கொழும்பு : எகிப்து நிலை இலங்கைக்கு வராது என்று அதிபர் ராஜபட்ச கூறியதாக "திவயின" என்னும் சிங்கள நாளிதழின் முதன்மை ஆசிரியரிடம் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தனக்கு புற்றுநோய் இல்லை என்றும், தான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அந்த மூத்த பத்திரிகையாளருக்கு ராஜபட்ச தனிப்பட்ட பேட்டி அளித்ததாகவும், அப்போது மேற்கண்ட கருத்தை தெரிவித்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் குழப்பங்களை விளைவிக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் எகிப்தின் நிலை இலங்கையில் வர அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜபட்ச கூறியதாக இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.
இப்போதே பயந்தால் எப்படி இதைவிட அதிகம் வரும். பொறுத்திரு?
0 comments :
Post a Comment