Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, October 31, 2012

செக்யூரிட்டி கார்டுகள் இயக்குனர்களாக மாறிய அதிசயம்!

புதுடெல்லி: பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் நிறுவனமான பூர்த்தி ஷுகர் அண்ட் பவரில் முதலீடுச் செய்த நிறுவனங்களின் இயக்குநர்களில் பலரும் செக்யூரிட்டி கார்டுகளும், தொழிலாளர்களும்தான் என்பதை வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.இந்நிறுவனங்களின் வளாகங்களில் வருமான வரித்துறை பகிரங்கமாக நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்தது.

மும்பையில் 12 இடங்களிலும், புனே, நாக்பூர், கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர்களான 13க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தங்களின் பெயர்கள் எவ்வாறு இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்தது என்பதுக் குறித்து தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான முதலீடுகளுடன் துவங்கிய நிறுவனத்திற்கு பின்னர் அதிகளவிலான பணம் குவியத் துவங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிடைத்த நிதிகளின் மூல ஆதாரங்களைக் குறித்து தெரிவிக்கவில்லை எனில் வரி ஏய்ப்பு நடத்தியதாக கருதவேண்டி வரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், நாக்பூர் மற்றும் மும்பையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிதின் கட்கரி கர்நாடகா பா.ஜ.க தலைவர்களுடன் டெல்லியில் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை ரத்துச் செய்துவிட்டார்.

Tuesday, October 30, 2012

பக்கவாத நோயா பார்த்துகொங்கோ!!

பக்கவாத நோய் என்பது திடீரென்று மூளைக்கு செல்லும் ரத்தகுழாயில் ஏற்படும் பாதிப்பாகும். உலகம் முழுவதும் மரணத்தை உண்டாக்கும் முக்கியமான நோயாக பக்கவாதம் உள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் 48 லட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்களில் 88 சதவீதம் பேர் ரத்தகுழாய் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இந்தியாவில் 40 வயதுக்குள் உள்ள 15 சதவீதம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக பக்கவாத நோய் தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையில் ரத்த அடைப்பை சரிசெய்யும் சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே ரத்த அடைப்பால் ஏற்படும் பக்கவாதத்திற்கு ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள ஊசி இலவசமாக (முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம்) போடப்படுகிறது. இந்த ஊசியால் பக்கவாதத்தால் ஏற்படும் ரத்த குழாய் அடைப்பை முழுவதுமாக சரி செய்யலாம். (ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதி ‘உலக பக்கவாத நோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.)

Monday, October 29, 2012

பெருந்தலைகள் ஒதுங்கியதால் சிறு தலைகளுக்கு சான்ஸ்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் மாற்றான் தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி துப்பாக்கி, கும்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, கள்ளத்துப்பாக்கி, அஜந்தா, லொள்ளு தாதா பராக்பராக் ஆகிய 7 படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. போடா போடியில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. கும்கி படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.

அம்மாவின் கைபேசி படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் கள்ளத்துப்பாக்கி திரில்லர் படமாக தயாராகியுள்ளது.

லொள்ளு தாதா பராக் பராக் படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. அஜந்தா படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது., தீபாவளி ரேசில் பெருந்தலைகள் ஒதுங்கியதால் சிறு தலைகளுக்கு சான்ஸ் அதிக பிரகாசமாக உள்ளதாக கோலிவுட் கிசு கிசு.

Sunday, October 28, 2012

தண்டிக்க வேண்டியது யாரை???

ஒரு பேன் , மிக்ஸ்சி , ஏன் ஒரு சோப்பு டப்பாவுக்கு நல்லா உழைக்குமுன்னு கடை காரன் குடுக்கும் கேரண்டி நம்பி பொருள வாங்கி அப்படி அது சொன்ன மாதிரி வேல செய்யலேன்னா கடக்காரன் இல்லாட்டி அதுக்கு கேரன்ட்டி கொடுத்தவன்கிட்ட நம்ம எப்படி சண்டை போட்டு அந்த பொருள சரி செய்வோம் இல்ல வேற ஒன்னு வாங்குவோம்.

ஆனா இந்த மாண்புமிகு அம்மா ஆணவக்காரி, சூனியகாரி இமு கோழி போட்ட கூமுட்டைல ஒண்ணுனு மக்களுக்கு தெரிஞ்சு ஒதுக்க தாயராக இருக்கும் போது இந்த அவல ஆட்சி அமைய அணைத்து வகைளும் கூட்டு சதி செய்த குற்றவாளிகள் தான் இவர்கள் அணைத்து வகையிலும் இந்த அவலத்திற்கு காரணமானவர்கள் இன்று குழந்தை வேஷம் போடுவது வேதனையின் உச்சம் ....இன்றைய இந்த நிலைக்கு மக்கள் தண்டிக்க வேண்டும் என்றால் மக்கள் இந்த கோமாளிகளை முதலில் தண்டிக்க வேண்டும்? இல்லை இந்த ஆரிய ஜெ"யை ஆதரித்து ஒட்டு போட்டோமே நாம்(மை) தண்டிக்க வேண்டுமா??

(மாற்றம் வேண்டும் என்பதற்காக, தெரிந்தும் இந்த ஆரிய ஆணவக்காரியை தேர்ந்தெடுத்தோம் அல்லவா அதான் பாடம் கர்ப்பிக்கிறார் மக்களுக்கு. விரட்டுங்கள் ஆரியத்தை நாட்டை விட்டு, மொத்தத்தில் இந்தியாவை விட்டு., இவர் ஆட்சிக்கு வந்தது அமைச்சர்களை மாற்றி அமைத்துக்கொண்டு இருக்கவும், எதிர் கட்சிக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருக்கவும்தான். மக்கள் நலன் மேல் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது ஜெ"வுக்கு. நாம்தான் இதுபோன்ற அரவேக்காடுகளை ஆட்சியில் அமர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.)

Saturday, October 27, 2012

உணவை வீணடிப்பவர்களே ஒரு நிமிஷம்!

ஜெனிவா: உலகில் தயாரிக்கப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஓராண்டில் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளில் வீணடிப்பு 36 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஐ.நா. அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

உயர் வருவாய் பிரிவினர் மற்றும் வாங்கும் சக்தி அதிகரித்துள்ள நடுத்தர பிரிவினருக்கு உணவின் மீதான் ஆர்வம் உயர்ந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, உலக மக்கள் தொகையில் சுமார் 150 கோடி பேர் உடல் பருமன், அதிக எடை கொண்டவர்களாக உள்ளதாகவும் அதேநேரத்தில் 86 கோடி மக்கள் ஊட்டச்சத்தான உணவின்றி தவிப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் உணவு வீணாவதைத் தவிர்த்தால், கூடுதல் இயற்கை வளத்தின் தேவையின்றியே, 50 கோடி பேருக்கு உணவு அளிக்க முடியும் என்று ஐ.நா. உணவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், ஹோட்டல்கள், வீடுகள் என பல இடங்களில் உணவை வீணடிப்பவர்களை இனி ஒருநிமிடம் யோசிக்க வைக்கும் விஷயத்தை ஐ.நா. உணவு அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

Thursday, October 25, 2012

குத்துப்பாட்டு கூத்தெல்லாம் வேண்டாம்!

