பூஸ்டன்: அமெரிக்காவில் , சுகாதாரத்திட்டம் என்ற பெயரில் பணமோசடி செய்ததாக அமெரிக்கவாழ் இந்திய டாக்டர், அவரது மனைவி ஆகியோருக்கு கோர்ட் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 43 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அருண்சர்மா(56). இவரது மனைவி கிரண்சர்மா. இவர்கள் அங்குஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் பல்வேறு சுகாதார திட்டம் நடத்தி பொதுமக்களிடம் ஏராளமானோரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெக்சாஸ் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது.இதில் அருண்சர்மாவுக்கு 15 ஆண்களும், மனைவி கிரண்சர்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 43 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இது குறித்து டெக்சாஸ் மாகாண அட்டர்னி ஜெனரல் ஜோஸ்ஏஞ்சல் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் போலியான சுகாதார திட்டத்தினை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் சோதனையிட்டதில் மோசடிய மூலம் 8 லட்சம் டாலர் அளவிற்கான கரன்சிகளும், முக்கிய ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்றார்.
0 comments :
Post a Comment