Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 31, 2012

கூடங்குளம் அணு உலை! 10 தீவிரவாதிகள் கைது !?

திருநெல்வேலி: இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை முறியடிக்க ராமர் பாலம் என்ற பொய்யை பரப்பி அத்திட்டத்தை சீர்குலைத்தார்கள். ஆனால் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் ஏற்படும் தற்கால, எதிர்கால அபாயங்களைக் குறித்து அஞ்சி அப்பகுதி சார்ந்த மக்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் நடத்திவரும் மனம் தளராமல் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தை ஆரம்பம் முதலே நாடு மற்றும் மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாத இந்து முன்னணி போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தேசப்பற்று என்ற போலியான போர்வையை போர்த்திக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் நீதிக்காக போராடும் ஆர்வலர்கள் மீது ஹிந்து முன்னணி பாசிச வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக போலீசார், ஹிந்துத்துவா பாசிச தீவிரவாதிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.

அனுமதி மறுக்கப்பட்ட மு க ஸ்டாலின் !!

சட்டசபையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, அவையில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பான பேரவை உரிமைக் குழுவின் அறிக்கை சட்டசபையில் இன்று (30.01.2012) தாக்கல் செய்யப்பட்டது.

இதனை உடனடியாக எடுத்துக்கொண்ட சபாநாயகர் டி.ஜெயக்குமார், உரிமைக்குழுவின் பரிந்துரையின்படி 10 நாட்களுக்கு டி.ஆர்.பி. ராஜா பேரவை கூட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் பேரவை உறுப்பினர் சம்பளம் உள்ளிட்ட, எந்தவித ஆதாயங்களையும் பெற முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.


இதையடுத்து உரிமைக்குழுவின் அறிக்கை குறித்தும், தண்டனையை குறைப்பது பற்றியும் திமுக சட்டமன்ற குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நயனின் சம்பளத்தை கேட்டு புலம்பலில் பலபேர் !!

தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார். இந்நிலையில் பிரபுதேவா-நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1.5 கோ‌டியாம். நயன்தாராவின் இந்த சம்பள ரேட்டை கேட்டு முன்னணி நடிகைகள் பலர் வாயடைத்து போய் உள்ளனராம். நடிப்பிற்கு முழுக்கு போட்டு போன நடிகையை திருப்பி அழைத்து வந்து இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே என்று பலர் புலம்பி வருகின்றனர்.

Monday, January 30, 2012

செல்வமிக்க ஜப்பானும் அதன் மக்கள் தொகையும்!?

ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும். இதே சூழல் தொடர்ந்தால், 2110ல், 4 கோடியே 29 லட்சமாகி விடும். உலகில், ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம். 2010 கணக்கெடுப்பின்படி, அங்கு சராசரி மனித ஆயுள், 86.39 ஆண்டுகள். இது, 2060ல், பெண்களைப் பொறுத்தவரை, 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய, 79.64 ஆண்டுகளில் இருந்து, 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முக்கியமாக, தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால், அதில் ஈடுபடுவதில்லை. அதோடு, கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில், 19 ஆயிரம் பேர் பலியாயினர்.,சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள், குழந்தைகளைப் பெறுவதை விரும்பவில்லை.

ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத நிற வெறி !!

லண்டன்: கறுப்பு இனத்தவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் பாரபட்சம் காண்பிப்பதாக பிரபல இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது புதிய திரைப்படமான ‘ரெட் டைல்ஸ்’ முழுமையடைய 20 வருடங்கள் தேவைப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த இனரீதியான பாரபட்சம்தான் என லூக்காஸ் ‘டெய்லி ஷோ’ வுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

‘ரெட் டைல்ஸ்’ திரைப்படத்தில் நடித்த அனைவருமே கறுப்பர்கள் ஆவர். ஆகையால் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் வேண்டுமென்றே பாரபட்சம் காண்பித்தன. இத்தகையதொரு திரைப்படத்திற்கு மார்க்கெட்டிங் செய்வது சிரமமானது என பலரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஹாலிவுட்டில் விநியோகதஸ்தர்கள் இத்திரைப்படத்தை வாங்க தயாராகவில்லை என்பதால் லூக்காஸ் தனது நிறுவனத்திடமே விநியோக பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

Sunday, January 29, 2012

தொடரை இழந்த இந்திய அணிக்கு புதிய கேப்டன்!!

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.

முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன் என்ற முறையில் தன்னால் சேவக்கை கட்டுப்படுத்த இயலவில்லை என தோனி புலம்புகிறார். துவக்க வீரராக பொறுப்பாக "பேட்' செய்யவில்லை என புகார் கூறுகிறார். மறுபக்கம் தோனியின் கேப்டன் உத்திகளை ஏற்க மறுக்கிறார் சேவக். வீரர்கள் தேர்வு, "பீல்டிங்' வியூகம் போன்றவற்றில் தோனி தவறு செய்வதாக குறிப்பிடுகிறார். துணை கேப்டன் என்ற முறையில் தன்னிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். இவர்களது மோதல், அணியில் பிளவை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து 2013ல் ஓய்வு பெறப் போவதாக தோனி தன்னிச்øயாக அறிவித்தது தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, 2013ல் நடக்க வேண்டிய விஷயம் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை, என்றார்., தோனிக்கு பாடம் புகட்டும் வகையில், அவரை டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்க, பி.சி.சி.ஐ, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கதாநாயகன் இல்லாமல் பூனம் கவுரின் கலக்கல் படம்!!

பொதுவாக சினிமா என்றாலே ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று தான் இருக்கும்.

ஆனால் இப்போது உருவாகி ஒரு புதிய படத்திற்கு ஹீரோவே கிடையாதாம். களவாணி படங்களை தயாரித்த நசீர் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்தபடத்திற்கு வதம் என்று பெயரிட்டுள்ளனர்.

சின்னத்திரையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பெரிய திரைக்கு வருகிறார் புதுமுகம் மதிவாணன். படத்தின் கதை முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி உருவாவதால், இந்தபடத்திற்கு ஹீரோ கிடையாதாம்.

ஹீரோயினாக பூனம் கவுர் நடிக்கிறார். இவருடன் பாய்ஸ் மணிகண்டன், டைரக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த தேவா இசையமைக்கிறார். கொடைக்கானல் பகுதியில் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

Saturday, January 28, 2012

சாக்லேட் பிரியர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி!!

தினசரி சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது அதிக அளவில் சாக்லேட் திண்பவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்குதல் குறையும் என ஸ்பெயின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சாக்லேட்டுகளில் கோகோ கலக்கப்படுகிறது. அதில், ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது.

இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறு களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தவை. எனவே, சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோய் தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் குடல் புற்றுநோய்க்கு ஆண்டு தோறும் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரின் சர்ச்சையும்! புதிய திருப்பமும்!!

இந்தியாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி, கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து, கூகுள், யாகூ உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், "பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை, இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால், இந்த முயற்சி, எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால் என, பலர் கொதித்தெழுந்தனர். இறுதியில், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், அத்தகைய தணிக்கைக்கு சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

இவ்விவகாரத்தில், புதிய திருப்பமாக, "டுவிட்டர்' நிறுவனம், நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு, செய்திகளைத் தணிக்கை செய்யப் போவதாக அறிவித்தது. மேலும், தணிக்கை செய்யப்பட்டதற்கான காரணம், அந்தந்த நாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் தணிக்கைக் கோரிக்கைகள் ஆகியவற்றையும் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, இணைய உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதே நேரம், "டுவிட்டர்' பயன்படுத்துவோர் மத்தியில், பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இதையடுத்து, அவர்கள், "டுவிட்டரின்' இந்த திட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

சிக்கலில் இருந்து மீளுமா நண்பன் !?

ஒரு படம் சுமாராக ஓடினால் அதற்கு பலவழிகளிருந்தும் தொல்லைகள் கொடுப்பார்கள் ஆனால் இது பலரிடமிருந்து பாராட்டு பெற்றதால் மேலும் சிக்கலை உண்டாக்க இதுபோல் சில போராட்ட அறிவிப்பு.

இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஆண்டி, பண்டார நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் இதுகூட இப்படத்திற்கு பப்ளிசிட்டிதான்.

Friday, January 27, 2012

750 மில்லியன் டாலர் நிதி உதவி! மைக்ரோசாப்ட் நிறுவனர்!!

டாவோஸ், ஜன. 28: சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.

ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்களுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பிற்கு, பில் கேட்ஸ் இந்த நிதியை அளித்துள்ளார். உடனடியாக பணத்தைப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது.

பொருளாதார நிலை தற்போது கடுமையாக இருந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் எந்த பிடித்தமும் செய்ய முடியாது என்று பில் கேட்ஸ் கூறினார்.

மத சாயத்துடன் களத்தில் குதிக்கும் ப ஜ க !

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (27.01.2012) வெளியிடப்பட்டது.

இந்த தேர்தல் அறிக்கையில், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று, வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்டின் கோடானு கோடி மக்களின் கொன்று குவித்துவிட்டு, இன்னும் இந்த பரதேசி கும்பல் ராமனுக்கு கோயில் கட்டப்போகிறார்கலாம். ஓட்டு வாங்கி அரியணையில் அமர இந்த கபட நாடகம் ஆடுகிறது வந்தேறி பார்ப்பன கட்சிகள், மக்களை பிரித்தள்வதுதானே பார்ப்பன சாஸ்த்திரம்., இது இப்போதல்ல தொன்று தொட்டு உள்ளது இவர்களிடம்.

இந்த பரதேசி கும்பலின் காவி நாடகத்தை மக்களும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள்., நாம்தான் விழிப்புடன் இருந்து இவர்களை இனம் கண்டு ஒதுக்கி தள்ளவேண்டும்.

கொசுத்தொல்லையிளிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள

இப்போது குளிர்காலம் என்றாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. பெரியவர்களை விட சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சின்ன கொசுதான் என்றாலும், அதனால் பெரிய பெரிய நோய்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இந்த கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?

* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசு வலை கட்டுவதோடு, ஜன்னல் களிலும் வலை பொருத்தலாம்.

* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் வசிக்கும் பகுதியில் கொசுக்கள் அதிகளவில் காணப்பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனை, அலர்ஜியை ஏற்படுத்தி விடலாம். அதனால் தரமான-பாதுகாப்பான கொசுவர்த்தியை தேர்வு செய்யுங்கள்.

* டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். அதனால், இந்த நேரங்களில் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியம். குறிப்பாக, இந்த நேரங்களில் மேற்படி கொசுக்கள் குழந்தைகளை கடிக்காமல் பாதுகாப்பது முக்கியம்.

Thursday, January 26, 2012

ஓரம் கட்டப்பட்டவர் இன்று உற்சாக துள்ளலில் ப்ரியா(அம்)மணி!!

ராசியில்லாத நடிகை என்று ஓரம் கட்டப்பட்டவர் ப்ரியாமணி, பருத்தி வீரன் படம் மூலம் முன்னணி நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் பளிச்சிடாததாலும், புதிய பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாததாலும் தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை மீண்டும் ராசியில்லா நடிகைகள் பட்டியலில் இணைத்து விட்டனர் அம்மணியை.

அதேநேரம் அம்மணி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிப் படங்களில் வெற்றி நாயகியாக உலா வந்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் ப்ரியாமணியின் அசத்தலான நடிப்பில் கன்னடத்தில் கோ கோ படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் எதிர்பார்த்ததை விட ஆஹா ஓஹோவென்று ஓடிக் கொண்டிருப்பதாலும் பட தயாரிப்பாளர்களும் வருசையாக வந்துகொண்டு இருப்பதாலும் உற்சாக துள்ளலில் இருக்கிறாராம் ப்ரியாமணி.

காவலர்களை அனுப்பி காதலன் தந்த பொருளை தேட வைத்த ஜெயா?

சென்னை: வீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்வதற்காக, போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் 4 முதல் 5 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன் முன்பு போயஸ் கார்டனில் வைத்திருந்த விலை மதிப்பு மிக்க (மோடி கொடுத்த அன்பு பரிசு)காணவில்லை, அதை தேடும் நோக்குடன் ஜெயா காவலர்களை சசிகலா வீட்டுக்கு அனுப்பி தேடச்சொன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் தன்னிடமிருந்து ஜெயாவை மோடி பிரித்து விடுவார் என்ற நோக்கில் மோடி தந்த பரிசை சசிகலா ஆட்களை வைத்து அதை களவாட வைத்திருக்கலாம் என்று ஜெயா நினைத்திருக்க கூடும் ஆதலால் சசிகலாவை ஒதுக்க இதுவும் ஒரு காரணம் என்றார் போயஸ் விசுவாசி.

எந்த வயதில் மூளையின் திறன் பாதிக்கப்படும்! ஆய்வு தகவல் !?

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ளது.

45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்தப்பட்ட பத்து வருடங்களில் இவர்களில் எல்லா வயதுக்காரர்களுக்குமே நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் போன்றவை குறைந்து போயிருந்தன.

அதிக வயது உடையவர்களிடையே இவ்வகையான திறன்கள் குறையும் வேகம் அதிகமாக இருந்தது.

ஆனால் இந்த ஆய்வில் தெரியவந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் கூட மூளையின் திறன்கள் குறைந்துபோவது கண்டுபிடிக்கப்பட்டது தான்.

மூன்று சதவீதத்துக்கும் அதிகமான ஒரு திறன் இழப்பு இந்த வயதுக்காரர்களிடம் கூட காணப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

மூளையின் திறன்கள் குறைந்து போவது என்பது அறுபது வயதில்தான் ஆரம்பிகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சின்ன அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.

ஆனால் அந்த முடிவுகளை பிழையாகக் காட்டுவதாக தற்போதைய ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.

முந்தைய ஆய்வுகளும் தற்போதைய ஆய்வும் உடன்படுகிற ஒரு விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் கொண்ட வாழ்க்கை முறைக்கும் டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகலுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

Wednesday, January 25, 2012

சரக்கு அடித்துட்டு உளறியாலும் ஒழுங்காத்தான் உளற்றார் கேப்டன்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.

இந்தியா தனது 63வது குடியரசு தினத்தை இன்றைய தினம் கொண்டாடுகிறது. ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரித்தாளுகின்றன மதவாத கட்சிகள், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்தன.

ஆனால் இந்த திட்டங்கள் வெறும் காகித அறிவிப்புகளாகவே இருந்துள்ளன. இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.

உண்மையான ஜனநாயகம் மலர்ந்திருக்குமானால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அரசியல் தலைவர்கள் இந்த குடியரசு தின கொண்டாடத்தையே குண்டு துளைக்காத மேடைகளில் கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? நக்சல்பாரி இயக்கத்தினர் கையில் இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி இன்னும் இருப்பது ஏன்? பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களையும், பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது ஏன்?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து துறைகளிலும் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல்மயமாக உள்ளன., இவற்றையெல்லாம் உற்று நோக்குகிறபோது எந்த ஜனநாயகம் உண்மையான ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டுமோ, அவர்களுக்கு பயன்படாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே சமூகப் பொருளாதார ரீதியில் சம வாய்ப்பு சமுதாயம் ஏற்படவும், ஜனநாயகம் காப்பாற்றப்படவும் இந்த குடியரசு தின விழாவில் உறுதி சூளுரை மேற்கொள்வோம். அனைத்து தரப்பினருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நண்பனில் விஜய்யுடன் நடித்தது பற்றி இலியானா

நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தது பற்றி ஐதராபாத்தில் இலியானா அளித்த பேட்டி வருமாறு: நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.

இந்தியில் வந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழாக்கமே நண்பன். இதில் நடிப்பதற்காக 3 இடியட்ஸ் படத்தை பல தடவை பார்த்தேன். ஆனால் அதில் நடித்த கரீனாகபூர் நடிப்பை காப்பி அடித்து நடிக்கவில்லை.

அவர் சாயல் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் ஸ்டைலில் நடித்தேன். படம் பார்த்தவர்கள் கரீனாகபூருடன் ஒப்பிட்டு பேசவில்லை. என் ஸ்டைலில் நடித்திருப்பதாக பாராட்டினார்கள். கேடி படத்துக்கு பின் 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதை அமையட்டும் என்று காத்து இருந்தேன்.

ஷங்கர், விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடிக்க அழைத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் திறமையானவர். அனுஷ்கா தனது நடிப்பை பாராட்டினார். சக நடிகையிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது. காமெடி, கல்வி, காதல் எல்லாம் படத்தில் இருந்தது.

Tuesday, January 24, 2012

ஐரோப்பா ஆசியாவை தாக்கக்கூடும் சூரிய புயல்! நாசா விஞ்ஞானிகள்!!

வாஷிங்டன், ஜன.25: சூரிய குடும்பத்தில் மையமான சூரியன் கடந்த 7 ஆண்டுகளாக வெப்ப கதிர்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் அதிகளவிலான வெப்ப கதிர்கள் தற்போது சூரியனில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூரிய புயல் என்று நிபுணர்களால் கூறப்படும்.

இந்த வெப்ப கதிர் வெளிப்பாடு மணிக்கு 93 மில்லியன் மைல்கள் வேகத்தில் ஞாயிரன்று வெளிப்பட்டு ஒரு மணி நேரத்திலேயே பூமியை வந்தடைந்த்தது. இதன் தாக்கம் புதன் கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்படுகிறது.

வடதுருவத்தில் இதன் பாதிப்புகளை உணரமுடியும் என்று கூறியுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், வடஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய நாடுகளிலும் இதன் பாதிப்பை உணரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் துருவ பகுதிகளில் பயணம் செய்யக்கூடிய விமானங்களின் தொலை தொடர்பு தகவல் பரிமாற்றங்கள் பாதிக்கப்படக்கூடும். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் ஆகியவை இதனால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது., ஆகையால் இந்த விண்வெளி வீரர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.

வாய்ப்பு பற்றி கேட்டால் வாய்கிழிய விளக்கம் அளிக்கும் ஸ்ரேயா!

கடந்த ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த ஸ்ரேயாவை சமீப காலமாக எந்த படத்திலும் காண முடியவில்லை. அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தமிழில் கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார்.

வாய்ப்பில்லாமல் இருப்பது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால் வாய்கிழிய விளக்கம் அளிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன். நல்ல நடிகைகளுக்கு மார்க்கெட் என்ற வரையறையே கிடையாது. எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை.

சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. இப்போது பணக்கஷ்டம் இல்லை. எனவே இனிமேல் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு வேலை. ஒரு பாட்டுக்கு ஆடுவது, விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், சேவை அமைப்புகள் என நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

அதிகம் பேசினால் ஆபத்து ! ஆய்வில் !!

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்புபோல் மாறிக் கொண்டிருக்கிறது, செல்போன்! இது எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதிக நேரம் பேசினால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை மருத்துவ பேராசிரியர் நீலம் சாதியும், டாக்டர் தனஸ்ரீ சிப்லங்கரும் இணைந்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 50 பேரின் காது கேட்கும் திறனை ஆய்வுசெய்தனர்.

ஆய்வுக்குட் பட்டவர்களில் 68 சதவீதம் பேர் 21 முதல் 25 வயது இளைஞர்கள். அவர்களில் 16 பேர் பெண்கள். ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 23 பேர், (அதாவது 46 சதவீதத்தினர்) செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

செல்போனில் பேசுபவர்கள் மட்டுமன்றி, அதை பயன்படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர்களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. "இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள்.

வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள்'' என்றும் டாக்டர் நீலம் சாதி தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு உள்ளான 50 பேர்களில் 20 பேர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 19 பேர் வலதுகாதில்வைத்து பேசியவர்கள்.

மீதி 11 பேர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள். இவர்களில் 13 பேர் காது வலியாலும், 11 பேர் காது அடைப்பினாலும், 19 பேர் காது சரியாகக் கேட்காமலும், 7 பேர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Monday, January 23, 2012

கமல் கை குலுக்கியதும் உற்சாகத்தின் உச்சிக்கு சென்ற விஜய்!

இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக்கான இப்படம், ஹிட்டாகியுள்ளது. இதனால் விஜய் ஏக குஷியில் இருக்கிறார்.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், அமெரிக்காவில் சூட்டிங்கை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய அவருக்கு நண்பன் படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் இப்படத்தை பார்த்தனர்.

படத்தை பார்த்து முடித்ததும் விஜய்யை கமல் கை குலுக்கி வெகுவாக பாராட்டியிருக்கிறார். ஏற்கனவே படம் ஹிட்டான மகிழ்ச்சி, இப்போது கமலின் பாராட்டு என உற்சாகத்தில் மிதக்கிறார் விஜய்.

தேர்தலில் போட்டியிட குண்டு வெடிப்பு தீவிரவாதி மனு தாக்கல் ?

பலியா (உத்தரப் பிரதேசம்),  மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரி, தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், மாலேகாவ் 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் 12 பேரை போலீஸôர் கைது செய்தனர். இதில் முதல் எதிரியான லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய் (60) குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இப்போது மகாராஷ்டிரத்தின் ராய்கார்க்கில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாய்ரியா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

தீவிரவாதி ரமேஷ் உபாத்யாய் சார்பில் அவரது மகன் விஷால், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அகில பாரத ஹிந்துத்துவா மகா சபா சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

(மதவெறி- பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உயர்த்திப் பிடித்து போராளிகள் களம் இறங்குவது அவசியமாகும்.)

வெளிநாட்டில் உயர் கல்வி! இந்திய மாணவர்களின் மனமாற்றம்!!

லண்டன்: ஆண்டுதோறும், உயர் கல்விக்காக, இந்திய மாணவர்கள் பிரிட்டனுக்குச் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்கின்றனர். ஆனால், தற்போது, இந்தியாவில் இருந்தபடியே பிரிட்டனில் படிப்பதற்குத் தான் மாணவர்கள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து, பிரிட்டனின் உயர்கல்வி புள்ளிவிவர ஏஜென்சி (எச்.இ.எஸ்.ஏ.,) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 2010- 11ம் கல்வியாண்டில், 8 ஆயிரத்து 340 இந்திய மாணவர்கள், இந்தியாவில் இருந்தபடியே பிரிட்டனில் படித்துள்ள தாகவும், இது கடந்தாண்டுகளை விட மிக அதிகம் எனவும் தெரிவித்தார். இந்த உயர்கல்வியில், தொலை தூரக் கல்வி மற்றும் இந்தியாவில் கிடைக்கும் பிரிட்டன் படிப்புகள் இரண்டும் அடங்கும்.பிரிட்டனில், கல்விக்கான செலவுகள் அதிகமாக உள்ளதால், அவற்றைத் தவிர்ப்பதற்காகத் தான், இந்திய மாணவர்கள் இந்த முடிவை எடுக்கின்றனர்.

அதோடு,படிப்பு முடிந்த பின், அதற்கான செலவுகளை, மேலும் இரண்டு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து, ஏதாவது வேலை பார்த்து அடைப்பதற்காக, முன்பு, "போஸ்ட் விசா ஒர்க்' என்ற விசா தரப்பட்டது. ஆனால், தற் போதைய பிரதமர் டேவிட் கேமரூன், அந்த விசாவை இந்தாண்டு ஏப்ரல் முதல் ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதுவும், மாணவர்களின் முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.தற்போதைய புள்ளிவிவரப்படி, இந்த கல்வியாண்டில் மட்டும், 45 ஆயிரம் இந்திய மாணவர்கள், பிரிட்டனில் படித்து வருகின்றனர்.

Sunday, January 22, 2012

குழந்தைகளை பொத்தி வளர்க்கும் பெற்றோர்களா ?

லண்டன்: உங்கள் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?

வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் "டி'யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். "என்ன மனதா?' என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான்.

வைட்டமின் "டி'யால் தோலுக்கு நல்லது என்று மட்டும்தான் இதுவரை கூறிவந்தார்கள். இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறார்களை ஆய்வு செய்தார்கள். அவர்களுடைய உடலில் வைட்டமின் "டி' எந்த அளவு இருக்கிறது, அவர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள் என்று கணக்கிட்டு ஒப்பு நோக்கினார்கள். அதிக நேரம் வெயிலில் இருந்து விளையாடிய, வேலை செய்த சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது.

அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல் எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது வைட்டமின் "டி' அளவு குறைவாக இருந்தது தெரிந்தது.

வைட்டமின் "டி'யிலேயே 2 வகை உண்டு. டி-2, டி-3 என்று இரண்டு. அதில் டி-3 குறைவாக இருந்தால் மனச் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. வெயிலில் மட்டும் அல்ல வாளை மீனிலும் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. (அதிருஷ்டம் செய்தவர்கள்,அசைவர்கள் போங்க)

எந்திரனை மிஞ்சியதா நண்பன்! box office report!!

நண்பன் படம் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதாக இணயதளங்களில் வெளியீடு கொண்டு இருக்கிறார்கள் அது தவறு என்று box office உண்மையான கணக்கை வெளியுட்டுள்ளது.

எந்திரன் oneweek collection = 69 crores . only tamil.

நண்பன் Oneweek collection = 20 crores. only tamil.

எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. நண்பன் படம் 600 அரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் எந்திரனுக்கு 3000 அரங்குகளில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரையரங்க வெளியீட்டின் மூலம் மட்டுமே எந்திரனுக்கு ரூ 375 கோடி கிடைத்தது. ஆனால் நண்பன் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது.

எந்திரன், நண்பன் இரண்டும் ஒரே இயக்குனர், பட வெற்றிக்கு ஷங்கர் என்ற திறமையான இயக்குநரின் கைவண்ணத்துக்கு கிடைத்த பெருமை. அதுமட்டுமல்ல, இந்தக் கதை அப்படி. இதே படத்தை ஒஸ்தி மாதிரி கூட பண்ணியிருக்க முடியும். ஆனால் இயக்குநரின் ஆளுமை மிக்க இயக்கமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. விஜய் மட்டுமல்லாமல், சத்யராஜ், சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் என பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் பணியாற்றியிருந்தது முக்கிய காரணம்.

ஆக எது எப்படியோ கோடிகளை தொட்டுவிட்ட எந்திரன், நண்பன்.,இதெல்லாம் யாருக்கு இதில் நடித்த நடிகர்கள், இயக்குனர் மற்றும் தயாரிப்பாலர்களுக்கு மட்டும்தான் நிச்சயமாக நமக்கு அல்ல.

Saturday, January 21, 2012

அனைவரையும் கவர்ந்த பாடலுக்கு எதிர்ப்பும் மறுப்பும் A R R

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ஏக் திவானா தா. தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீ-மேக் ஆன இந்தப்படத்தை, கவுதம் மேனனே இந்தியிலும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஹோசன்னா என்ற பாடலுக்கு சில கிறிஸ்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த படமாக இருந்தாலும், அந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் முன் பலமுறை ஆய்வு செய்து தான் இசையமைப்பேன். அதேபோல் தான் ஹோசன்னா பாடலுக்கும், இசையமைக்கும் முன் என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின்னர் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். அதுமட்டுமல்ல இந்தியில் வெளிவருவதற்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பல விருதுகளும் இந்தபாட்டுக்கு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஒருசிலர் இந்த பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை இப்பாடல் யார் மனதையும் புண்படும்படியாக அமைந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு நான் பாடல் வரிகள் எழுதியுள்ளேன். ஆனால் ரஹ்மானை போன்று ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. யாரும் மனதையும் புண்படும்படியாக அவர் நடந்து கொள்ள மாட்டார். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

குஜராத் மோ (கே) டியின் போ (கே) லி நாடகம் !?

கோத்ரா: ஸத்பாவனா உண்ணாவிரத தொடரின் ஒரு பகுதியாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோ(கே)டி பாதுகாப்புடன் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரங்கேற்றினார்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்று 10-வது ஆண்டு நிறைவுற இன்னும் ஒரு மாதம் மீதமிருக்கையில் உண்ணாவிரதத்தை மோ(கே)டி நடத்தியுள்ளார்.

அதேவேளையில், அமைதி, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்த காவி வெறியாட்டத்திற்கு தலைமை தாங்கிய மோடி உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி உள்ளிட்ட 5 பேரை மோ(கே)டியின் போலீஸ் கைது செய்தது.

இனப்படுகொலைக்கு பலியானவர்களுக்கு நீதிக்கோரி கூட்டம் நடத்த முயன்றதால் இவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.

மாநில ரிசர்வ் போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத பந்தலுக்கு காலை 11 மணிக்கு நரேந்திர மோடி வந்தார். அவரை அவரது அமைச்சரவை சகாக்கள் வரவேற்றனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இத்துடன் பல்வேறு மதத்தைச் சேர்ந்த மத குருமார்களும் பந்தலுக்கு வந்து மோடியை வாழ்த்தினர். இதற்காக இப்போது 1,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற 50 சேதக் கமாண்டர்களும் மேடையிலும், சுற்றுப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்தனர். (குஜராத் இனப்படுகொலையை மறைக்க மோ (கே)டி போலி நாடகமாடுகிறான் என்றார் ஒரு சமூக ஆர்வலர்.)

எதிர்ப்பில் "கேரளா நாட்டு பெண்களுடனே"

திரையுலகில் தமிழ் வெறி பிடித்து திரியும் சில இணை, துணை, படைப்பாளிகள்., "பூ", "களவாணி" படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்!

காரணம்? இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் முதலில் "தேநீர் விடுதி" எனும் பெயரில் படம் இயக்கி வெளிவந்தது. தற்போது "கேரள நாட்டிளம் பெண்களுடனே" எனும் பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார் எனும் விளம்பரம் பார்த்து தான் இந்த கடுப்பும் கண்டிப்பும்! குமரன் இயக்கும் படங்களின் டைட்டில்கள் எல்லாம் மலையாளிகள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது என்பது தான் போராட்டம் நடத்தும் திட்டத்துக்கான காரணமாம்!

நிஜமான காரணமே இது தானா?! இல்லை., இசையமைப்பாளர் இயக்குநராகி வருகிறாரே என்பது தான் காரணமா?!

Friday, January 20, 2012

ஒய் திஸ் கொலவெறி ஜனவரியில் அதிகம் லண்டனில் ?

லண்டன்,: ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் அதிக நேரம் (சுமார் 15 மணி நேரம்) ஒன்றாகத் தங்க நேர்கிறது. (இந்த ஒரு காரணம் போதாதா, சண்டை ஏற்பட?) மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள் வெடிக்கின்றன.

பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கணவனுக்கு எவ்வளவு குறைவு என்பதை மனைவி அறியவும், செலவழிக்கும் ஆற்றல் மனைவியிடம் எவ்வளவு அதிகம் என்று கணவன் உணரவும் இந்த மாதம் பெரிதும் உதவுகிறது. எனவே பொருளாதாரப் பிரச்னைகளாலேயே பூசல் தொடங்குகிறது. வெயில் காலங்களில் ஒரு நாளில் 10 மணி நேரம்தான் இருவரும் சேர்ந்து வீடு தங்குகிறார்கள். அதிலும் பெரும்பாலும் தூங்குவதில் போய்விடுவதால் சண்டைக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை.

ஜனவரி மாதத்தில் சராசரியாக 38% வீடுகளில் மோதல்கள் ஏற்படுகின்றன. 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே 48% அளவுக்கு மோதல்கள் முற்றுகின்றன. ஜனவரியில்தான் மன உளைச்சல்கள் அதிகம் என்று பெரும்பாலான தம்பதியர் குறிப்பிட்டனர்.

வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65% தம்பதியர் விவாகரத்துவரைகூட போகின்றனர். இனி இவரோடு வாழக்கூடாது என்று புத்தாண்டிலேயே தீர்மானித்துவிடுவதாக 7% பேர் ஒப்புக்கொண்டனர். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளவே முடிவதில்லை என்று 59% பேர் கூறியுள்ளனர். ஜனவரி மாதத்தில் குளிர் அதிகம், சூரிய வெளிச்சம் குறைவு என்பதால் சோம்பலும் மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவிக்கிறார்.

பண முடை, வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் நேரம் அதிகரிப்பு, சோம்பல், உற்சாகம் இன்மை, அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் கணவன், மனைவியரிடையே பூசல்கள் அடிக்கடி தோன்றுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

கொலை வெறியை இதனால் ஜனவரியை "ஜனவெறி' என்றால் தவறு என்ன?

முதல் 10 இடங்களில் இரு இந்தியர்கள் !!

துபை: முதல் பத்து இடங்களைப் பிடித்த பேட்ஸ்மென்கள் வரிசையில் சச்சின் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே இடத்தை ஜாஹீர் கானும் பவுலர்கள் வரிசையில் பிடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று துபையில் ஐசிசி வீரர்கள் வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இரு பிரிவுகளிலும் டாப் 10 பட்டியிலில் இடம்பெற்ற இந்தியர்கள் இவர்களிருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்வியால் துவண்டு போய் உள்ளது, தோல்வியிலிருந்து மீளுமா இந்திய அணி?

காதல் கசந்ததால் குழப்பத்தில் நயன்தாரா!

