பத்தாவது உலககோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பதவியிலிருந்து திங்கட்கிழமை விலகிய ரிக்கி பாண்டிங்கும், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று, பைனலில் கோப்பையை கைப்பற்றும் என்று கூறியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும் தற்போது தயாராகி வருகி்ன்றன. அதற்குச் சான்றாக, பார்தி ஆக்சா நிறுவனம், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக, நாளைய தினத்தில், தங்களது வழக்கமான பணிநேரத்தை மாற்றியமைத்து, நாளைய தினம் மட்டும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிநேரம் வரை மட்டும் அலுவலகம் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல, ஷிப்ட் முறையில் செயல்பட்டு வரும் முன்னணி இ-லேர்னிங் நிறுவனமான டாடா இண்ட்ராக்டிவ் சர்வீசஸ் நிறுவனம், நாளைய தினத்தில் மட்டும், எந்த ஷிப்டில் பணிபுரிந்து வருவோரும் காலை 08.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரையிலான ஷிப்டில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது. அதிதி் டெக்னாலஜிஸ் நிறுவனம், இதற்கு மேல் ஒருபடி சென்று, ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வரலாம் என்றும், போட்டி துவங்கிய உடன் அவர்கள் கிளம்பி, கிரிக்கெட் ஜோதியில் ஐக்கியமாகலாம் என்று தெரிவி்த்துள்ளது.
இந்த நிறுவனங்கள், பணிநேரத்தை மட்டும் மாற்றி அமைத்துள்ளன என்பதை நினைத்துக் கொண்டிருக்கும் போது, மேக் மை டிரிப் மற்றும் கோகோபெரி நிறுவனங்கள், நாளை விடுமுறை நாளாகவே அறிவித்து தங்கள் ஊழியர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம், கிரிக்கெட் வெற்றியை அலுவலகத்தில் கொண்டாடும் வகையில், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நாளைய தினத்தில் டிரஸ் கோட் கிடையாது என்றும், அலுவலகத்திலேயே, பெரிய திரையில் சிற்றுண்டிகளுடன் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாபியண்ட் நிறுவனம், தங்கள் நிறுவன ஊழியர்கள் இந்திய அணி சீருடையில் பணிக்கு வரலாம் என்றும், ஜென்பேக்ட் நிறுவனம், அலுவலகத்தில் பெரிய திரையில் போட்டியை காண ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த கொண்டாட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், நாட்டின் எல்லையையும் கடந்து லாகூரில், பாகிஸ்தான் பேஷன் டிசைன் கவுன்சில் ( பிஎப்டிசி) சார்பில் செவ்வாய்க்கிழமை அன்று (29-03-11) துவங்கவிருந்த 4 நாட்கள் பேஷன் திருவிழா, கிரிக்கெட் போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment