Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, February 14, 2011

ஆணா, பெண்ணா? தெரிந்து கொள்ள துபாய் செல்லும் இந்தியர்கள்!

இந்தியாவில், ஆண், பெண் பிறப்பு விகிதத்தில் ஏற்றத் தாழ்வு நிலவி வருகிறது. ஆயிரம் ஆண்களுக்கு 913 பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கின்றனர். கிராமப்புறங்களில், வறுமையின் காரணமாக, பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்துவிடுவதும் ஒரு காரணமாக உள்ளது. எனவே, கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து, பெற்றோரிடம் சொல்ல, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இணைய தளங்களில், வரும் கவர்ச்சியான விளம்பரங்களைப் பார்த்து, மும்பையைச் சேர்ந்த இளம் பெற்றோர், துபாய்க்குச் சென்று பாலினச் சோதனை செய்து கொள்கின்றனர். மும்பையிலிருந்து துபாய்க்குச் செல்ல விமானக் கட்டணம், ஒரு நபருக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே ஆகிறது. அங்கு பாலினத்தை தெரிந்து கொள்வது தொடர்பான பரிசோதனைகளுக்கு, அதிகபட்சமாக ரூ. 1,500 செலவாகிறது. எனவே, துபாய்க்கு சுற்றுலா செல்வது போல, எளிதாக சென்று பரிசோதனை செய்துக் கொண்டு திரும்புகின்றனர்.

இது குறித்து மும்பையைச் சேர்ந்த டாக்டர்கள் கூறியதாவது: இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சொல்வதற்கு தடை உள்ளதால், பெற்றோர் துபாய் சென்று, அங்கு சோதனை செய்து தெரிந்து கொள்கின்றனர். பெண் கர்ப்பமடைந்த ஏழாவது வாரத்தில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் தெரியத் தொடங்கும்.

இந்தியாவில் கரு உருவாகி 20 வாரத்திற்குள் கருவை கலைத்துக் கொள்ள, சட்டப்படி அனுமதி உண்டு. 20 வது வாரத்தைக் கடந்து கருவைக் கலைத்தால், சிசுக் கொலை தடுப்புச் சட்டத்தின் கீழ், தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. எனவே, துபாயில், மருத்துவச் செலவு குறைவாக இருப்பதாலும், அங்குச் சென்று மகப்பேறு தொடர்பான சிகிச்சை கருக்கலைப்பு, பாலினத்தை தெரிந்து கொள்ளுதல் போன்றவற்றிற்காக இந்தியர்கள் அங்குச் செல்லத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான விளம்பரங்கள் இணையதளங்களில் ஏராளமான வலம் வரத் தொடங்கியுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!