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் 2009-ல் காதல் மலர்ந்தது. அப்போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இதுவரை திருமணம் நடக்காமல் இழுத்தடிப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

படங்களில் நடிப்பதையும் நிறுத்தினார். இதனிடையே முதல் மனைவி ரமலத்தின் குழந்தைகளுடன் பிரபுதேவா தொடர்பு வைத்துள்ளது பிடிக்காததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பிரபுதேவாவை தனது வீட்டுக்குள் விடாமல் வெளியில் பல மணி நேரம் நயன்தாரா காக்க வைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவை வதந்திகள் என்றும் விரைவில் நயன்தாராவுடன் திருமணம் நடக்கும் என்றும் பிரபுதேவா அறிவித்தார்.

இந்த நிலையில் பிரபுதேவா தற்போது அக்ஷயகுமாரை வைத்து இந்திப்படம் இயக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அவர் திருமணத்துக்கு காலம் கடத்துவதால் நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் 5 சினிமா நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க நயன்தாராவை அணுகி உள்ளதாகவும், மீண்டும் நடிக்கலாமா என்று அவர் யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thursday, January 19, 2012

ஏலம் விடப்பட்ட தொலைபேசியை கண்டுபிடித்தவரின் கடிதம்

கன்கார்டு(அமெரி்க்கா): ‌‌அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தனது பெற்றோருக்கு டெலிபோன் கண்டுபிடித்தது தொடர்பாக ‌எழுதிய கடிதத்திற்கு 92 ஆயிரம் ‌டாலர் கிடைத்தது.

கடந்த டிசம்பரில் தொடங்கிய ஏலம் நேற்று முடிவடைந்தது. டெலிபோனை கண்டுபிடித்த கிரஹாம் பெல் அது குறித்து தனது பெற்றோருக்கு சில விபரங்களை ‌‌தெரிவித்திருந்தார்.

இக்கடிதம் ‌‌டெலிபோன் கண்டிபிடிப்பிற்கான பேட்டன்ட் உரிமம் கிடைத்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவா செய்தி கேட்டால் கொந்தளிக்கும் த்ரிஷா !!

2012 புத்தாண்டை வரவேற்க தன் நட்பு வட்டாரத்துடன் கோவாவில் முகாமிட்டிருந்தார் நடிகை த்ரிஷா. நட்பு வட்டாரத்துடன் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடி இருக்கிறார்.

அந்த பார்ட்டியில் ரானா டகுபதியும் கலந்து கொண்டார் என்பது தான் சர்‌ச்சையைக் கிளப்ப காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் பார்ட்டியின் போது, த்ரிஷாவும் - ரானாவும் அதிக நெருக்கத்துடன் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாக அதுவே அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக செய்தியாக வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த த்ரிஷா விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காத குறையாக குமுறி வருகிறாராம். இது குறித்து யாராவது அவரிடம் பேசினால், ஆமாம் நானும் ரானாவும் கோவா சென்றிருந்தோம். அதற்கு என்ன இப்போ..? அவரை எனக்கு 10 ஆண்டுகளாக தெரியும். என் சிறந்த நண்பர் அவர், மேலும் எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர் உண்டு. அதனால் அடிக்கடி ஒன்றாக இருக்க நேரிடுகிறது. இதை ஏன் தவறாகப் பேச வேண்டும் என கொந்தளித்து கொக்கரிக்கிறார் அம்மணி என கூறுகிறது டோலிவுட்.

முருங்கையின் முக்கியத்துவம்

சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்.

இத்தகைய உடல் அமைப்பை கொண்டவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.

Wednesday, January 18, 2012

வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறும் வாய்க்கொழுப்பு நடிகர்?

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. தி.மு.க. தோழமைக் கட்சிகளை ஆதரித்து, நடிகர் வடிவேலு நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் க. விஜயனுக்கு ஆதரவாக நத்தம் பஸ் நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகக் கூட்டத்தைக் கூட்டியதாக வடிவேலு மற்றும் தி.மு.க. வேட்பாளர் க. விஜயன் மீது 143 மற்றும் 158 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நத்தம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, இருவரும் ஆஜராயினர்.

இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 14-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். பின்னர் நடிகர் வடிவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கு மற்றும் தற்போதைய மாநில அரசின் ஆட்சி தொடர்பாகக் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. விரைவில் உங்களை ஹீரோவாக வந்து சந்திக்கிறேன். தொடர்ந்து மக்களை சிரிக்க வைப்பேன் என்று கூறினார்.

வழக்குகளால் வாய்யடைத்த கொலை வெறியன் !!

அஹ்மதாபாத்:குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுனர் கமலா பெனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.

இதற்கு மோடியும், பா.ஜ.கவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் பெனிவாலின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டி மோடி அரசு உயர்நீதிமன்றத்தை அணுகியது. முதல்வர் மற்றும் அரசிடம் கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்ததாகவும், ஆளுநர் பாரபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் மோடியின் அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக,கடந்த அக்டோபர் மாதம், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர்.

இதனால்,இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் மோடி அரசின் மனுவும் தள்ளுபடிச் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மோ(கே)டிக்கு பலத்த அடியாகும்.,வழக்குகளால் வாய்யடைத்த போனான் இந்த கொலை வெறியன் !!

மும்முரமாக துப்பாக்கி குண்டுகளுடன் விஜய்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்ட விஜய், துப்பாக்கி படம் பற்றியும், படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும். இந்தபடம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான். படத்தின் கதையை அற்புதமாக கொண்டு வந்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கியில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய ஹிட்டாகும் என்று எங்களுக்கு தெரியும். முதல்வன் படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

குளிர் சாதனப்பெட்டி அவசியமில்லா இன்சுலின் கண்டுபிடிப்பு

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவையில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதாரண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போகாத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கெட்டுப் போகாதபடி மாற்றி அமைத்துள்ளனர்.

இந்த புதிய மருந்துக்கு டைகார்பா இன்சுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சாதாரண அறை வெப்ப நிலையில் வைத்திருக்கலாம். இதே வெப்ப நிலையில் ஒரு சில ஆண்டுகள் இருந்தாலும் மருந்து தனது தன்மையை இழக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, January 17, 2012

பொறுப்பான பதவியும் பொறுப்பற்ற நீதி மன்றமும் !?

