Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 12, 2011

காலிறுதிக்குப்பிறகு சவால்! இந்தியாவுக்கு

இந்தியா தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே உலகக் கோப்பையை வெல்ல முடியும்.

ஒருநாள் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. நாம் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.

இப்போதுள்ள இந்திய அணி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள், சிறந்த பேட்ஸ்மேன்கள் என சமபலம் நிறைந்த அணியாக உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம்.

உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டால், அதன்பிறகு நடக்கக்கூடிய ஆட்டங்களில் அபரிமிதமான நம்பிக்கையோடு களமிறங்கக்கூடாது. இப்போதுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, அதேசமயம் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும்போது நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தோனி தலைமையிலான இந்திய அணி பல தொடர்களை வென்றுள்ளது.

இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும். தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறந்த மேட்ச் வின்னர்கள். முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்தாலும், பின்வரிசையில் களமிறங்கும் யூசுப் பதான், ஆட்டத்தை தன்வசமாக்கும் திறமை படைத்தவர்.

ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசுவார்கள். சுழற்பந்துவீச்சுக்கு ஹர்பஜன் உள்ளார். அவர் இல்லாத பட்சத்தில் அஸ்வின் உள்ளார். அவர் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். சேவாக், ரெய்னா, யூசுப் பதான் ஆகியோரும் ஆப் ஸ்பின் வீசக்கூடியவர்கள்.

1983-ம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணியோடு, இப்போதைய இந்திய அணியை ஒப்பிட்டும்போது அப்போதைய அணியை விட இப்போதைய அணி அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த அணி.

இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. பாகிஸ்தானும் கடுமையாகப் போராடும்.

இந்தியா கோப்பையை வெல்லும் என எல்லாரும் தொடர்ந்து கூறி வருவதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆயினும் லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு பெரிய அளவில் சவால் இருக்காது. காலிறுதியில் இருந்துதான் அனைத்து அணிகளுக்கும் சவால் ஆரம்பிக்கும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!