Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 19, 2011

சினி கலைஞர்களை கடிந்துகொள்ளும் சினிமா கலைஞர்(ருக்காக)

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற நடிகர், நடிகைகளில் சிலர் பாதியில் எழுந்து போனதற்கு தி.மு.க., உறுப்பினருமான, நடிகையுமான குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட 76 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கினார் முதல்வர் கருணாநிதி. விழாவில் விருதை பெற்று கொண்ட நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட சிலர் நடிகர், நடிகையர் விழா முடியும் முன்னரே பாதியில் எழுந்து போனார்கள். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு நடிகை குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமது கண்டனத்தில் குஷ்பூ கூறியுள்ளதாவது, விழா நடந்தபோது மேடையில் நானும் இருந்தேன், அப்போது விருதுபெற்ற நடிகர், நடிகையர் சிலரின் இருக்கைகள் காலியாக இருந்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சியானேன். பெரியவர்கள் பலர் அமர்ந்திருந்த மேடையில் அவர்கள் இவ்வாறு செய்தது மரியாதைக்குரிய செயல் அல்ல. வேறுசில நிகழ்ச்சி இருந்ததால் நாங்கள் சென்றுவிட்டதாக அவர்கள் கூறலாம்.

87வயதான் ஒரு மாமனிதர் மற்றும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதி அவர்கள் பல வேலைகளுக்கும் மத்தியிலும் இந்த நிகழ்ச்சி முடியும் வரை பங்கேற்று இருக்கிறார், அவர்களால் உட்கார முடியாதா என்ன? இதனை தி.மு.க., உறுப்பினராக நான் சொல்லவில்லை, நானும், ஒரு சினிமா கலைஞராகத்தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!