Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 16, 2011

அடுத்து களமிறங்கும் கமலின் 2வது மகள்!

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் சினிமாவில் நடிக்கப் போகிறார். கமல் - சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார்.

அக்கா ஸ்ருதியைப் போலவே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பர்ஸானியா படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பாலிவுட்டில். சமீபத்தில் அவர் நடித்த இரண்டாவது இந்திப்படம் ரிலீசானது. இரண்டுமே படுதோல்வியடைந்தது.

பாலிவுட்டைப் பொறுத்தவரை லக் இல்லாதவராக கருதப்பட்டு வரும் ஸ்ருதி இப்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அக்காவின் இடத்தை நிரப்ப பாலிவுட்டில் நுழையும் அக்ஷரா அங்கு ஜெயிப்பாரா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!