பிள்ளைகளுக்கு எது சரியாக வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ற படிப்பை தேர்ந்தெடுக்க வைப்பது தான் பெற்றோர்களின் கடமை. தமிழ், ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து படித்தால் பேராசிரியராகலாம். அரசுப் பணி மட்டுமல்லாமல், தனியார் கல்லூரிகளில் கூட அதிகளவு சம்பளம் தருகின்றனர்.
வெறும் படிப்போடு நிறுத்தி விடாமல் பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலத்திற்கு கம்ப்யூட்டர் கல்வியறிவு முக்கியம். கம்ப்யூட்டரும், இணையதளமும் பழகிவிட்டால் உலகமே உங்கள் கைகளில் நிற்கும். அடுத்து வரும் காலங்களில் ஆசிரியர்களே இல்லாத கம்ப்யூட்டர் கல்வி வரும் போது, மாணவர்களுக்கு கை கொடுக்கும்.
பிள்ளைகள் கதை, கவிதை, கட்டுரை எழுதி வீட்டில் காண்பித்தால், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். கவிதை எழுதுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். இத்தகைய மாணவர்கள் மொழிப்பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால், உச்சரிப்பு, வாசிப்பு மூலம் நிறைய சம்பாதிக்கலாம். ரேடியோ, டிவியில் கதை வசனம் எழுத முடியும். எந்த மொழி படித்தாலும் ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். இருமொழி படித்தால், மொழி பெயர்ப்பு துறையில் சாதிக்கலாம். வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே கம்ப்யூட்டரில் மொழிபெயர்ப்பு செய்யமுடியும்.
மொழியை கையாளத் தெரிந்தவர்கள் "ஸ்கிரிப்ட்" தயாரிக்கலாம். சினிமா, டிவி... என மீடியாத் துறையில் மொழி தெரிந்தவர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. மேலை நாடுகளில் 16 வயது நிரம்பினால், மகனோ, மகளோ சுயமாக வேலைதேடி, அந்த பணத்தைக் கொண்டு மேற்படிப்பு படிக்கின்றனர். இங்கே அனைத்தும் செலவு செய்தால் கூட, மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தை தேர்ந்தெடுக்க முடியாது. இல்லாவிட்டால் மாணவருக்கு படிக்க விருப்பமிருக்காது.
எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் இலக்கியத்தைப் போல இனிக்காது. இலக்கியம் தெரிந்தால் பிற துறை வல்லுனர்களையும் பேச்சு, செயலின் மூலம் சந்தோஷப்படுத்தலாம். உலக இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால் ஆங்கில மொழி படிப்பது அவசியம்.
0 comments :
Post a Comment