ஒரு சந்திப்பில், சூழ்நிலை, கனல் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் பவீனா. வேகமாக வளர்ந்து வந்த இவர் தனது உடம்பை கட்டுக்கோப்பாக்க வைத்துக்கொள்ள முடியாமல் சதைபோட்டு கண்டபடி வளர்த்து விட்டார்.

இதனால் பவீனாவை கதாநாயகியாக பார்த்து வந்த சினிமா இயக்குனர்கள் அயிட்டம் நடிகையாக கருதினர். கூடவே குத்துப்பாடல்களுக்கு ஆட்டம் போடவும் அழைப்பு விடுத்தனர்.

இதனால் அதிர்ந்து போனார் பவீனா. தொடர்ந்து சினிமாவில் நடித்தால் தனது இமேஜ் போய்விடும் என்று இப்போது சின்னத்திரைக்கு வந்து விட்டார். உதிரிப்பூக்கள் என்ற பெயரில் வெளியாகும் ஒரு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு பவீனா என்ற தனது பெயரையும் வினிதா என்று மாற்றியிருக்கிறார் நடிகை.

Wednesday, October 24, 2012

கா(வி)வல் துரை கயவர்களின் கபோதித்தனம்! சி பி ஐ!!

போலிகள் நிறைந்த போலிஸ் துறையில் காவிகள் கலப்படமாகிவிட்ட இந்திய காவல்த்துறையில் அதிகாரம் கையில் இருப்பதால் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் இந்திய சட்டமோ இவர்களை எதுவும் செய்வதில்லை., இனி செய்யபோவதுமில்லை.

பலி கொடுக்க சேவல் இருக்கிறத..? முஸ்லிம்களை என்கவுண்டர் செய்ய போலீஸ் பயன்படுத்தும் "ரகசிய" வார்த்தை அம்பலம்................!!?

குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க, ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,

என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும், நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும், போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ்.

சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற இந்த என்கவுண்டர் வழக்கில், தற்போது கடும் அதிர்ச்சியளிக்கும் வகையில் "போலீஸ் பித்தலாட்டங்கள்" வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சாதிக் ஜமாலை சுட்டுக்கொன்ற குஜராத் போலீஸ், அது குறித்த "எப்.ஐ.ஆரில்" சாதிக் ஜமாலை தாங்கள் "மட்பேட்" என்ற இடத்தில் வைத்து கைது செய்ததாகவும், அப்போது அவர் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாதகவும் (அதுவும் குஜராத் கலவரம் குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார் என்று) பதிவு செய்துள்ளனர்.

பின்னர், தப்ப முயன்றபோது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான குழு, சுட்டுக்கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான இதே குழு தான், சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட பலரையும் என்கவுண்டர் முறையில் கொன்றது,தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், எல்லா என்கவுண்டர்களிலும் ஒரே துப்பாக்கி (.38 mm ரக துப்பாக்கி) பயன்படுத்தி என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதும் "பாரன்சிக் ரிப்போர்ட்" மூலம் சி.பி.ஐ. கண்டு பிடித்துள்ளது. எனவே, இது எதேச்சையாக நடத்தப்பட்ட என்கவுண்டராக இல்லாமல் திட்டமிட்ட சதி என்பதற்கான மேலும் ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்ட சி.பி.ஐ.க்கு அதிர்ச்சியளிக்கும் "தொலைபேசி உரையாடல்" உள்ளிட்ட பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

சம்பவத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர போலீசிடம் தொலைபேசியில் பேசிய குஜராத் இன்ஸ்பெக்டர், பலி கொடுக்க ஏதாவது "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்கிறார், ஆம்.ஒரு சேவல் இருக்கிறது, கொண்டு செல்லுங்கள் என மறுமுனையில் பதில் வருகிறது. அதை தொடர்ந்து, குஜராத் போலீஸ், ஜீப்பில் மகாராஷ்டிரா வந்தது. கணக்கில் காட்டப்படாமல் விசாரணைக்கைதியாக தங்கள் வசம் இருந்த சாதிக் ஜமால், குஜராத் போலீசிடம் ஒரு பூங்காவில் வைத்து ஒப்படைக்கப்படுகிறார். குஜராத் போலீசும் கைது குறித்து பதிவு செய்யாமல், பலி கொடுக்க "சேவல்" கிடைத்த சந்தோஷத்தில், சில நாட்கள் சட்டத்துக்கு புறம்பாக அடைத்து வைத்திருந்துவிட்டு கச்சிதமாக என்கவுண்டர் செய்திருப்பது,தெரிய வந்துள்ளது.

எனவே, குஜராத் இன்ஸ்பெக்டர் "தரோன் பரோட்" தலைமையிலான 7 பேர் கொண்ட என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் குழு, இவர்களுக்கு உடந்தையாக செயல் பட்ட மகாராஷ்டிரா வை சேர்ந்த, 2 "டி.எஸ்.பி.ரேன்க்" போலீஸ் அதிகாரிகள், மற்றும் சாதிக் ஜமால் ஒரு பயங்கரவாதி என சித்தரித்த 3 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 12 நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், என தெரிகிறது. சி.பி.ஐ., விசாரணையை முழுமையாக நடத்திவிட்டதாகவும், இன்னும் மகாராஷ்டிர போலீசில் ஓரிருவரிடம் விசாரணையை முடித்த பிறகு, மேற்கண்ட 12 "கா(வித்)வல்துறை கறுப்பாடுகள்" மீதும், அடுத்த மாத ஆரம்பத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும்,என சிபிஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அத்தனைக்கும் முக்கிய காரணகர்த்தா அயோக்கியன் மோடி அவன் இன்னும் பதவியில் இருக்கிறான் இவனுக்கு எப்போது தண்டனை? எத்தனை முறை காரி துப்பினாலும் இவனுக்கு சூடு சொரணை இல்லாத ஜடமாக இருக்கிறன்.

Tuesday, October 23, 2012

ஆரோக்கியம் அன்றும்! இன்று(ம்)?

அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன், எளிதில் களைப்பு அடையாமல் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் களைப்பைத் தான் எளிதில் அடைய முடிகிறது.

மேலும் எவ்வளவு தான் முக்கிய வேலையாக இருந்தாலும், அந்த வேலை செய்ய எண்ணம் இல்லாமல் தூங்க வேண்டும் என்றே எப்போதும் தோன்றும். இதற்கு காரணம் நமது வாழ்க்கை முறை தான்.

உடலில் அதிக களைப்பு இருந்தால் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அதாவது வாந்தி, தலைவலி போன்றவை. மேலும் அதே சமயம் அந்த களைப்பு பலவித நோய்களுக்கும் அறிகுறியாக உள்ளது. உதாரணமாக உடலில் தைராய்டு, எய்ட்ஸ், அனீமியா போன்ற நோய்களுக்கு உடல் களைப்பு ஒரு அறிகுறி.

மேலும் அதிக வேலையின் காரணமாக மன அழுத்தம் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வடைந்துவிடும். சரியான உணவு பழக்கம் இல்லாதது, நாள்பட்ட வலி போன்றவையும் உடல் சோர்வுக்கு காரணங்களாகும்.

ஆகவே இவற்றை சரிசெய்ய வேண்டுமென்றால் நாம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ வேண்டும்.

தூக்கம்: சரியாக தூங்காமல் இருந்ததால் உடலில் சோர்வு ஏற்படும். அதிலும் உடலுக்கு குறைந்தது 6-8 மணிநேர ஓய்வானது தேவைப்படுகிறது. அவ்வாறு சரியான ஓய்வு உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் சோர்வு ஏற்படும்.

நோய்கள்: எப்போது பார்த்தாலும் உடல் களைப்புடன் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று இருந்தால், அது உடலில் ஏற்படும் நோயான அனீமியா, தைராய்டு போன்றவற்றிற்கு அறிகுறியாகும்.

வாழ்க்கை முறை: இன்றைய மார்டன் உலகில் வேலைக்கு சென்றால், குறைந்தது 8-9 மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. மேலும் அலுவலகம் நீண்ட தூரத்தில் இருப்பதாலோ அல்லது வேறு ஏதாவது வேலைக்காவோ, பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆகவே உடல் பலமிழந்து சோர்வடைகிறது.

மனநிலை: ஒருவர் அதிக மன அழுத்ததுடனோ அல்லது மன இறுக்கத்துடனோ இருந்தால், அவையும் உடலை அதிக அளவில் களைப்படையச் செய்கின்றன.

உணவு: உடல் ஆரோக்கியத்துடன் இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான உணவானது உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் நிறைய பேர் உடல் எடையை குறைக்க, உடலை பிட்டாக வைப்பதற்கு என்று நிறைய ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சேர்க்கின்றனர். இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.

உடல் பருமன்: ஒல்லியாக இருப்பவர்களை விட குண்டாக இருப்பவர்களின் உடல் விரைவில் களைப்படைந்துவிடும். ஆகவே அதிக உடல் எடையும் களைப்படைவதற்கு ஒரு காரணம்.

எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.

Monday, October 22, 2012

சிக்கிய சின்மயிடம் சில்மிசத்தில் இடுபட்டவர்!

டிவிட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவான வகையில் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர் என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

மேலும் அந்த புகாரில், ட்விட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி சிலர் ஆபாசமாக தகவல்கள் பரப்பி வருகின்றனர், இது போன்ற கருத்துகளைக் கூறுபவர்களை ட்விட்டரில் இருந்து துண்டித்தாலும், மீண்டும் வேறு பெயர்களில் ஆபாச கருத்துகளைக் கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஆபாச படங்களையும் அனுப்புகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அவர் புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரை விசாரிக்குமாறு பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

சைபர் குற்றப்பிரிவு போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் உள்பட 6 பேர்தான் சின்மயிக்கு இணையதளத்தில் தொந்தரவு கொடுப்பது என தெரியவந்தது. இதையடுத்து சரவணக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Sunday, October 21, 2012

உயிரை பறித்த ஆபாச எஸ் எம் எஸ்!!

தர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் அரசு பஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். சண்முகம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பங்கு தாரராக உள்ளார்.

இதேபோல் தர்மபுரி பி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் சாஜினி என்கிற நந்தினி (24), சண்முகம் பங்குதாரராக உள்ள ஓட்டலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினியை, சண்முகம் ஓசூரில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் நந்தினி அவரது வீட்டிலேயே இருந்து வந்தார். சண்முகம் அங்கு சென்று வந்தார்.

இதுபற்றி சண்முகத்தின் முதல் மனைவி கவிதாவின் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தினமும் நந்தினிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தனர்.

தினமும் அவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், ஆபாசமாக திட்டியும் மெசேஜ் அனுப்பி வந்தனர். இதனால் நந்தினி மனவேதனையில் தவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4, 5 நெம்பர்களில் இருந்து 50 ஆபாச எஸ்.எம்.எஸ்.களும், கொலை மிரட்டல் மெசேஜ்களும் வந்து இருக்கிறது.

இதனால் மனம் உடைந்த நந்தினி அவமானம் தாங்கா மல் விஷம் குடித்தார்.

இதையடுத்து அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் நந்தினியின் உறவினர்கள் திரண்டு ஆபாச, மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே விஷம் குடித்த நந்தினி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Saturday, October 20, 2012

பிறப்புறுப்பை காப்பாத்த முடியாத கடவுள்?

கோயில்களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரம் செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும் (லிங்கம் உருவான கதை..!)

"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!!

எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும் என்று தவித்த சிவன், திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து கூவினார் சேவலை போல்...

விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..

ரிஷி வெளியே சென்ற நேரத்தில் சிவன் ரிஷியை போலே உருவம் மாறி ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறார் ..., கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறார் ...!!

வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட கோலத்தை பார்த்த கோபம்கொண்டு..!! 

"நான் இல்லாத நேரத்தில் என்னை போல நடித்து என் மனைவியோடு உடலுரவு கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று சாபம் விடுகிறான்..

உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது ..விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..உடனே பார்வதி தனது பிறப்புறுப்பால் அறுந்த சிவனின் லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள் ..!!" (இது போன்ற வாசகங்கள் மஞ்சள் பத்திரிகைகளில் கூட பார்க்க முடியாது)

இதுதான் சிவலிங்கம் உருவான கதை  பார்த்தீர்களா  மக்களே இதைதான் இத்தனை நாட்கள் பூஜை போட்டு மாலை போட்டு மஞ்சள் தேய்த்து வணங்கி வந்து உள்ளிர்கள் இவர் எப்படி சாமியாக ஆக்கி உள்ளிர்கள் இந்த வேலை செய்பவர் எப்படி ஒழுகமானவராக இருக்க முடியும்...சிந்தியுங்கள் தமிழர்களே (ஹிந்து)  நண்பர்களே...!

ஒரு சாதாரண மனிதன் கடவுள் மேல் சாபம் விட்டு அந்த சாபம் பலித்தால் அவர் எப்படி கடவுள் ஆவார்.? சிந்தியுங்கள்.

சிவன் அவர்களது லிங்கத்தையே (பிறப்பு உறுப்பு) காப்பாற்ற முடியவில்லையே இவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்..? பார்ப்பனர்கள் புராணம்(வேதம்) என்கிற பெயரில் பொய் புரட்டு,அசிங்க, அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.  

Friday, October 19, 2012

2012" தங்க பாதம் தட்டிச்சென்ற கால்பந்து வீரர்

மோன்டி கார்லோ: 2012ம் ஆண்டுக்கான கோல்டன் ஃபூட் (GOLDEN FOOT ) என்றழைக்கப்படும் “தங்க பாதம்” விருதை, ஸ்வீடன் கால்பந்து அணி கேப்டன் லேடன் இப்ராஹிமோவிக் தட்டிச் சென்றார்.

மொனாகோ நாட்டில் லார்வாட்டோ கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தி கிரிமால்டி ஃபோரம் என்ற அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்பந்து ஜாம்பவானான பிரேசில் வீரர் பீலே, கோல்டன் ஃபூட் விருதை இப்ராஹிமோவிக்கிற்கு வழங்கினார்.

உலகில் தலைசிறந்த 10 கால்பந்து வீரர்களை, பிரபல ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களிலிருந்து இணைய வாக்கெடுப்பு மூலம் GOLDEN FOOT விருதுக்குரிய நபரை பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர்.

கடந்த 4 மாதங்களாக இணைய வாக்கெடுப்பு நடந்து வந்த நிலையில், 16-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில், ஜெர்மனியுடனான ஆட்டத்தில் லேடன் இப்ராஹிமோவிக் அபாரமாக விளையாடி ஒரு கோல் அடித்தார்.

அந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கேப்டன் லேடன் இப்ராஹிமோவிக்கின் நேர்த்தியான வழிகாட்டுதலால், அந்த ஆட்டம் 4-4 என்ற கோல்கள் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனையடுத்து அவருக்கு அதிக வாக்குகள் விழுந்து, கோல்டன் ஃபூட் தங்க பாதம் விருதைத் தட்டிச் சென்றார்.

Thursday, October 18, 2012

ஆயுளை குறைக்கும் அன்றாட பழக்க வழக்கம்

மெல்போர்ன்: "டிவி' பார்ப்பதில் செலவிடப்படும், ஒவ்வொரு மணி நேரமும், மனித ஆயுளில், 22 நிமிடங்களை குறைப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய, நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர்கள், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நாளுக்கு, ஆறு மணி நேரம், "டிவி' பார்க்கும் பழக்கம் உடையவர்களையும், "டிவி' பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களையும், ஒப்பிட்டு பார்த்து, நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 25 வயதை தாண்டியவர்கள், ஒரு மணி நேரம், "டிவி' பார்த்தால், அவர்கள் ஆயுளில், 22 நிமிடங்கள் குறைவது தெரிய வந்தது.

அதிக உடலுழைப்பு இல்லாமல் இருத்தல், புகைபிடித்தல், அதிக பருமனாக இருத்தல் பட்டியலில், அதிகம், "டிவி' பார்க்கும் பழக்கமும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என, இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு உள்ளது.

Wednesday, October 17, 2012

விசா பிச்சை கேட்டவனை விரட்டி அடித்த ஜெர்மனி!!

புது தில்லி: நரேந்திர மோடி ஆளும் குஜராத் குறித்து ஜெர்மனி என்ன நிலைப்பாட்டை முன்பு எடுத்துள்ளதோ அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

பிரிட்டனைப் போல் தாங்கள் நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்று அவர் தெளிவு படுத்தினார். குஜராத் மாநிலம் அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

2002ல் நரேந்திர மோடியின் ஆதரவுடன் குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளுக்குப் பின் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேலை நாடுகள் குஜராத் மீது தடைகளை விதித்தன. குஜராத்துடன் தங்கள் அரசு ரீதியான தொடர்புகளை முறித்துக்கொண்டன. நரேந்திர மோடி அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்கா விசா தர மறுத்தது.

“எங்கள் நிலையில் மாற்றம் இல்லை. அடுத்த மாதம் குஜராத்தில் தேர்தல் ஆரம்பிக்கிறது. அது குறித்து நாங்கள் எந்த அறிக்கையும் வெளியிட விரும்பவில்லை. பிரிட்டன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி அறிவிக்கும் முன்பு எங்களிடம் இப்படி அறிவிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது. ஆனால் பிரிட்டனின் இந்த மாற்றம் எங்கள் நிலைப்பாட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை” என்று ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் கூறினார்.

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள ஜெர்மனியின் வியாபாரக் குழுவுக்கு வரவேற்பு நிகழ்ச்சியையும், கலாச்சார நிகழ்ச்சியையும் ஜெர்மனியின் இந்தியத் தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் தனது இல்லத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.(உலக நாடுகள் எல்லாம் இவனை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி விசா தர மறுக்கும்போது இவனுக்கு பிரதமர் ஆசை வேறு., சரிப்பா பிரதமரா ஆக்கிடுவோம் வெளிநாடுகளுக்கு போகவேண்டுமே அப்ப எப்படி? அகதியாகவா வெளிநாடு செல்வார்.,இந்திய பிரதமர்.???? )

Tuesday, October 16, 2012

சூப்பரா, டூப்பரா துப்பாக்கி! விஜய்!!

துப்பாக்கிப் படத் தலைப்பு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது சுமூகமாக முடிந்திருப்பதால் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஆடியோ வெளியீடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

துப்பாக்கிப் படம் குறித்துபடத்தின் கதாநாயகன் விஜய் கூறுகையில், இதுவரை வேறு எந்த படத்திலும் நடித்திராக கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது எனது கனவுப் படம் என்றே கூற வேண்டும். ஏ.ஆர்.முருகதாஸின் அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்னேன். சிறப்பாக கதை சொல்லக் கூடியவர். படத்தைப் பார்க்கும் போது உங்கள் கவனத்தை வேறு எங்கும் திருப்ப முடியாத அளவுக்கு படத்தை எடுத்திருப்பார், படம் சூப்பர், டூப்பரா இருக்கும் என்று கூறினார். (படம் திரைக்கு வந்ததும் தெரியும்.)

மதுரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக விஜய்யின் ட்ரீம் புராஜக்டான ‘துப்பாக்கி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு மதுரையில் நடக்கவிருக்கிறது.

Monday, October 15, 2012

கருவிழி கொண்டு கணினியை திறக்க புது தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்கள் ஒரு சில வலை தளங்களுக்குள் நுழைய பாஸ்வேர்டு எனப்படும் ரகசிய குறியீடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதை அறிந்து கொண்டு ஒருவரின் தகவல்களை அறியவும், மோசடி செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க தற்போது, நவீன தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கம்ப்யூட்டரில் சம்பந்தப்பட்டவரின் கண் கருவிழி படலங்களின் பார்வை ரகசிய குறியீடாக பயன்படுத்தப்பட உள்ளது.

இது விரைவில் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் உள்ள சான்மார்கோ பல்கலை கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஓலெக் கொமோ, கோர்ட்சேவ் இதை கண்டுபிடித்துள்ளார். ஒரு பொருளை 2 பேர் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. ஒரு படத்தை பலர் பல கோணங்களாகதான் பார்க்க முடியும். ஆனால் ஒவ்வொருவரின் பார்வையும் மாறாது. அதன் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டதாக விஞ்ஞானி கொமோ கோர்ட் சேவ் தெரிவித்துள்ளார்.

