சென்னை : மின் தடை குறித்த புகார்களை பதிவு செய்த பின், அந்த புகாருக்கு சேவை சரி செய்த தகவலை எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி பரிசோதனை முறையில் செயல்படும்' என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு, சென்னை மின் வினியோக லைனியில், ஏதாவது பழுது ஏற்பட்டியிருப்பின், அந்த தகவலையும், பழுது பார்ப்பு சரி செய்து மீண்டும் மின் வினியோகம் திரும்பக் கொடுக்க இயலக் கூடிய நேரத்தையும் ஐ.வி.ஆர்.எஸ் மற்றும் சிறு தகவல் சேவை மூலம் மின் நுகர்வோருக்கு தெரியப்படுத்தும் கூடுதல் வசதி துவங்கப்பட உள்ளது.
மின் நுகர்வோர்கள் பதிவுச் செய்யும் புகார்கள் மின் சேவை சரி செய்த பின், அது குறித்த தகவல் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமும், தொலைபேசி எண்களுக்கு ஐ.வி.ஆர்.எஸ்., மூலமும் தெரியப்படுத்தும் வசதியும் செயல்படும். மின் நுகர்வோர்கள் தங்கள் தொலைபேசி எண்னை கேட்கும் போது கொடுத்து, பொதுத் தகவல் பதிவினை மேம்படுத்த உதவ வேண்டும்.
இந்த மேம்படுத்தப்பட்ட கனிணி மையம் பரிசோதனை முறையில் இன்று முதல் 19ம் தேதி வரை செயல்படும். இந்த காலத்தில், மின் நுகர்வோர்கள் புகார்களை பதிவு செய்வதில், சில குறைபாடுகள் ஏற்பட்டால், மின் வாரிய தலைவர் பிரிவு சிறப்பு தொலைபேசி எண்களான 28524422, 28521109 ல் தொடர்புக் கொள்ள வேண்டும். அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment