Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, March 16, 2011

தேர்தலில் புதிய விதிமுறைகள்?

தமிழக சட்டசபை தேர்தலில், இம்முறை ஏராளமான புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சிகள், வாக்காளர்கள், அதிகாரிகளுக்கே குழப்பம் உள்ளது. சில முக்கிய விதிமுறைகள்:

* ஆண், பெண் ஓட்டு சாவடிகளை மாற்றி பொது ஓட்டு சாவடி அமைப்பு* வாக்காளரின் போட்டோவுடன் "பூத் சிலிப்புகளை' வீடு வீடாக சென்று, தேர்தல் கமிஷனே வழங்கும்.

* வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மகன், மகள், மனைவி சொத்து பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்.

* வேட்பாளர் செலவு கணக்கிற்காக, வங்கியில் தனி கணக்கு துவங்க வேண்டும். அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் செலவிடலாம்.

* வேட்பாளர்களின் டெபாசிட் தொகை உயர்வு. (தனி தொகுதிகளில் 2, 500ல் இருந்து 5000 ரூபாயாகவும், பிற தொகுதிகளில் 5000ல் இருந்து 10 ஆயிரமாகவும் அதிகரிப்பு)

* விளம்பரங்கள் வெளியிடுவதை கண்காணிக்க குழு. சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகளில் இடம்பெறும் வாசகங்களையும், தேர்தல் பிரிவின் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

* காரில் கட்சி கொடி கட்டினால், அதற்கான அனுமதியை வாங்கி காரிலேயே வைத்திருக்க வேண்டும்.* ஓட்டு சாவடி அலுவலர்கள் ஓட்டுப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். அங்கிருந்து தான் மாவட்ட நிர்வாகங் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

பொது இடங்களில்,கொடிக்கம்பங்களில் கட்சிக்கொடிகள் அகற்றப்பட வேண்டும். கம்பங்களில் வண்ணங்களை அழிக்க வேண்டும். * கிராமப்புறங்களில் மட்டுமே தனியார் சுவர்களில், அனுமதியுடன் கட்சிகள் விளம்பரங்கள் எழுதலாம். பிற பகுதிகளில் தனியார் சுவர்களிலும் போஸ்டர், பேனர், படம் இருக்கக் கூடாது.* மக்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணம் எடுத்துச் செல்ல தடை. மூன்று மது பாட்டில்களுக்கு மேல் எடுத்துச்செல்ல தடை.* கிராமப்புறமாக இருந்தாலும், இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்.* ஓட்டுப்பதிவு நேரம் காலை 8 மணி முதல் 5 மணி வரை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!