Sunday, October 14, 2012

இப்படியான ஆண்களை அதிகம் விரும்பும் பெண்கள்

பிரிட்டனின், நாட்டிங்காம் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆண்களின் சில புகைப்படங்களை பெண்களிடம் கொடுத்து, அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப, கணினியில் அழகு படுத்தும்படி கூறி, ஆராய்ச்சி நடத்தினர்.

அதில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின் முகங்களுக்கு மிதமான சிவப்பு நிறத்தைக் கொடுத்து மெருகூட்டியிருந்தனர். மிதமான சிவப்பு நிறமுடைய ஆண்களின் முகமே, பெண்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதிக சிவப்பு நிறம், ஆண்களின் கரடுமுரடான சுபாவத்தை குறிப்பதாக, பெண்கள் கருதுகின்றனர்.

இது குறித்து போர்ட்ஸ்மவுத் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் உளவியல் வல்லுனரான சமந்தா குறிப்பிடுகையில், "சிவப்பு என்பது ஆபத்தின் அடையாளம். பொதுவாக அதிக உடல் உழைப்பு இருக்கும் போதும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முகம் மிகவும் சிவந்து காணப்படும். ஆனால், வெளுத்த முகம், நோயையும் பயந்த சுபாவத்தையும் குறிக்கும். ஆதலால், இரண்டுக்கும் இடைப்பட்ட இளஞ்சிவப்பு (ரோஸ்) நிற முகமுடைய ஆண்களையே, பெண்கள் அதிகம் விரும்புகின்றனர், என்றார்.

Saturday, October 13, 2012

வீட்டில் இருந்தவர்களை வீதிக்கு கொண்டு வந்த ஜெயா!?

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்து, அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ இன்றி பொதுமக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் நிலை அதிகரித்து வருகிறது. இப்போராட்டங்கள் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினமும் 16 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால்,அவதிப்பட்டு மக்கள், சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். திருவள்ளூரில் நடந்த சாலை மறியலில், போலீசார் தடியடி நடத்தினர். வேலூர் மாவட்டம் மேலவிசாரத்தில் நடந்த சாலை மறியல், வன்முறையாக மாறி, மின்சார அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 16 மணி நேரத்துக்கு மேலாக நிலவும் மின்வெட்டால், பல தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலையின்றி தவிப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். எனவே மின்வெட்டை கண்டித்து, நேற்று இரவு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மி்ன்வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மின்வெட்டை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனியில் மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரிய செயல்பாடுகளை முறைபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டம் கோவையில் நடந்தது. தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) சார்பில் நடந்த தந்தி அனுப்பும் போராட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்று தந்தி அனுப்பினர்.

*போயஸ் கார்டனுக்கு அனைவரும் பாய், தலை அனையுடன் அன்புடன் அழைக்க படுகின்றனர். (ஏனென்றால் 24 மணிநேரமும் மின்(சம்)சாரம் (சசிகலா)இருக்கும் ஒரே இடம் போயஸ்)

Friday, October 12, 2012

1400 தியேட்டரில் மாட்டிக்கொண்ட மாற்றான்

சூர்யா இரட்டையராக நடித்துள்ள திரைப்படம் மாற்றான் வரும் அக்டோபர் 12ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாற்றான் திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

இப்படத்தில் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு கருத்து இருப்பதாகவும், ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படமாக இது இருக்கும் என்றும், திரைக்கதை எழுத்தாளர் சுபா கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 1400 இடங்களில் திரையிடப்படவிருப்பதாகவும், ஒரே நாளில் தமிழிலும், தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெயரிலும் வெளியாகிறது மாற்றான். ரஜினியின் எந்திரனுக்கு அடுத்ததாக உலகெங்கும் ரிலீஸ் ஆகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்பது கோலிவுட்டின் சர்வே.

Thursday, October 11, 2012

இந்து மத்தத்தின் பெயரால் நடக்கும் இனக்கொ(லை)டுமைகள்?


குஜராத்தின் முதல்வரும்,பா.ஜ.க என்ற மதவாத கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக தனது மாநிலத்தின் பெயரை மாற்றியுள்ளார்.

ஒரு சமூகத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பர்ய சின்னங்களையும் அழித்துவிட்டால் அந்த சமூகம் தொடர்பு அறுந்த சமூகமாக, முகவரி இல்லாத நாடோடி சமூகமாக மாறிப்போகும். பிறகு அந்த சமூகத்தை அழிப்பது மிகவும் எளிது. இப்படி குறிவைத்து அழிக்கப்பட்ட பல சமூகங்களின் வேதனை நிறைந்த வரலாற்று சம்பவங்களை உலக வரலாற்று ஏடுகளில் காணலாம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிட்லர் மற்றும் முஸோலினியின் பாசிச நாஜி கொலைகார கூட்டம் இப்படித்தான் உலகின் பல பாகங்களிலும் தங்களது இன வெறி கொள்கைகளை நிலைநிறுத்தியது.

அத்தகைய பாசிச வெறியர்களிடம் பாடம் பயின்ற சங்பரிவார கும்பல் இந்தியாவிலும் அதுபோன்ற இனவெறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற இந்து மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை இவர்கள் நடத்துவது தான் மிகப்பெரிய அக்கிரமம். அதனால் தான் இந்து மதத்தில் உள்ளவர்களின் 1 சதவீத ஆதரவைக் கூட இவர்களால் பெற இயலவில்லை. இந்து மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட இந்த சங்பரிவார், அந்த மதத்தின் பெயரை பயன்படுத்தி இனவெறி, மதவெறியை தூண்டுகின்றனர்.

இதுபோன்ற மனிதவிரோத வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற இடமாக மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் கிடைத்திருக்கிறது. மோடியின் அட்டூழியங்களை நாம் நினைவுபடுத்த தேவையில்லை. காரணம் அந்த கொடூர கொலைகள் எல்லாம் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் நெஞ்சை விட்டு என்றைக்கும் மறையப் போவதில்லை.

இன அழிப்பு தொடர்கிறது மோடியின் காட்டுமிராண்டி ஆட்சியில்: தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் என்ற 600 ஆண்டு வரலாற்றுப் பெயரை அம்தாவாத் என்று அரசின் அத்துனை அறிவிப்பு ஏடுகள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றி தனது நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத எண்ணத்திற்கு மேலும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

கி.பி. 1411 இல் முஸ்லிம் மன்னர் அகமது ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் தான் அகமதாபாத். இன்றைக்கு இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஜவுளி தயாரிப்பிற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது.

அகமதாபாத் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். மேலும் தேசத் தந்தை காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தில் தான் உள்ளது. அகமதாபாத் என்ற முஸ்லிம் பெயரை மாற்றிட வேண்டி தேசவிரோத சக்திகள் பல முறை முயன்றும் முடியவில்லை. தற்போது மோடியின் கைங்கர்யத்தால் மாநகராட்சியின் பதிவேடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதை குஜராத்திலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் காவியில் கலந்து சங்கமமாகிவிட்டன.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி, நிர்வாகமுறை, அவர்களின் தியாகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஏடுகள் அனைத்தையும் வெள்ளையர்கள் ஆட்சியில் அடியோடு தீவைத்துக் கொளுத்தினர். உண்மைச் செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பிறகு வெள்ளையர்களே அன்றைய சங்பரிவார் துணை கொண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி கட்டுக்கதைகளை வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவற்றைதான் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.

