Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 10, 2011

பல்லுக்கும் இருதயத்துக்கும் தொடர்பு? பார்க்கலாம் வாங்க.

தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும். பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல்துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள் வருமாறு, மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன., இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது.

இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்., தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது. இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை.

பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.

Reactions:

1 comments :

பாஸ்!
உருப்படியான பதிவு.

இந்த கமெண்டை வைப்பிங்களோ தூக்குவிகளோ? இந்த தகவலை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

ஜோதிடத்தில் சூரியன் பல்,இதயத்துக்கு காரகர் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இதற்கு ஆதாரமாக இந்த தகவலை எழுதியிருந்தேன்.

சினிமா, அரசியல் (இதுல பதிவுலக அரசியல் வேற) அப்பாற்பட்டு எழுதறவுக உண்டுனு நிரூபிக்க உங்களை போல சிலர் இருக்கிங்க வாழ்த்துக்கள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!