங்கள்கிழமை புதிய எம்.எல்.ஏ.,கள் பதவியேற்பு விழா அங்கு நடக்கிறது. 27ம் தேதி முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. தனது சொந்த ஊரான திருவாரூரில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி இக்கூட்டங்களில் பங்கேற்பாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. 1991ல் தி.மு.க., பலத்த தோல்வி அடைந்தபோது துறைமுகம் தொகுதியில், அவர் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 2001 தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்தபோது, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்தார்.

2006ல் அ.தி.மு.க., தோல்வி அடைந்தபோது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கிவிட்டு, சட்டசபைக்கு வராமல் ஜெயலலிதா இருந்தார். தற்போது, கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்பது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., மூத்த நிர்வாகி கூறும்போது, ""எம்.எல்.ஏ.,கள் பதவியேற்கும் திங்கள்கிழமை அவர் வர மாட்டார். மற்றொரு நாளில் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொள்வார்,'' எனக் கூறினார். சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்பதை அவர் தவிர்ப்பார் எனத் தெரிகிறது.

Friday, May 20, 2011

முருங்கையின் முக்கியத்துவம், ஆல் இன் ஒன்!

மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும். கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது.முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

கூடிய வரை கீரை வகைகளைச் சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருங்கள் முருங்கையில் தவசு முருங்கை, கொடி முருங்கை, நன்முருங்கை, காட்டு முருங்கை, கொடிக்கால் முருங்கை என்று பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் வீடுகளில் மரமாக இருக்கும் முருங்கையை நன்முருங்களை என்று நம் முன்னோர்கள் அழைத்து வந்துள்ளனர்.

முருங்கை மரத்தின் இலை, பூ, காய் ஆகியவை சிறந்த உணவாகப் பயன்படுகின்றன. இவை சிறந்த பத்திய உணவாகவும் கருதப்படுகின்றன. அதோடு முருங்கை மரத்தின் அடி முதல் முடி வரை அனைத்துப் பகுதிகளும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றன. முற்றிய விதைகளை நட்டோ அல்லது முற்றிய கிளைகளை வெட்டி நட்டோ முருங்கை மரத்தை இனவிருத்தி செய்யலாம் . முருங்கை மரம் சுமார் 9 மீட்டர் வரை வளரும். காற்றடித்தால் எளிதில் ஒடிந்துவிடும். முருங்கை மரம் வளர அதிக தண்ணீர் தேவையில்லை.

முருங்கை இலையில் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “சி”, இரும்பு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் “ஏ” பற்றாக்குறை தொடர்பான கண்நாய்கள் நீங்கும். கண்கள் குளிர்ச்சியடையும். பார்வை தெளிவடையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.

இன்ஜினியரிங் பகுதிநேரம் படிக்க, உள்நாடு, வெளிநாடு

இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ.,/பி.டெக்., படிப்பைப் படிக்க உதவும் வகையில் பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்கல்வி இயக்ககம் நடத்துகிறது.

கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர், வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகிய 9 கல்லூரிகளில் இதைப் படிக்கலாம். எந்த ஆண்டு படிக்க விரும்புகிறோமோ அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் படிக்க விரும்புவோருக்கான தகவல்களை எந்த இணைய தளங்களில் பெறலாம்?

www.nafsa.org (நிதி உதவி பற்றி அறிய)
www.chea.org (நிறுவனங்களின் அங்கீகாரம் பற்றி அறிய)
www.toefl.org (டோபல் தேர்வு பற்றி அறிய)
www.gre.org (ஜி.ஆர்.இ., தேர்வு பற்றியது)
www.ed.gov (மாணவர் விசா பற்றி அறிய)
www.gmac.com
www.ets.org
www.madras.sphynx.com

அம்மா ஆசியுடன் அஸ்தமிக்க போகும் புதுவை அரசு??

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்திசேகர், புருஷோத்த மன், பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார்.

அவர்,சட்டமன்ற தேர்தலில் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்த நாராயணசாமியையும், காங்கிரஸ் அரசையும் விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டோம். இன்று அது நடந்துள்ளது. அசூர பலத்தோடு இருந்த காங்கிரஸ் 7 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு சென்றுள்ளது.

தி.மு.க. 2 ஆக குறைந்துவிட்டது. என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக நானும், ஓம்சக்திசேகரும் கடினமாக பாடுபட்டோம். அம்மாவிடம் ரங்கசாமியை பற்றி கடவுள் பக்தி உள்ளவர், நாணயமானவர், நேர்மையானவர் என்றெல்லாம் எடுத்து சொன்னோம். இப்போது அதை நினைத்தால் எனக்கு வெட்கமாக உள்ளது.