இவற்றை மாற்றி உண்மையான செய்திகளை தெரிந்து கொள்வதில், அவற்றை தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் முஸ்லிம்கள் போன்ற இன மத ரீதியான சிறுபான்மை சமூகம் என்றைக்கு ஆர்வம் காட்டுகிறதோ, அவற்றை நிலைநிறுத்துவதற்கு என்றைக்கு போராட துணிகிறதோ அதுவரையிலும் இது போன்ற அநியாயக்காரர்களின் ஆட்டூழியங்கள் இந்நாட்டில் தொடரத் தான் செய்யும். சட்டத்தால் எல்லாம் இவர்களை ஒன்றும் செய்துவிட இயலாது.

Tuesday, October 9, 2012

விஜய்க்கு செய்த பிளான் சல்மானுக்கு வொர்க்கவுட் ஆகுமா?

இயக்குனர் ராஜமௌளி இயக்கத்தில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற படம் நான் ஈ. படத்தில் சின்ன ஈ செய்யும் சேட்டைகள் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்தது. படம் முடிந்து பெயர் ஓடிக்கொண்டிருக்கும் போது நடனமாடும் ஈ, நடிகர் விஜய் திருமலை படத்தில் ஆடிய ஸ்டெப்களை போடுவது ரசிகர்களை கவர்ந்தது.

இப்போது இயக்குனர் ராஜமௌளி ‘நான் ஈ’ படத்தை இந்தியில் வெளியிட இருக்கிறார். இந்தி ரசிகர்களைக் கவரும் நோக்கில் படத்தில் முடிவில் ஈ நடனமாடும் அந்த சில நிமிட காட்சிகளை மட்டும் மறுபடியும் கிராஃபிக்ஸ் செய்து அதில் விஜய் போல ஆடிய ஸ்டெப்களுக்கு பதிலாக, இந்தி நடிகர் சல்மான்கான் போல ஈ நடனமாடும் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கொண்ட விஜய், சல்மான்கான் ஆகியோரின் ஸ்டெப்களை போட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் இழுக்கும் இயக்குனர் ராஜ மௌலியின் பிளான் இந்தியில் வெற்றி பெறுகிறதா என பார்ப்போம்.

தேனிலவுக்கு பாய் விரித்த பாசிசம்! செங்கொடி கம்பத்தில் பறந்த காவி!?ஒரு காலத்தில் கடும் பகைவர்களாக இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று கேரளாவில் தேனிலவில் கொஞ்சிக் குலாவுகின்றன.

சமீபத்தில் வடக்கு கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி. ஜெயராஜன் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத்(ABVP) என்ற ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மாணவர் அமைப்பைச்  சார்ந்தவரான சச்சின் கோபால் கொல்லப்பட்டதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று “துக்கம் விசாரித்து விட்டு” வந்தார்.
பதிலுக்கு அதே மாவட்டத்திலுள்ள பானூர் என்ற ஊரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து ஆர்.எஸ்.எஸ். குலக் கொழுந்துகள் அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டு “துக்கம் விசாரித்து விட்டு” வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகளின் மலையாளப் பத்திரிகையான “கேசரி”யில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இந்தக் க்ட்டுரையை ஆர்.எஸ்.எஸ்.ஸின் “அறிவுஜீவிகளின்” பிரிவான பாரதீய விசார கேந்திரத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.ஜி. மோகன்தாஸ் எழுதியுள்ளார்.
இந்த இரு அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும், “நண்பர்களாக” மாறவேண்டும் என்று அந்தக் கட்டுரையில் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த இருபதாண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.ஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கொலை மோதல்களில் ஈடுபட்டதில் 150 வரை அவர்களது உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் நடந்தது. அப்படியிருக்க இப்பொழுது இந்தக் “கொள்கை கோமேதகங்கள்” ஒன்று சேரக் காரணம் என்ன?
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? காரணம் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்த இரு கொலைகார அமைப்புகளும் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்வார்கள். அத்தோடு முஸ்லிம்களையும் கொன்றொழித்தார்கள். முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடினார்கள். ஆனால் சமீப காலங்களில் தென்னிந்தியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியின் பயனாக அவர்களால் இப்பொழுது பழைய மாதிரி வாலாட்ட முடியவில்லை. பழைய வேகத்தில் அவர்களால் முஸ்லிம்களைத் தாக்க முடியவில்லை. முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி எனும் தடுப்புச் சுவரில் அவரகளின் தலை இப்பொழுது மோதுகின்றது.
ஒரு தரப்புச் சேதங்களே இருந்த காலம் போய் இன்று இரு பக்கமும் சேதங்கள் ஏற்படுகின்றன. ஆக, இருவருக்கும் பொது எதிரியான முஸ்லிம்களை “எதிர் கொள்வதற்கு” இன்று இந்த இரு குண்டர் அமைப்புகளும் ஒன்று சேர முயற்சி செய்கின்றன.
அதன் விளைவாகத்தான், ஃபாசிச “கேசரி”யில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சியினரை ஆகா, ஓகோ என்று புகழ்கின்றது. ஆர்.எஸ்.எஸ்.ஸில் நாத்திகர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை, கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பிக்கையாளர்கள் நுழையக் கூடாது என்றும் இல்லை என்று ஆரூடம் சொல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அப்துந் நாஸர் மஃதனியின் பி.டி.பி. கட்சியுடன் கூட்டணி வைத்தது என்பதால் அது முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது என்பது உண்மையில்லை என்கிறது. அது தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று சமாதானம் கூறுகிறது.
இந்த இரு அமைப்புகளும் ஊழலுக்கெதிராகப் “போராடும்” அமைப்புகளாம், ஆதலால் இரண்டும் இணைவது காலத்தின் கட்டாயமாம் என்று கட்டுரையாளர் கூறுகிறார். இருந்தாலும் ஃபாசிசம் பாசத்தை அதிகம் காட்டவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அதாவது, இந்தக் கருத்து கட்டுரையாளரின் சொந்தக் கருத்து என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வக் கருத்து இல்லை என்றும் ஹிந்துத்துவ ஃபாசிசத் தலைவர்கள் கூறும் அதே வேளை, “யாரும் எங்களுக்குத் தீண்டத்தகாதவர்கள் இல்லை” என்று தெளிவு படுத்தியுள்ளார்கள்.
இதனைப் படித்தவுடன் அவர்களிடம், அதாவது அவாள்களிடம் தலைவிரித்தாடும் தீண்டாமையை யாரும் எண்ணிவிட வேண்டாம். அவர்கள் சொல்வது “அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை” என்ற அரதப் பழமொழி உண்டல்லவா, அதைத்தான் நவநாகரிகமாகச் சொல்லியுள்ளார்கள்.
இதைத்தான் பா.ஜ.க. தலைவர் ஓ. ராஜகோபால் இப்படிச் சொல்கிறார் : “அரசியல் கட்சிகள் ‘பொதுவான காரியத்திற்காக’ ஒன்று சேர்வதில் தவறில்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை!”
இந்தப் “பொதுவான காரியத்திற்காக” என்றால் முஸ்லிம்களைக் கொல்வதற்காக என்று நாம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. சிறு குழந்தைக்குக் கூட இந்த மொழி புரியும்.
ஆனால் கீழே உள்ள “கொள்கைக் குன்றுகளான தொண்டர் குண்டர்கள்” ஒன்று சேரத் துடிக்கும் பொழுதும், மேலே உள்ள கொள்கைக் குலக் கொழுந்துகளான தலைவர்களுக்கு இதனை ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால்தான் “கேசரி”யில் வெளிவந்துள்ள கட்டுரை குறித்து கருத்து தெரிவித்த சி.பி.எம்.மின் ஆட்சிக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி இவ்வாறு கூறுகிறார்: “வகுப்புவாத சிந்தனையையும், ஃபாசிசத்தையும் பரப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. அதனைத் தனிமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்கள்தான் ஆசைப்படுகிறார்கள்.”
ஆக, வேதாளம் கிளம்பியது ஹிந்துத்துவ ஃபாசிசப் புற்றிலிருந்துதான் என்கிறார் அவர். அதனால்தானோ என்னவோ வடக்கு கேரளாவில் குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் வெட்டு குத்து கொலைப் பகையோடு காலங்கடத்திக் கொண்டிருந்த இந்த இரு அமைப்பினருக்கிடையில் கடந்த ஆறு மாதங்களாக எந்தப் பெரிய வன்முறைகளும் நடைபெறவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம்களைக் கொல்வதற்கு, முஸ்லிம் சொத்துகளைச் சூறையாடுவதற்கு, முஸ்லிம் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வதற்கு, முஸ்லிம் பிஞ்சுக் குழந்தைகளை வெட்டிப் பிளந்து போடுவதற்கு – மொத்தத்தில் முஸ்லிம் ரத்தத்தைக் குடிப்பதற்கு எவ்வளவு பெரிய கொடும் பகையாளர்களும் ஒன்று சேர்வார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
மாற்று*

