கராச்சி, பிப்.10 : உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்கச் செய்வதே லட்சியம் என பாகிஸ்தானின் புதுமுக வீரர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் நீக்கப்பட்டார். இதையடுத்து அவருக்குப் பதிலாக இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத புதுமுக வீரரான ஜூனைத் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து இளம் வீரர் ஜூனைத் கான் கூறியது.
உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு இப்போது நனவாகியுள்ளது. உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் டெண்டுல்கருக்கு எதிராக பந்துவீசி அவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியம். எந்த இளம் வீரருக்குமே டெண்டுல்கரின் விக்கெட் என்பது பெரிய பரிசுதான்.
ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது பற்றி தெரியாது. வாய்ப்பு கிடைத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார்.
0 comments :
Post a Comment