நாம் ஏமாறலாம். அம்மா அளவில் ஏமாறுவதற்கு நாம் காரணமாக இருந்து விட்டோமே என்று வருத்தமாக உள்ளது. அரசியலில் நாணயமும், வாக்கு சுத்தமும் முக்கியமானது. துரோகத்தின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை நீண்ட நாளைக்கு நீடிக்காது. இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நடக்காது. இதனை அம்மா பார்த்து கொள்வார். ஆனால் நாம் அடுத்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

புதுவையில் உள்ள 23 தொகுதிகளிலும் தகுதி உள்ள வேட்பாளர்களை கண்டறிய வேண்டும். இப்போதில் இருந்தே பணிகளை தொடர வேண்டும். அவநம்பிக்கையோடு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று எம.எல்.ஏ.க்கள் வருத்தத்தில் உள்ளதாக கட்சியினர் சிலர் நினைக்கிறார்கள்.

எங்கள் 5 பேருக்கு எந்ததுளி வருத்தமும் கிடையாது.நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். அம்மா எங்களை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக (ஆட்சியை கவிழ்ப்பது) செயல்பட கூறியுள்ளார். அந்த பணியை முறையாக செய்வோம்’’ என்று பேசினார்.

கண்ணே கனிமொழியே உன் கைதுதான் ஆராரோ! கலைஞர் கவலை!!

சென்னை : கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டில்லி செல்லும் எண்ணம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ, அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன்” என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஒரு தந்தையா இருந்து நல்வழி காட்டி இருக்கலாமே.

Thursday, May 19, 2011

ரஜினியின் ப்ரஷ் medical ரிப்போர்ட்!?

சென்னை : நடிகர் ரஜினிகாந்திற்கு நெஞ்சில் இருந்த நீர்கோர்ப்பை அகற்ற, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் திருப்திகரமாக உள்ளது.

அடுத்த இரு தினங்களில் அவர் தனி வார்டுக்கு திரும்புவார், என்று ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ரஜினியின் மார்பில் அளவிற்கு அதிகமாக நீர்கோர்ப்பு இருந்தது. அதை அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் ஆகிய நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் உடல்நலம் திருப்திகரமாக உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த இரண்டு நாட்களில் தனி வார்டுக்கு திரும்புவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

விருதுகளை அள்ளி குவித்த ஆடுகளம்

டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகருகான தேசிய விருது பெற்றார் ஆடுகளம் நாயகன் தனுஷ். சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு தேசிய விருதுகள் பெற்றார் வெற்றிமாறன்.

ஆடுகளம் படத்தின் சிறந்த நடன அமைப்புக்கான விருதை பெற்றார் நடன இயக்குநர் தினேஷ்குமார்.

சிறந்த படத்திற்கான ‘சிவராம் கரந்த்’விருதையும் ஆடுகளம் பெற்றது. சிறந்த எடிட்டருக்கான விருதை இப்படத்திற்காக கிஷோர் பெற்றுள்ளார்.

மருத்துவத்தின் மகத்துவம், ஒனியன்!

ஆஸ்திரேலியாவில் உள்ளது சதர்ன் குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்.

அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் பெரிய வெங்காயத்தில் இருந்து எடுத்த சத்துக்களை எலிகளுக்குச் செலுத்தி மும்முரமாக ஆய்வு செய்தார்கள். ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்தன. அதே சத்துக்களை மனிதர்களுக்கும் செலுத்தி ஆய்வு செய்தார்கள். அதிலும் சில முடிவுகள் தெரிய வந்தன.

கொழுகொழு எலிகளையும், குண்டான மனிதர்களையும் ஒல்லியாக்கவல்ல சத்துகள் வெங்காயத்தில் இருக்கின்றன என்பதுதான் அதில் முக்கியமான முடிவு.

வெங்காயம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்துவிடுகிறதாம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் வெங்காயத்துக்கு மிகப் பெரிய பங்குண்டு. ரத்த அழுத்தம் சீராகிவிடுகிறதாம். கல்லீரல் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறதாம். வெங்காயத்தைப் பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சரி,சரி... கண்ணைக் கசக்காதீர்கள்! நிறுத்திவிடுகிறோம்.

அல்லி ராணியின் அடாவடி! அடக்குவது யாரோ...??

சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 23 ம் தேதி மதியம் 12:30க்கு சட்டசபை கூடுகிறது. இந்நாளில் எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்படும் பின்னர் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர், துணைசபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன் 3 ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் தோட்டத்தில் பல கோடி செலவில் கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகத்திற்கு செல்ல மாட்டேன் என ஜெ., கூறியிருந்தார் அதன்படி பழையை செயின்ட்ஜார்ஜ் கோட்டைப புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., காலத்தில் சுமார் ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட அந்த தலைமை செயலகத்தை ஜெ., சர்கஸ் கூடாரம் என்று வர்ணித்திருந்தார். இந்த கட்டட பணிக்கும், தலைமை செயலகம் மாற்றத்திற்கும் ஜெ., எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதன்படி தான் முதல்வராக பொறுப்பேற்றதும், ஜெ., மீண்டும் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் இந்த சபை மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 18, 2011

இந்திய பணியாளர்களால், பிரிட்டன் குடியேற்ற துறை கவலை?

லண்டன் : கம்பெனிகள் மூலம் வருகை தரும் இந்திய தொழில் நுட்ப பணியாளர்கள் குறித்து, பிரிட்டன் பொதுக்கணக்கு குழு கவலை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உள்ள நிறுவனங்கள், அதிகளவில், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரவழைத்து தங்கள் வேலைகளை முடித்து கொள்கின்றன. டாடா கன்சல்டன்சி நிறுவனம், விப்ரோ, எச்.சி.எல்., மகேந்திரா, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் அதிக அளவில் பிரிட்டனில் பணிபுரிகின்றனர்.

வேலைக்கு வரும் பணியாளர்கள் பலர், விசா காலம் முடிந்தும், பிரிட்டனில் தங்கி விடுகின்றனர். குடியேற்றத்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை' என, பொதுக்கணக்கு குழு தெரிவித்துள்ளது.பிரிட்டனில், விசா காலம் முடிந்து, ஒரு லட்சத்து, 81 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும், இவர்களது வருகையை குறைக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் குடியேற்றத்துறை தவறி விட்டதாகவும், பொதுக்கணக்கு குழு தலைவர் மார்க்கரெட் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.

வருகிற 31 ல் புகையிலை தினம், சிலவு ரூ 832 கோடி!! குவைத்தில்

புகையிலை இல்லாத உலக தினம் வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி குவைத்தில் நடந்த ஒரு விழாவில் அந்த நாட்டு அரசு துணைச் செயலாளர் யூசுப் அலி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, குவைத் நாட்டு மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலம் கெடுகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குவைத் நாட்டில் புகைப்பிடிக்க மக்கள் ஆண்டுக்கு ரூ.832 கோடி செலவு செய்கின்றனர். குவைத்காரர் ஒருவர் ஆண்டுக்கு 2330 சிகரெட் புகைக்கிறார். புகையிலை இல்லாத உலக தினத்தை அனுசரிப்பதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நிதிஷ்குமாரை பார்த்து பிரமிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர்

உலகிலேயே குழந்தைகள் நோய்வாய்பட்டு இறப்பது இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. மருந்து கம்பெனிகளின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்று பல நிறைவான பணிகள் இருந்தாலும் குழந்தைகள் இறப்பு அதிகமாகவே உள்ளது.

எனவே, வரும் 10 ஆண்டுகளை நோய் தடுப்பூசி தயாரிக்கும் ஆண்டாக மாற்ற வேண்டும். இந்தியாவில் பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குழந்தைகள் நோய் தடுப்பூசி திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். பீகாரில் அவருக்கு உள்ள செல்வாக்கு என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நிதிஷ்குமார் போன்ற தொலைநோக்கு உள்ள தலைவர்கள் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர் கொண்டு வெற்றிகரமாக செயல்படுவார்கள். இவரை போன்ற தலைவர்களை தான் மக்கள் விரும்புகிறார்கள். இத்தகைய தலைவர்கள் வெறும் வாக்குறுதி அளிப்பதுடன் நின்று விடுவதில்லை. அதை செயல்படுத்துவதிலும் முனைப்போடு உள்ளனர் என்றார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பில்கேட்ஸ்சின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தான் அதிக அளவு நிதி உதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டு முயற்சி., ஆரோக்கியமான தமிழ் சினிமா!!