Monday, October 8, 2012

பொய்யுரைத்து போக்கிரித்தனம் செய்யும் பொ(பே)ய் அரசு?

டெல்லி: விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்காக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் ரூ. 11.42 உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் மானிய கட்டுப்பாட்டுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள இந்நிலையில், சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகத்திற்கு இதுவரை 25 ரூபாய் 83 காசுகள் கமிஷனாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தற்போது 37 ரூபாய் 25 காசுகளாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுக்கான விநியோகஸ்தர்களின் கமிஷன் உயர்த்தப்பட்டிருப்பதால் இது நுகர்வோர் தலையில்தான் போய் விழும்.

இதனிடையே, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 23 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டால் பெட்ரோல், டீசல் விற்பனை விலையும் விரைவில் உயர்த்தப்படும் என தெரிகிறது.

கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்வு குறித்து இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற நாள் முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பொதுமக்களைப் பற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கடுகளவும் கவலை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இதனை நியாயப்படுத்தி வருகின்றனர் பிரதமரும், அமைச்சர்களும்.,ஆனால் மக்களோ கோபத்தில் அவரவருக்கு அங்கலாய்த்து கொண்டு உள்ளனர்.

Sunday, October 7, 2012

பெண்களுக்கு மிகவும் பொருத்தமான பழங்கள்

கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது.

தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம்.

அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால் உடனடியாக சுறுசுறுப்பு வரும்.

Saturday, October 6, 2012

காதலுக்கு தாஜ்மகால்! கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு!!

மொகாலய மன்னர் ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கல்லறை காதல் ஓவியமான தாஜ்மஹாலை கட்டினான்.  இதை கட்ட 22 வருடங்கள் ஆனது. காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை 'தாஜ்மஹால்' கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு மாதிரி தாஜ்மஹாலை கட்ட துபாய் கட்டுமானக் கம்பெனி முடிவு செய்துள்ளது.

அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய் நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.

இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு 100 கோடி டாலர் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும்.

துபாயின் இந்த பால்கன் அதிசய நகரமானது, உலக அதிசயங்களாக விளங்கும் பிரமிடுகள், தொங்கும் தோட்டம், ஈபிள் டவர், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் பைசா நகரச் சாய் கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்று கூறப்படுகிறது.

Friday, October 5, 2012

3500 கோடியை நிறுத்திவிட்டு! 1400 கோடியை நிருத்தக்கூடாதாம்!?

கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக இந்த போராட்டம் நடக்கிறது. (இன்றைய செய்தி)

1.75 லட்சம் கோடி,1 .86 லட்சம் கோடி இதை எல்லாம் ஊழல் மூலம் பெற்றும் ,இழந்தும் இருக்கும் இந்த அரசு மக்களின் உயிரை பறிக்கும் அபாயம் உள்ள அணு உலையே நிறுவிய 13000 கோடியே இந்த மக்களுக்காக இழந்தால் என்ன ஆகப்போகிறது. நம் நாட்டின் வளர்ச்சி இதை இழந்தால் கெடாது. நீங்கள் ஊழல் செய்வதை நிறுத்தி, நாட்டில் நடக்கும் ஊழலையும் தடுத்தாலே நம் நாடு நல்ல வளர்ச்சி அடையும். முடியுமா? உங்களால்..? தகுதி உண்டா..?

கூடன்குளம் போராட்டத்தினால் தான் தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலவுகிறது என்று கூறுகிற அதிமேதாவிகள். ஈ வி கே எஸ் இளங்கோவன்,நாரயணாசாமி,ஞானதேசிகன்,சிதம்பரம் கருணாநிதி,ஜெயலலிதா, ராமகோபாலன், பொன்ராதகிருஷ்னண் அவர்களிடம் ஒரு கேள்வி :

போராட்டதை இப்பொழுதே நிறுத்திக்கொள்ள தயார் அணு உலை செயல்பட தொடங்கியபின் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருந்தால்,..? நீங்கள் யாரும் இந்தியாவிலேயே இருக்க மாட்டோம் என்று உத்திரவாதம் தர தயாரா.?!!

தமிழ்நாட்டில் மின் பற்றாகுறை 3500.. மெகவாட் கூடன்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் மின்சாரம் 60. மெகா வாட் என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிக்கை கொடுத்துள்ளது.

நமது கேள்வி:  கூடங்குள அணு உலைக்கு 1400 கோடி சிலவு செய்தாகிவிட்டது நிறுத்தமுடியாது உயர் நீதி மன்றம்!! அப்போ..! 3500 கோடி சிலவு செய்துவிட்ட சேதுசமுத்திர திட்டத்தை (பரதேசி இராமர் பாலம்) மட்டும் நிறுத்தலாமா?

Thursday, October 4, 2012

கவிஞர் தாமரைக்கு பிடித்த தமிழ் ஹீரோ

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘மாற்றான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

மாற்றான் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பாடலாசிரியர் கவிஞர் தாமரை பேசுகையில் ” சூர்யாவிற்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த இசையில் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் கற்பனை செய்துகொண்டே தான் ’யாரோ யாரோ’ பாடலை எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது” என்று கூறினார்.

Wednesday, October 3, 2012

கூகுளை எதிர்த்து கோதாவில் இறங்கிய ஈரான்!!

டெஹ்ரான்: இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

Tuesday, October 2, 2012

உணவு மூலம் உடல் ஆரோக்கியம் அழகும் பெற!!

இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளங்கள்.

* உடல் எடையை குறைக்க சிறந்த பொருளான இந்த தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியுன் அளவை கரைத்துவிடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. அதிலும் இந்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சூப் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், டயட்டிற்கு டயட் ஆகவும் இருக்கும். மேலும் தக்காளியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். ஆகவே எடை எளிதில் குறையும்.

* இந்த சூப் சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியால் செய்யப்படுவதால், புற்றுநோய்க்கு சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

* உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும். அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது நல்லது.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்கள் ஆரோகக்கியமாக வாழ தக்காளி சூப்பை குடித்தால், உடலில் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு பௌல் தக்காளி சூப்பை குடிப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், புகை பிடிப்பதால் உடலை அழிக்கும் பொருளான கார்சினோஜென்னின் சக்தியை குறைத்துவிடுகிறது.

* தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால், சருமம் நன்கு அழகாக, பட்டுப் போன்றும், முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும். அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.

எனவே, தக்காளி சூப் நல்லதா கெட்டதா என்று நினைத்து எதற்கும் பயப்படாமல், இனிமேல் சந்தோஷமாக விரும்பி குடித்து வாருங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகும் பெறும்.

Monday, October 1, 2012

கரையோடிப்போன காவல்துறைக்கு கடிவாலமிடுவது யார்!?

புதுடெல்லி: போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாதம், தேச துரோகம் தொடர்பான வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி கான்ஸ்ட்யூசன் க்ளப்பில் வைத்து கடந்த செப்டம்பர் 28,29 தேதிகளில் ‘ஜோடிக்கப்பட்ட வழக்குகள் மீதான மக்கள் விசாரணை’ (‘people’s hearing on fabricated cases’) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட நபர்களின் வாதங்களை கேட்ட பிறகு முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், டாக்டர் பினாயக்சென், டாக்டர் ராம் புன்யானி, அஜித் ஸாஹி, ஸபா நக்வி ஆகியோர் அடங்கிய மக்கள் நீதிமன்றம் போலி ஆவணங்களை ஜோடித்து வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது.

மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற டாக்டர் பினாயக் சென் கூறியது: “நாட்டில் அனைத்து சிறுபான்மையின மக்களும் வேட்டையாடப்படுகின்றார்கள். உலகமயமாக்கல், கார்ப்பரேட் மயமாக்கல் தொடர்பாக இந்தியாவில் ஏராளமான மோதல்கள் நடக்கின்றன. இத்தகைய விவகாரங்களில் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தீர்வு காண முயலவேண்டும். ஜனநாயக விழுமியங்களை கைகழுவும் அரசு, மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து கூட்டமாக வெளியேற்றி நிலையான வறுமையின் பால் தள்ளிவிடுகிறது. இது தொடர்ந்தால் இனப்படுகொலைக்கு இணையான சம்பவங்கள் அரங்கேறும்.

பிரபல சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ராம் புன்யானி கூறியது: “பொய்வழக்குகளை ஜோடிக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் ஒவ்வொரு தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க தேசிய மனித உரிமை கமிஷன் சிறப்பு டெஸ்கை நிறுவவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம்என்ற பிரச்சாரம் வரலாற்றுரீதியான முட்டாள்தனமாகும். ஒரு மத பிரிவினரின் நாகரீகத்தின் மீதான தலையீடாகும்” என்றார் ராம்புன்யானி.

பிரபல பத்திரிகையாளர் அஜித் ஸாஹி கூறியது: “பல காரியங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் அரசுத் துறைகள் பொய்யான வழக்குகளை ஜோடிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை சீர்குலைக்க மக்களை பீதிவயப்படுத்தும் முயற்சிகளே இவை.” என்று அஜித் ஸாஹி கூறினார்.

தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பான பொய் வழக்குகளை ஜோடிக்கப்படுகின்றன. இதன் பெயரால் போலி என்கவுண்டர்கள் நடந்தேறுகின்றன. குறிப்பிட்ட மதப் பிரிவினரை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர் என்று மக்கள் நீதிமன்றம் கூறியது.

நிரபராதிகளை கைது செய்யும் போலீசாருக்கு சுதந்திரமாக இயங்கும் வாய்ப்பை அளிக்கும் வகையில் நீதிபீடத்தின் புறத்தில் இருந்து துயரமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் அரசின் இத்தகைய தரம் தாழ்ந்த செயல்களை குறித்து பரிசோதித்து, இத்தகைய காரியங்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது சுமத்தவேண்டும்.

(போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாத வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் (குஜராத்) முகமூடியை கிழித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்., H.L. DATTU மற்றும் C.K. PRASAD)

இத்தகைய ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் விபரங்களை பதிவுச்செய்து ஒன்றாக்க வேண்டும். பொய் வழக்குகளில் சிக்கியவர்களை விடுவிக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் விடுதலையாகும் வரை அவ்வழக்குகளை நடத்தவேண்டும். வழக்குகளை உயர்நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தேசத்துரோகம், தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை நடத்த தேசிய-மாநில மனித உரிமை கமிஷனின் கீழ் தனியாக பிரிவு ஒன்றை நிறுவவேண்டும். இவ்வழக்குகளை சர்வதேச சிவில் ஃபாரம்களுக்கு கொண்டு செல்லவேண்டும். போர் ஒழுக்கங்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை இதில் பிரயோகிக்கலாமா? என்பது குறித்து ஆராயவேண்டும்.

UAPA, POTA போன்ற தீவிரவாத-தேசத்துரோக குற்றங்களை சுமத்தும் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும். கலவரத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு பாரபட்சமில்லாமல் சிகிட்சை வசதிகள் கிடைப்பதற்கு இந்தியன் ரெட்க்ராஸ், ஐ.சி.ஆர்.சி ஆகியன அமல்படுத்தும் உடன்படிக்கை போன்ற சட்டநடைமுறைகளை மனித உரிமை அமைப்புகள் உருவாக்கவேண்டும். போலி என்கவுண்டர்கள், காணாமல் போகுதல், கஸ்டடி கொலைகள் ஆகியவற்றைக் குறித்த பொறுப்புணர்வு அரசுக்கு ஏற்படவேண்டும் உள்ளிட்ட சிபாரிசுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதிகள் சிபாரிசுச் செய்தனர். இந்நிகழ்ச்சியை 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடுச் செய்தன.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!