Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 25, 2011

இந்தியரை நாடு கடத்தும் முயற்சி தற்காலிக நிறுத்திவைப்பு, அமெரிக்கா!

வாஷிங்டன் : இந்தியாவைச் சேர்ந்தவர் மந்தீப் சகால். கலிபோர்னியாவில் மருத்துவம் படித்து வருகிறார். இவரும், இவரது தாயார் ஜகதீஷ் கவுரும், 1997ல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததை அறிந்த அமெரிக்க அதிகாரிகள், சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்கும்படி அமெரிக்க அரசிடம், ஜகதீஷ் கவுர் மனு அளித்தார். இது தொடர்பான விசாரணை, ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. அரசியல் தஞ்சம் அளிக்க முடியாது என, அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜகதீஷ் கவுர், கடந்தாண்டு கைது செய்யப்பட்டார். உடல்நல பிரச்னை காரணமாக, பின்னர் விடுவிக்கப்பட்டார். இருந்தாலும், ஜகதீஷ் கவுரும், மந்தீப் சகாலும், அமெரிக்க அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இருவரையும் இந்தியாவுக்கு ஜூன் 22 க்குள் நாடு கடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, மந்தீப் சகாலின் நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர், நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என, பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், நாடு கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்க அரசு, இந்த விவகாரத்தில் ஒரு முடிவை அறிவித்தது. இதன்படி, ஜகதீஷ் கவுரையும், மந்தீப் சகாலையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அரசு அறிவித்தது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!