முன்பெல்லாம், ஒரு நடிகர் நடிக்கும் படத்தில், இன்னொரு நடிகரும் நடிக்க வேண்டி இருந்தால் அல்லது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்று இயக்குநர் கதை ‌சொன்னால் முதலில் ஹீரோக்கள் மனசுக்குள் கேட்பது, நமக்கு பாட்டு இருக்குமா, டூயட் வருமா, பைட் இருக்குமா, எத்தனை சீன் நமக்கு வரும். அவருக்கு எத்தனை சீன், வெயிட் ரோல் யாருக்கு இப்படி மண்டை குடைய கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் பாலிவுட்டில் சத்தம் இல்லாமல் பெரிய நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றியடைந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஹிருத்திக், அபிஷேக் நடித்த "தூம்-2", அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடித்த "3-இடியட்ஸ்", சல்மான் கான், சஞ்சய் தத் நடித்த "சாஜன்" என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது இந்த பாணி தமிழ் சினிமாவிலும் தொடர்கிறது.

சமீபத்தில் வெளிவந்த, வெளிவர இருக்கும் படங்களில் இதை காணலாம். ஆர்யா நடித்த "பாஸ் என்ற பாஸ்கரன்" படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்தார். "கோ" படத்தில் ஜீவாவுடன் அஜ்மலும், ஒரு பாட்டில் கார்த்தி, ஜெயம் ரவி, தமன்னா, அதர்வா என்று பெரிய நட்சத்திரங்களும் பங்கேற்றன. தற்போது வெளிவந்த "வானம்" திரைப்படத்தில் சிம்புவும், பரத்தும் நடித்திருந்தனர்.

இதுதவிர விரைவில் வெளிவர இருக்கும் "அவன் இவன்" படத்தில் ஆர்யா-விஷால் சேர்ந்து நடித்திருக்கின்றனர். "வந்தான் வென்றான்" படத்தில் ஜீவாவுடன், நந்தா முக்கிய ‌ரோலில் நடித்திருக்கிறார். ஷங்கரின் "நண்பன்" (3-இடியட்ஸ் ரீ-மேக்) படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். சிம்பு நடிக்கும் "ஒஸ்தி" படத்தில் சிம்புவின் பிரதர் ரோலில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். அதேபோல் லிங்குசாமியின் "வேட்டை" படத்தில் ஆர்யாவுடன் மாதவனும், ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கும் புதிய படத்தில் சுப்ரமணியபுரம் ஜெய், விமல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படியாக தமிழ் சினிமா ஒரு ஆ‌ராக்கியமான பாதையை நோக்கி, நடிகர்களுக்குள் ஒரு நட்புறவை வளர்க்கும் விதமாக செல்கிறது. இனி புதிய களங்களோடும், புதிய கதைகளோடும் இன்னும் வளரும் தமிழ் சினிமா!

Tuesday, May 17, 2011

காதலே போ போ! படங்களே (பணம்) வா வா!!

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பாவனா இப்போது காணாமல் போய்விட்டார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் கோபிசந்தை, பாவனா காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் நடிகர்கள்தான் நிலைத்து நின்று ரொம்ப காலத்திற்கு நடிக்கின்றனர். ஆனால் கதாநாயகிகளோ சீக்கிரமாகவே காணாமல் போய் விடுகின்றனர். இதற்கு காரணம் அவர்களது மார்க்கெட் மற்றும் திருமணம் போன்றவைகள் தான். திருமணம் செய்து கொண்ட பின்னர் கணவர், குடும்பம் குழந்தை குட்டி என்று அவர்களது வாழ்க்கை முடங்கி போய்விடுகிறது.

சினிமாவில் நிறைய காதல் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். ஆனால் நிஜத்தில் காதலை பற்றி ஒன்றுமே தெரியாது. காதலுக்காக பலர் உயிரை விடுவது உடம்பை கத்தி, பிளேடு போன்றவற்றால் கீருவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவர். இதுதெல்லாம் முட்டாள்தனமான செயல் எனக்கு இதுபோன்ற செயல்கள் சுத்தமாக பிடிக்காது. காதலித்தால் வாழ்வு நாசாமாகி போய்விடும். நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும், அதற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கலைஞர் பார்த்துக்கொள்வார் என்று பேட்டி கொடுத்தவர், தற்போது?

கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக இருந்து வந்தனர்.

இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தூண்டுதலின்பேரில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் இருந்து வருகிறது. எனது சொத்துகள் தே.மு.தி.க.வினரால் தாக்கப்பட்டும் வருகின்றன.

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,தே.மு.தி.க.வினரே காரணமாக இருப்பார்கள். ஜனநாயக நெறிமுறைப்படி பிரசாரம் செய்த எனக்கு தே.மு.தி.கவினர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மிரட்டல், தாக்குதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற எனக்கும், எனது குடும்பத்துக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபடும் தே.மு.தி.க.வினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் வடிவேலு சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், டி.ஜி.பி. லத்திகாசரணிடம் கொடுத்தார்.

நாத்திகம், ஆத்திகம் பற்றி பேசும் நீலப்பட நடிகை!

ரஞ்சிதாவுடன் கட்டிலில் கும்மாளம் போட்டு வீடியோவில் சிக்கிய நித்தியானந்தா முக்தியடையந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16.05.2011 அன்று சத் சங்கம் நடத்தினார். அதன்பின் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், நாத்திக நாராசம் ஒழியனும் அப்போது தான் தமிழகம் செழிக்கும். நாத்திகம் இளைஞர்களிடம் அதிகமாகயிருப்பதால் தான் தமிழகம் குடி, போதை, கொலை,மன அழுத்தத்திற்க்கு அதிகளவு பாதிக்கப்பட்டுயிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாக தகவல் சொன்னவர்.

இதனை போக்க தான் நாத்திகம் ஒழிய வேண்டும் என்கிறோம். இனிமேல் நாத்திகம் ஒழியும், ஆத்திகம் வளரும் அதற்கான காலம் கணிந்துள்ளது என்றார்.

தேர்வுத்துறை எச்சரிக்கை!! மாணவர்கள் கவனத்திக்கு?

கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருவதாக யாராவது கூறினால், மாணவர்கள் ஏமாற வேண்டாம்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு, அதிக மதிப்பெண்களுடன் போலியாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மூலம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் முயற்சித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர். இவர்களுக்கு, போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்துக் கொடுத்த ஆசாமிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, போலி மதிப்பெண் பட்டியல் ஊடுருவிவிடக்கூடாது என்பதில், தேர்வுத்துறை எச்சரிக்கையாக இருக்கிறது. இது குறித்து, தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது அணுகி, கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறினால், அதை நம்பி, மாணவர்கள் ஏமாற வேண்டாம்' என, கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய மாணவர்களை பின்பற்றசொல்லும், அமெரிக்க அதிபர்

அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.

எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்நாட்டு போட்டியை சமாளித்தால் போதும் என்ற நிலை இனி இருக்காது. வெளிநாட்டிலிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழல் உருவாகி வருகிறது.

இந்திய, சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர். இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது நீங்கள் நாஷ்விலே பகுதியைச் சேர்ந்தவருடனோ அல்லது அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவருடனோ போட்டியிடப் போவதில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கு அனைத்து அமெரிக்க மாணவர்களும் தயாராக வேண்டும். வெறுமனே ஒரு சில அமெரிக்க மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். மாணவர்கள் வெறும் படிப்புடன் நின்றுவிடாமல் பட்டயப் படிப்போ அல்லது தொழில் படிப்போ கூடுதலாக கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. இவையில்லாமல் வெற்றி பெற முடியாது. போட்டிகளை எதிர்கொள்வதும் கடினம் என்றார்.

இலங்கை சுங்க இலாக்காவுக்கு கிலி பிடிக்கச்செய்த போஸ்டர் !

கொழும்பு : சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட புலி ஆதரவு பிரசார போஸ்டர் மற்றும் பேனர்களை, இலங்கை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையிலிருந்து கனடா நாட்டு கப்பல் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு வரப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேனர்கள், இலங்கை அரசுக்கு எதிரான போஸ்டர்கள், ஆகியவற்றை அச்சத்துடன் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த போஸ்டர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்டதாக கருதப்படுகிறது.

புதிய சாதனை நிகழ்த்திய ஜோடி!

புதுடில்லி : ஐ.பி.எல்., சீசன் 4 போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இப்போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்ஷ் மற்றும் கில் கிறிஸ்ட், 98 பந்துகளில் 206 ரன்கள் எடுத்து ஐ.பி.எல் தொடரில் புதிய சாதனை படைத்தனர். இதில் கில்கிறிஸ்ட் 55 பந்துகளில் 106 ரன்களும், மார்ஷ் 49 பந்துகளில் 79 ரன்களும் எடுத்தது குறிப்பிட தக்கது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!