புதுடெல்லி: பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்திப் பெற்றதோ(famous) இகழ்ச்சிக்குரியதோ(infamous) அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர் உள்பட 20 பேருக்கு எதிரான சதித்திட்டம் குறித்து மறுவிசாரணை நடத்தவேண்டும் என கோரி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்த வேளையில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தை தெரிவித்துள்ளது.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும் வேளையில், இவ்வழக்கு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பான பிரசித்திப்பெற்ற வழக்காகும் என அரசு சோலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்த பொழுது நீதிபதிகள் இந்த பாரபட்சமான கருத்தை வெளியிட்டனர். பின்னர் இவ்வழக்கு வருகிற மார்ச் மாதம் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கு பிரபலமாகும் அளவுக்கு என்ன உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது ஒரு சம்பவம் மட்டுமே.தொடர்புடைய கட்சிதாரர்கள் நீதிமன்றத்தில் உள்ளனர். இது பிரசித்திப் பெற்றதோ, இகழ்ச்சிக்குரியதோ அல்ல. இவ்வழக்கில் சில கட்சிதாரர்கள் தங்களுடைய பதிலை பதிவுச்செய்யவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

க்ரிமினல் சதித்திட்டத்தை மறுவிசாரணைச் செய்யாமலிருக்க காரணம் ஏதேனும் இருந்தால் வழக்கை மீண்டும் விசாரணை செய்வதற்கு முன்பு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க அத்வானி உள்ளிட்டவர்களிடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான சதித்திட்டம் தீட்டிய குற்றத்தை நீக்கிய கீழ்நீதிமன்ற தீர்ப்பை 2010 மே மாதம் 21-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதிச்செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான இதரக் குற்றங்கள் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வேளையில் உத்தரபிரதேச முதல்வராக பதவி வகித்த கல்யாண்சிங், சங்க்பரிவார தலைவர்களான எல்.கே.அத்வானி, பால்தாக்கரே, உமாபாரதி, சதீஷ் ப்ரதான், சி.ஆர்.பன்சால், முரளிமனோகர் ஜோஷி, வினய்கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதாம்பரா, டி.ஹெச்.டால்மியா, மஹந்த் அவைத்யநாத், ஆர்.வி.வேதாந்தி, பரமஹம்ஸ் ராமச்சந்திரதாஸ், ஜகதீஷ் முன்னி மகராஜ், பி.எல்.சர்மா, நித்ய கோபால்தாஸ், தர்மதாஸ், சதீஷ் கர், மொரேஷ்வார் ஸாவே ஆகியோர் மீது சதித்திட்டம் தீட்டிய குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கமல் நடித்த பாத்திரத்தில் நரேன்

ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “முகமூடி”. இந்த படத்தின் வில்லனாக நடிப்பவர் நரேன்.

அடுத்ததாக கமல் நடிப்பில் வெளியான “காக்கிச் சட்டை” படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போவதாக தெரிகிறது.

காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியமுள்ள ஒரு இளைஞன் சந்திக்கும் இன்னல்களை, சில திருப்புமுனைகளுடன் காட்டிய படம் “காக்கிச்சட்டை”.

இந்த படத்தில் நடிப்பது பற்றி கேட்ட போது நரேன் “கமல் சார் நடித்த கதாபத்திரத்தில் நடிக்கப் போகிறேன். இதை ந்வ்வித குறையில்லாமல் செய்ய வேண்டும்” என்று கூறினாராம்.

முகமூடி படத்திற்காக நரேன் கடுமையான் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பது காக்கிச்சட்டை படத்திற்கும் பொருந்தும் என ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்

Monday, January 16, 2012

டாப்சியை கண்டு தயங்கும் இயக்குனர்கள் !

தமிழில் டாப்சி நடித்த வந்தான் வென்றான் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ணவே ஆளில்லை.

இதனால் கொழுக்மொழுக்கென்ற தனது உடல்கட்டுதான் தனது வாய்ப்புகளை தடுக்கிறது என்று கருதிய டாப்சி, சில மாதங்களாக கடினமாக டயட்ஸ் இருந்து உடம்பை ஸ்லிம்மாக்கினார்.

ஆனால் கொழுகொழு நடிகைகளையே பார்த்து பழக்கப்பட்ட கோடம்பாக்க இயக்குநர்கள், கதையுடன் டாப்சியை தேடிச்சென்றபோது ஒட்டடை குச்சி மாதிரி நின்று கொண்டிருந்தாராம்.

இதனால் டாப்சிக்காக கதை பண்ணி சென்ற இயக்குநர்கள்கூட இப்போது அவரது தோற்றத்தைக்கண்டு ஓட்டம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில், இந்த மாதிரி உடல்கட்டு இந்திக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று சிலர் அட்வைஸ் செய்ய, மும்பைக்கு சென்று முகாமிட்டிருக்கிறார் டாப்சி.

அரைக்கீரையை பற்றி அறிவோமா

இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.

நான்கு இதழ்களைக் கொண்ட இவை நீர்பகுதிகளில் அதிகம் வளர்வதால் இதனை நீராரை எனவும் அழைக்கின்றனர் .

இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Sunday, January 15, 2012

கவர்ச்சிகரமான எஸ் எம் எஸ் ரொம்ப கவனம்! ஓர் எச்சரிக்கை!!

சென்னை: அந்த நகரை சேர்ந்த அரசு அதிகாரியின் மகன் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு பெண்ணிடம் நட்பு வயப்பட்டார். கொடைக்கானலில் சந்திக்க விரும்புவதாக அப்பெண்ணிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி சென்றார். அவரை அழைத்தது பணம் பறிப்புக் கும்பல் என அங்கு சென்ற போதுதான் தெரிந்தது. பின் அக்கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டார்.

மதுரை வாலிபர் செந்தில்: கிருஷ்ணன் மொபைல் போனில் உங்களுக்கு ஏழரை லட்சம் பவுன்ட் (இந்திய மதிப்பு ரூ.5.50 கோடி) பரிசு தொகை விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., தகவல் வந்தது. பரிசுதொகை வழங்க ரூ.ஐந்தரை லட்சம் பண பரிவர்த்தனை செலவுக்கு கொடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.

அவரும் அத்தொகையை இரு தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை. பின்னர் ஏமாற்றப்பட்டது தெரிந்து புகார் செய்தார். மொபைல் போன், இன்டர்நெட், கிரெடிட், ஏ.டி.எம்., கார்டுகள் மூலம் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நவீன மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. அறுபது சதவீத இளைஞர்கள் மொபைல் போன்களில், ஆபாச படங்களை டவுன் லோடு செய்கின்றனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஒரு வசனத்தால் திண்டாடும் நண்பன் படம் ?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படம், கடந்த 12ம் தேதி, தமிழகம் முழுவதும் ரிலீசானது.

சேலம் நகரில், 11 தியேட்டர்களில், "நண்பன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் குவிந்தனர்.

"எங்கள் தலைவர் பற்றிய இழிவான வசனத்தை நீக்க வேண்டும் எனக்கூறி தியேட்டர் முன் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது; போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில், கட்சியினர் சிலர், ஆத்திரத்தில் தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தி வெளியே இழுத்து வந்தனர்.

போலீஸ் துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் போலீஸார், தியேட்டர் முன் குவிக்கப்பட்டனர். பதட்டம் அதிகரித்ததையடுத்து, "தியேட்டரில் மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என, தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சியினர் கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை தொடர்ந்து ‌போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.

Saturday, January 14, 2012

பழைய செல்போன்களுக்கு பணம் பெற்றுக்கொள்ளும் வசதி ஏ டி எம் மில்!

லாஸ்வேகாஸ்: 'ஏ.டி.எம்.' எந்திரங்கள் மூலம் பணம் மற்றும் தங்க காசுகள், தங்க கட்டிகள் மட்டும் பெற முடியும் என நினைக்காதீர்கள். தற்போது பழைய செல்போன்கள் எம்.பி.3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றை விற்பனை செய்து தரும் மையமாகவும் 'ஏ.டி.எம்.' எந்திரம் திகழ்கிறது.

இதற்காக அதிநவீன 'ஏ.டி.எம்.' எந்திரம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரானிக்ஸ் ஏ.டி.எம். எந்திரம் ஒரு 'கப் போர்டு' அளவே உள்ளது. அதில், தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. அதில், உலோகத்தினால் ஆன பெரிய வாய் பகுதி உள்ளது. அதன் வழியாகதான் செல்போன்கள், சிறிய அளவு கம்ப்யூட்டர்கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்றவற்றை உள்ளே செலுத்த வேண்டும்.

இந்த எந்திரத்தின் 'நெட்வொர்க்' தொடர்பு நூற்றுக்கணக்கான எலெக்ட்ரானிக் கம்பெனிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விற்பனை செய்ய விரும்பும் செல்போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யும். அவற்றில் எந்த விலைக்கு விற்பனை செய்ய விரும்புகிறோமோ அந்த தொகைக்குரிய பட்டனை அழுத்தினால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த புதிய வகை ஏ.டி.எம். எந்திரம் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த சர்வதேச வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

N R I களை பதற வைத்த இணையதள செய்தி !!

மும்பை: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உலகளாவிய வருமானத்தில் 30 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளதாக இணையளங்களிலும், மின்னஞ்சல்களிலும் உலா வந்த புரளிச் செய்தி என்.ஆர்.ஐக்களை பதறவைத்தது.

ஜெ பெக்(jpeg)இமேஜ் வடிவிலான இச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாளிதழில் இதுத்தொடர்பான எச்செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் உலகாளாவிய(worldwide incom) வருமானத்தில் 30 சதவீத வரிவிதிக்கப்படும் தகவலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிகடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடந்த பிரவாசி பாரதீய திவஸ்(PMD)யில் வெளியிட்டதாகவும் அந்த புரளிச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுவாக இதுபோன்ற முக்கியமான முடிவுகள், அறிவிப்புகள் பொது நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் அறிவிக்கக் கூடாது. பாராளுமன்றத்தில் அதுவும் நிதிஅமைச்சர் தான் முறையாக அறிவிக்கவேண்டும். முதலீட்டாளர்களுக்கு விரோதப்போக்கான சூழல் இருக்கிறது என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூற்றால் ஆத்திரமடைந்த ரவி இவ்வாறு கூறியிருக்ககூடும் என்று கூறுகிறார்கள். அந்த விழாவில் ரவியாலும் மற்ற அமைச்சர்களாலும் அவமானப்பட்ட சிலரே வெளிநாடுவாழ் இந்தியர்களை கலங்கடிக்க இவ்வாறு புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

என்.ஆர்.ஐக்களின் சேமிப்பாக கடந்த ஆண்டு 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்தியாவுக்கு வந்துள்ளது. வருமான வரி, முதலீடு தொடர்பான அந்நிய செலாவணி கட்டுப்பாடு, சுங்கம்(கஸ்டம்ஸ்), என்.ஆர்.ஐக்கள் மீதான வரிவிதிப்பு ஆகியவற்றில் சிறு மாற்றம் தேவைப்பட்டால் கூட அதற்கு பல்வேறு முதலீட்டாளர்கள் மத்தியில் பல மாதங்கள் விவாதிக்க வேண்டிவரும். மேலும் வல்லுநர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும். அதுமட்டும் போதாது, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய கேபினட்டின்(மத்திய அமைச்சரவை) அனுமதியையும் பெறவேண்டும். மேலும் விரிவான இந்திய ஜனநாயக நடைமுறையில் சாதாரண நிகழ்ச்சிகளில் பலலட்சம் மக்களை பாதிக்கும் முக்கிய அறிவுப்புக்களை அமைச்சர்களால் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பில் நண்பன்டா தூள் !!

கடைசியாக வந்த சில படங்களில் விஜய் ஒரே மாதிரியாக நடித்திருந்ததால், இந்த மாறுபட்ட நடிப்பு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை உச்சு கொட்ட வைக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றார் இயக்குனர்.

வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜ் எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது ட்ரெண்டாக மாறலாம்.,ஜீவா என்னதான் சாதுவாக நடித்திருந்தாலும் குடித்துவிட்டு பேசும் காட்சிகளில் கைதட்டல் பெருகிறார். ஜீவாவின் தற்கொலை காட்சி மன நெகிழ்ச்சி. ஸ்ரீகாந்தின் மார்க்கெட்டுக்கு ஏணிப்படியாக இருக்கப் போகும் படம் இது.

வெளிப்படையாக சொல்லப் போனால் இதுவரை விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான். பூக்கள் தூவி தாரைத் தப்பட்டைகள் முழங்க விஜய்யை வரவேற்கும் வேலைகள் எல்லாம் விஜய்யின் ஓப்பனிங் காட்சியில் இல்லை. விஜய் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

வழக்கமான விஜய் படங்களில் அவரது நடிப்பில் கூடுதலாக இருக்கும் ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை. அதுவே அவரை அழகாகக் காட்டுகிறது. பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட் அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட் அப்புடன் வலம் வருகிறார். That"s good.

குறிப்பு : ரசிகர்கள் இன்னும் திருந்தவில்லை என்றே சொல்ல வேண்டும், கட்டவுட்டுக்கு பால ஊத்துறது பன்னீர் ஊத்துறது இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, January 13, 2012

கொல பாட்டு பிரபலத்தால் இனி பாடி கொள்ளப்போகும் தனுஷ்!!

தனுஷ் எழுதிப் பாடிய கொலவெறி பாட்டு எல்லா இடங்களிலும் ஒலி(ளி)த்துக் கொண்டிருக்கிறது.

”ஏனோ தானோனு எழுதுன பாட்டு ஹிட்டாயிடுச்சு” என்று பேசிய தனுஷ், இனி நடிக்கும் படங்களில் தானே பாட்டெழுதி தானே பாடப் போவதாக கூறியிருக்கிறார்.

இதற்கு தனியாக சம்பளம் கேட்கிறாராம் கொலவெறி நாயகன் தனுஷ்.

நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப் பட்டாலும், அவற்றை பற்றி கவலை படாமல் தனது தொழிலை பற்றிய தொலைநோக்குப் பார்வையிலேயே இருக்கிறார் தனுஷ்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!