கடந்த 2006- தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில், இலவச டிவி, காஸ் அடுப்பு, இரண்டு ஏக்கர் நிலம் போன்ற இலவச திட்டங்களை அறிவித்தது. அ.தி.மு.க., கூட்டணி சார்பிலும், தாலிக்கு தங்கம், பிளஸ் 2 முடிப்பவர்களுக்கு கணினி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவில், இலவச திட்டங்களை கூடுதலாக அறிவித்த தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.
விளைவு, வாக்குறுதிகளான, இலவச திட்டங்களை செயல்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாயை, அரசு கஜானாவில் இருந்து செலவு செய்ய வேண்டியதாயிற்று. இதனால் மற்ற வளர்ச்சி பணிகளுக்காக வெளிநாடுகளில் கடன் வாங்கியதால், இன்று தமிழகத்தின் கடன் சுமை பல கோடியை தாண்டியுள்ளது.
அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், வாய்க்கு வந்த இலவச திட்டங்களை அறிவிக்கின்றன. அதற்காக அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட, கைப்பணம் செலவு ஆவதில்லை. வெற்றி பெற்றால் காலியாவது அரசு கஜானாத்தான். இதனால், நாட்டின் தொழில், வேலை வாய்ப்பு வளர்ச்சி, போதிய நிதியின்றி பாதிக்கப்படுகின்றன. தமிழக தேர்தலில், இலவச திட்ட வாக்குறுதிகள் இனியும் தொடராமல் இருக்க, தேர்தல் கமிஷன் போதிய தடை உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இதுதான் சரியான தீர்வாக இருக்கும்.
2 comments :
சரியான நேரத்தில் சரியான விஷயத்தை
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00
Post a Comment