Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, March 3, 2011

வார்த்தையில் வண்ணமிடும் தமிழக கங்.,

தமிழகத்தில் காங்கிரஸ் தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது, விரைவில் காமராஜர் ஆட்சி, காங்கிரசை முதன்மை கட்சி ஆக்குவோம்' - இவை எல்லாம் தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள். ஆனால் தற்போது தி.மு.க., கூட்டணியில் அக்கட்சியின் நிலை, சொல்லித் தெரியவேண்டியதில்லை. "பாரம்பரிய பட்டத்து யானை, தன் பாகனின் பசிக்காக பிச்சை எடுப்பது போல, காங்கிரசின் நிலை உள்ளது' என, கடந்த 1991-96 அ.தி.மு.க., ஆட்சியின் போது, சட்டசபை நிகழ்வுகள் குறித்து, பீட்டர் அல்போன்ஸ் வர்ணித்தார். அவர் உதிர்த்த வார்த்தைகள் தற்போது கனக்கச்சிதமாக அக்கட்சிக்கு பொருந்தும்.

புதிய கட்சிகள்: கடந்த சட்டசபை தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட தே.மு.தி.க.,வின் கூட்டணி நிலைப்பாட்டை, கடந்த சில வாரங்களுக்கு முன் வரை இரு திராவிட கட்சிகளும் பதட்டத்துடன் கண்காணித்தன. கடந்த லோக்சபா தேர்தலில் முளைத்த கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை, தங்கள் அணிக்கு இழுப்பதில் இரு கட்சிகளும் முனைப்பு காட்டின. இப்போட்டியில் தி.மு.க., வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் 125 ஆண்டு பாரம்பரிய கட்சியின் நிலை?

கடந்த 2004 முதல் தி.மு.க., கூட்டணியில் தொடரும் காங்., 90 "சீட்' என, நிபந்தனை விதித்து, 60 "சீட்' கிடைத்தால் கூட போதும் என்ற ரீதியில் கையேந்தி நிற்கிறது. இதில் "கற்பனை குதிரை மீது சவாரி, தேவையற்ற கூடுதல் சுமை' (தி.க., தலைவர் வீரமணி) என்பது போன்ற வசவுகளையும் தாங்கிக் கொண்டு, கிடைத்ததை பெற வேண்டிய நிலை.

காங்., இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என, முழங்கும் தலைவர்கள் இதை எப்படி பொறுத்துக் கொள்கின்றனர் என்பது தான் தொண்டர்களுக்கு விடை தெரியாத வினா. கடந்த இரு தேர்தல்களில் தனித்து நின்ற தே.மு.தி.க., பலத்தை நிரூபித்துள்ளது. ஆனால் "13 லட்சம் இளைஞர்களை கட்சியில் இணைத்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் காங்., தலைவர்கள், மாற்று நிலை எடுக்க யோசிப்பது ஏன்?' என கேட்கின்றனர் தொண்டர்கள். "ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி உடன்பாட்டில் காங்., கையெழுத்திட்டவுடன் "கோட்டா சிஸ்டம்' என்ற பெயரில் தொகுதிகளை கூறு போட, கோஷ்டி தலைவர்கள் தயங்குவதில்லை. அப்போது, "தன்னுடைய கோஷ்டி தான் பலமானது' என புள்ளி விவரங்களை, தமிழகத்தின் நிலை தெரியாத "மேலிட தலைவர்களிடம்' அடுக்குவர். இதை நம்பி கோஷ்டிகளுக்கு, "சீட்'களை பிரித்து தருவர். ஆனால் தற்போதைய இக்கட்டான நிலையில், கோஷ்டி தலைவர்கள் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர். கூட்டணி என்றால், "சீட்' பிடிக்க மல்லுக்கட்டும் கோஷ்டி தலைவர்கள் கட்சியின் தன்மானத்தை காக்க முன்வருவதில்லை.

தனித்து நிற்கும் பட்சத்தில், ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் ஐந்து தொகுதிகளுக்கு பொறுப்பேற்று பணி செய்தால், 30 தொகுதிகளை கைப்பற்றலாம். ஆனால், இந்த விஷப்பரீட்சைக்கு தலைவர்கள் தயாரில்லை. இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அத்தலைவர்களின் செல்வாக்கு என்ன என்பது, வெட்ட வெளிச்சமாகிவிடும். அவர்களின் கோஷம் எல்லாம் "தேர்தல் நேரத்து துணுக்கு தோரணங்கள் தான்' என்கின்றனர் தொண்டர்கள் ஆதங்கத்துடன்.

பலமுறை தனித்து நின்று ஜெய்த்தவர்கள், தற்போது நின்று ஜெய்ப்பதர்க்கு?

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!