Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 14, 2011

முதல்வருக்கு பிடித்த நடிகை?

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட திரைத்துறையின் இதயம் பட்டத்தை நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். சமீபத்தில் திரைக்கு வந்த இளைஞன் படத்திற்கு முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதியிருந்தார்.

மார்ட்டின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் நாயகனாக பாடலாசிரியர் பா.விஜய்யும், நாயகியாக ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மீன் ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகைகள் குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு சிறந்த வசனம் எழுதியமைக்காக முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தா விருது வழங்க நாக்பூர் திரைப்பட விழா குழுவினர் முடிவு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பிய அவர்கள், விழாவின்போது திரைத்துறைக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வரும் கருணாநிதிக்கு, திரைத்துறையின் இதயம் என்ற பட்டத்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதி தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால், தன் சார்பில் நடிகை குஷ்புவையும், டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவையும் விழாவுக்கு அனுப்பி வைத்தார். திரைத்துறையின் இதயம் பட்டத்தையும், சிறந்த வசனகர்த்தா விருதையும கருணாநிதிக்காக நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். அந்த விருது மற்றும் பட்டத்தை கருணாநிதியிடம் குஷ்பு வழங்கினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!